புது PAN ரூல்ஸ்.. ரூ.1000 பெனால்டி.. ரூ.50000 மேல போகாது.. ஜன.1 ரூல்ஸ் யாருக்கு.. யாருக்கு இல்ல.. இதை பாருங்க!

ஆதார் கார்டுடன் இணைக்கப்படாத பான் கார்டுகளுக்கு மட்டுமே ரூ.1000 பெனால்டி மற்றும் பேங்க் அக்கவுண்ட் மூலம் ரூ.50,000 பணத்துக்கு மேல் அனுப்ப முடியாமல் போக இருக்கிறது. ஆனால், பான் கார்டே இல்லாமலும், ரூ.50,000 பணத்துக்கு மேல் பேங்க் அக்கவுண்ட் மூலம் அனுப்ப முடியாது. ஆகவே, புதிய பான் கார்டு அப்ளை செய்வது எப்படி என்பதை இப்போது கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

பான் கார்டு அப்ளை செய்ய முதலில் ஆதார் கார்டு மற்றும் அந்த கார்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் இருக்க வேண்டும். இதை அப்ளை செய்யும்போது, மைனராக இருக்கக் கூடாது. ஆதார் ஈ-கேஒய்சி செய்யப்பட்டு ஈ-பான் கார்டு கொடுக்கப்படும். இப்போது, எப்படி அப்ளை செய்வது என்பதை படிப்படியாக தெரிந்து கொள்ளலாம்.


புது PAN ரூல்ஸ்.. ரூ.1000 பெனால்டி.. ரூ.50000 மேல போகாது.. ஜன.1 ரூல்!

1. ஈ-பில்லிங் போர்ட்டலுக்கு (e-Filing portal) செல்லுங்கள். ஹோம் பேஜ்ஜில் இருக்கும் இன்ஸ்டன்ட் ஈ-பான் (Instant e-PAN) விருப்பத்தை கிளிக் செய்து கொள்ளுங்கள். இந்த ஈ-பான் பேஜ் ஓப்பன் செய்யப்பட்ட புதிய ஈ-பான் (New e-PAN) விருப்பம் தோன்றும். அதை கிளிக் செய்து ஓப்பன் செய்து கொள்ளுங்கள்.

2. இப்போது, ஆதார் கார்டில் இருக்கும் 12 டிஜிட் நம்பர் கேட்கப்படும். இதை சரியாக கொடுத்துவிடுங்கள். பிறகு நான் அதை உறுதி செய்கிறேன் (I confirm that) என்னும் செக்-பாக்ஸை டிக் செய்து கொள்ளுங்கள். அடுத்து தொடரவும் (Continue) விருப்பத்தை கிளிக் செய்து கொள்ளுங்கள். இப்போது சிலவற்றை கவனிக்க வேண்டும்.

ஆதார் கார்டு ஏற்கனவே பான் கார்டுக்கு அப்ளை செய்யப்பட்டு இருந்தால், இங்கே கொடுக்கப்பட்ட ஆதார் எண் ஏற்கனவே பான் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று காண்பிக்கப்படும். ஆதார் எந்த மொபைல் நம்பருடனும் இணைக்கப்படவில்லை என்றால், ஆதார் எண் எந்த மொபைல் நம்பருடனும் இணைக்கப்படவில்லை என்று காண்பிக்கப்படும்.

3. இப்படி ஏதும் உங்களது டிஸ்பிளேவில் காண்பிக்கப்படவில்லை என்றால், அடுத்த கட்டத்துக்கு செல்லலாம். இப்போது ஓடிபி வேலிடேஷன் (OTP Validation) தோன்றும். இதில் கொடுக்கப்பட்டிருக்கும் விவரங்களை படித்துவிடுங்கள். பிறகு தொடரவும் (Continue) விருப்பத்தை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

4. இப்போது, உங்களது மொபைல் நம்பருக்கு 6 டிஜிட் ஓடிபி நம்பர் அனுப்பி வைக்கப்படும். இந்த ஓடிபிக்கு 15 நிமிடங்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். அதேபோல 3 முறை மட்டுமே கொடுக்க முடியும். இதை கொடுத்துவிட்டு, தொடரவும் விருப்பத்தை கிளிக் செய்து கொள்ளுங்கள். அவ்வளவுதான் செயல்முறை முடிந்துவிட்டது.

5. ஆதார் கார்டில் கொடுக்கப்பட்ட ஈமெயில் ஐடியை இந்த பான் கார்டுடன் இணைப்பது மற்றும் சரிபார்ப்பது உங்களது விருப்பத்தில் பேரில் நடக்கும். ஒருவேளை ஆதார் கார்டில் ஈமெயில் ஐடி கொடுக்கப்படவில்லை என்றால், ஈமெயில் வெரிபிகேஷனை கிளிக் செய்யவும். இதில் ஈமெயில் விவரங்களை கொடுத்து ஓடிபி பெறவும்.

6. இந்த ஓடிபியை கொடுத்து ஈ-மெயிலை இணைத்து கொள்ளவும். இதை செய்த பிறகு ஒப்புகை எண் (Acknowledgement Number) அந்த ஈமெயிலுக்கு அனுப்பி வைக்கப்படும். அதேபோல மொபைல் நம்பருக்கும் அனுப்பி வைக்கப்பட்டும். இதை எடுத்து வைத்து கொள்ளுங்கள். இப்போது, ஆதார் ஈ-கேஒய்சி செய்ய வேண்டும்.

7. மீண்டும் ஈ-பில்லிங் போர்ட்டலுக்கு செல்லுங்கள். இன்ஸ்டன்ட்-பான் (Instant e-PAN) விருப்பத்தை கிளிக் செய்து கொள்ளுங்கள். இப்போது, அப்டேட் பான் (Update PAN) விருப்பத்தை கிளிக் செய்து கொள்ளுங்கள். இதிலும் ஆதார் நம்பரை கொடுக்க வேண்டும். பிறகு ஓடிபி அனுப்பி வைக்கப்படும். இதை கொடுத்து ஓப்பன் செய்யுங்கள்.

8. இப்போது, ஆதார் கார்டில் கொடுக்கப்பட்ட விவரங்கள் இதில் தோன்றும். நீங்கள் அதையே பயன்படுத்தி கொள்ளலாம். இதில் போட்டோ, பெயர், பிறந்த தேதி, மொபைல் நம்பர், ஈமெயில் உள்ளிட்ட விவரங்கள் இருக்கும். இதை செய்தால் போதும், உங்களது விவரங்கள் வருமான வரித்துறையிடம் பதிவு செய்யப்பட்டுவிடும்.

9. இப்போது, இன்ஸ்டன்ட்-பான் கார்டை டவுன்லோட் செய்ய வேண்டும். ஆகவே, ஈ-பில்லிங் போர்டலுக்கு செல்லுங்கள், இன்ஸ்டன்ட் ஈ-பான் விருப்பத்தை கிளிக் செய்யுங்கள். செக் ஸ்டேட்டஸ் மற்றும் டவுன்லோட் விருப்பதுக்கு செல்லுங்கள். இணைக்கப்பட்டுவிட்டால், டவுன்லோட் செய்யலாம். இல்லையென்றால், ப்ராசஸ் முடிவும்வரை காத்திருக்கலாம்.

Credit: Gizbot

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+