பிஎஸ்பிடிஏ (BSBDA) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பேசிக் சேவிங் பேங்க் டெபாசிட் அக்கவுண்ட் (Basic Savings Bank Deposit Account) மற்றும் சேவிங் பேங்க் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கான புதிய விதிகள் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.
இதில் 7 மாற்றங்கள் இருக்கின்றன. ஆர்பிஐ (RBI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (Reserve Bank of India) இந்த விதிகளை பேங்குகளுக்கு நிர்யணம் செய்துள்ளது. இந்த 7 மாற்றங்களிடன்படி ஏப்ரல் 1, 2026 முதல் பேங்க் பரிவர்த்தனைகள் நடக்க இருக்கின்றன.

என்னென்ன மாற்றங்கள் வருகிறது?
1. எந்தவொரு வழியிலும் அன்லிமிடெட் டெபாசிட் செய்து கொள்ளலாம். இலவச கேஷ் டெபாசிட்டி செய்யலாம். அதாவது, டிஜிட்டல் பரிவர்த்தனைகள் போன்ற ஆன்லைன் பரிவர்த்தனைகள், செக் டெபாசிட், நேரடியாக கேஷ் டெபாசிட்டி போன்றவற்றை பேங்க் கஸ்டமர்கள் இலவசமாக செய்து கொள்ளலாம்.
2. ஏடிஎம் கார்டுக்கு விதிகப்படும் வருடாந்திர கட்டணங்கள் கிடையாது. ஏடிஎம் கம் டெபிட் கார்டு (ATM cum Debit Card) பயன்பாட்டுக்கும் வருடாந்திர கட்டணங்கள் கிடையாது. டெபிட் கார்டு வைத்து பில் செலுத்துதல், ஏடிஎம் மெஷனில் பணம் எடுத்தல் உள்ளிட்டவை இதில் பொருந்தும்.
3. ஒரு வருடத்துக்கு குறைந்தது 25 காசோலைகளை (Cheques) கொண்ட செக் புக் (Cheque Book) கொடுக்கப்பட்டுவிடும். இதில் பேங்க் கஸ்டமர்கள் பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம். இந்த செக் புக் இலவமாக கொடுக்கப்படும். இதற்காக கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படாது.
4. பேங்குகள் அதனுடயை ஆப்கள் மற்றும் வெப்சைட் வழியாக மொபைல் பேங்கிங் மற்றும் இன்டர்நெட் பேங்கிங் சேவைகளை கஸ்டமர்களுக்கு கொடுக்கிறது. இந்த பேங்க் அக்கவுண்ட் வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கும், இதே சேவைகள் கொடுக்கப்படும். முற்றிலும் இலவமாக கொடுக்கப்படும்.
5. பேங்க் பரிவர்த்தனைகளை செய்யும்போது, அது பாஸ்புக்கில் பதிவு செய்யப்படும். அதேபோல மாதாந்திர கணக்கு அறிக்கைகள் (Monthly Account Statements) கொடுக்கப்படும். இந்த அக்கவுண்ட் வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கும் இந்த பாஸ்புக் மற்றும் மாதாந்திர கணக்கு அறிக்கைகள் இலவமாக கிடைக்கும்.
6. ஏடிஎம் கார்டு மற்றும் அதுதொடர்பான பரிவர்த்தனைகள் உட்பட மாதத்திற்கு குறைந்தபட்சம் 4 முறை இலவசமாக பணத்தை எடுத்து கொள்ளலாம். இது மினிமமாக பேங்க் கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இதற்காக எந்த கட்டணங்களும் கஸ்டமர்களுக்கு கிடையாது.
7. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செய்யும்போது எந்தவொரு மாதாந்திர லிமிட்டும் கிடையாது. இதில் கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ ஆப்கள் வழியாக பரிவர்த்தனைகள் மட்டுமல்லாமல், நெப்ட் பரிவர்த்தனைகள், ஆர்டிஜிஎஸ் பரிவர்த்தனைகள், ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளுக்கும் அடங்கும்.
மேலும், பேங்குகள் அதனுடைய கஸ்டமர்களிடம் ஏடிஎம் கார்டுகள், செக் புக்குகள் அல்லது டிஜிட்டல் பேமெண்ட் தேவைகளில் எதை பயன்படுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. பேங்க் கஸ்டமர்களின் கோரிக்கையின் பேரில் மட்டுமே இதுபோன்ற சேவைகள் கொடுக்கப்படும்.
பிஎஸ்பிடி அக்கவுண்ட் என்றால் என்ன? எஸ்பிஐ, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ போன்ற எந்த பேங்குகளாக இருந்தாலும், பேசிக் சேவிங் பேங்க் டெபாசிட் அக்கவுண்ட் (Basic Savings Bank Deposit Account) அல்லது பிஎஸ்பிடிஏ (BSBDA) சேவையை கொடுக்க வேண்டும். இது குறைந்தபட்ச பரிவர்த்தனைகளுக்காக கிடைக்கிறது.
கேஓய்சி மற்றும் ஏஎம்எல் விதிகளின்படி கொடுக்கப்படுகிறது. ஒரு வருடத்துக்கு குறிப்பிட்ட லிமிட்டில் மட்டுமே பரிவர்த்தனைகளை செய்ய முடியும். ஆனால், ஒட்டுமொத்த சேவைகளும் இலவசமாக கிடைக்கும். மினிமம் பேலன்ஸ் கிடையாது. சேவைகளுக்கு கட்டணங்கள் கிடையாது.
ஆனால், ஒரு பேங்க் கஸ்டமருக்கு ஒரேவொரு பேசிக் சேவிங் பேங்க் டெபாசிட் அக்கவுண்ட் மட்டுமே வைத்திருக்க முடியும். ஏனென்றால், இது முற்றிலும் இலவமாக கிடைக்கும் அக்கவுண்ட்டாக இருக்கிறது. உங்களது சேவிங் பேங்க் அக்கவுட்டை கூட பேசிக் சேவிங் பேங்க் டெபாசிட் அக்கவுண்ட்டாக மாற்ற முடியும்.
இதை ஆன்லைன் மூலமாகவும் செய்யலாம், நேரடியாக பேங்குகளுக்கு சென்றும் எழுதி கொடுக்கலாம். இதை 7 நாட்களுக்குள் பேங்குகள் செய்து முடிக்கும். இந்த 7 விதிகளும் அடுத்தாண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கொண்டுவரப்பட இருக்கிறது. ஆகவே, புதிய பிஎஸ்பிடிஏ கஸ்டமர்களுக்கும் இது பொருந்தும்.
Credit: Gizbot
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications