Gold Price today: மாறாத தங்கம் விலை.. நகை பிரியர்கள் சற்று நிம்மதி.. இன்றைய ரேட் என்ன? வெள்ளி விலை அதிரடி சரிவு

சென்னை: தங்கம் விலை (Gold Price) மீண்டும் உச்சம் தொட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் காலை மாலை என இருமுறை தங்கம் விலை உயர்ந்து நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இன்றும் தங்கம் விலை ஒரே அடியாக அதிகரித்து ஒரு லட்சத்தை தொட்டு விடுமோ என நகை பிரியர்கள் அதிர்ச்சியுடன் இருந்த நிலையில் இன்று தங்கம் விலை எந்த வித மாற்றமும் இல்லை. நேற்றைய நிலவரப்படியே விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம் இன்று வெள்ளி விலை அதிரடியாக சரிந்துள்ளது.

தங்கம் விலை நடப்பு ஆண்டில் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. ஜனவரி தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை புது உச்சத்தினை தொட்டு வந்தது. தற்போது இதுவரை இல்லாத அளவாக ஒரு சவரன் ரூ.98,960 ஆக அதிகரித்து உச்சம் தொட்டுள்ளது. கூடிய விரைவில் ஒரு லட்சத்தை தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்ற அளவுக்கு உயர்வு இருந்து வருகிறது.


மாறாத தங்கம் விலை.. நகை பிரியர்கள் சற்று நிம்மதி.. இன்றைய ரேட் என்ன? வெள்ளி விலை அதிரடி சரிவு

மீண்டும் அதிகரிக்கும் தங்கம் விலை

ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடைகள், சீனா - இந்தியா மீதான வரி உயர்வுகள், மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றம் காரணமாக பல்வேறு நாடுகள் தங்கத்தை வாங்கி குவிப்பதன் காரணமாகவும், ஏற்றுமதி, இறக்குமதியை டாலருக்கு பதிலாக தங்கத்தின் அடிப்படையில் நடத்தலாம் என்ற முடிவுக்கு மற்ற நாடுகள் வந்துள்ளதன் காரணமாகவும் தங்கம் விலையானது ஏற்றம் கண்டு வருகிறது.

ரயில்வே வேலைதான் லட்சியமா? தேர்வர்கள் எதிர்பார்த்த அறிவிப்பு.. 2026 ஆண்டு அட்டவணை வந்தாச்சு

கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி (30.09.2025) ஒரு சவரன் தங்கம் ரேட் ரூ. 86,880-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுவே கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி (01.12.2025) ஒரு சவரன் ரூ.96,580-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிட்டத்தட்ட ஒரே மாதத்தில் தங்கம் விலையானது ரூ.10 ஆயிரம் அதிகரித்துள்ளது.

10 நாட்களாக உயராத தங்கம் விலை

எனினும் டிசம்பர் 1 ஆம் தேதியில் இருந்து நேற்று முன் தினம் வரை தங்கம் விலையானது பெரிய அளவில் உயராமல் இருந்தது. அதாவது டிசம்பர் 1 ஆம் தேதியில் ஒரு சவரன் ரூ.96,580 என்ற நிலையில் நேற்று முன் தினமும் ரூ.96,400 என சற்று குறைந்து தான் இருந்தது. கடந்த 11 நாட்களாக தங்கம் விலை பெரிய அளவில் அதிகரிக்காமல் 180 ரூபாய் குறைந்து தான் இருந்த நிலையில் நேற்று திடீரென தாறுமாறாக உயர்ந்துள்ளது.

தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும்.. திருப்பரங்குன்றம் ஊர் பொதுமக்கள் சார்பாக உண்ணாவிரத போராட்டம்

காலை, மாலை என இரு வேளைகளிலும் தங்கம் விலை உச்சம் தொட்டு நகை பிரியர்களை மீண்டும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. நேற்று தங்கத்தின் விலை காலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ஒரு சவரன் ரூ 98,000-க்கும், கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,250-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய தங்கம் ரேட்

பின்னர் மாலையில் மீண்டும் தங்கம் விலை உயர்ந்தது. நேற்று மாலையில் மட்டும் ஒரு சவரன் தங்கம் ரூ.960 உயர்ந்து ஒரு சவரன் 98,960-க்கும், கிராம் ரூ.12,370-க்கும் விற்பனை ஆனது. நேற்று ஒரே நாளில் காலை, மாலை என சவரனுக்கு ரூ.2,560 அதிகரித்துள்ளது நகை பிரியர்களை கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

இன்றும் விலை உயர்ந்தால் தங்கம் விலை எளிதில் ஒரு லட்சத்தை தொட்டு விடும் என நகை பிரியர்கள் கலக்கத்துடன் எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் இன்று தங்கம் விலை எந்த வித மாற்றமும் இல்லாமல் நேற்றைய நிலவரப்படியே விற்பனை செய்யப்படுகிறது. இன்று தங்கம் சென்னையில் ஒரு கிராம் ரூ.12,370-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.98,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை இன்று சரிவு

தங்கம் விலை தான் இப்படி என்றால், வெள்ளி விலை அதற்கு மேல் உயர்ந்து வருகிறது. ஒரு கிராம் 150 ரூபாய் என்று இருந்த வெள்ளி விலை தற்போது தாறுமாறாக உயர்ந்து உள்ளது. நேற்று சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலையானது ரூ 7 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.216க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று வெள்ளி விலை அதிரடி சரிவை சந்தித்துள்ளது. இன்று ஒரே நாளில் வெள்ளி விலை கிராமிற்கு ரூ.6 குறைந்து ஒரு கிராம் ரூ.210-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Kerala Lottery: கேரள லாட்டரியில் யோகம்.. தமிழருக்கு அடித்ததா ரூ.1 கோடி? இடுக்கியில் விழுந்தது முதல் பரிசு

தங்க விலை நிலவரம்:

13.12.2025- ஒரு சவரன் ரூ.98,960 (இன்று)
12.12.2025- ஒரு சவரன் ரூ.98,960 (நேற்று மாலை)
12.12.2025- ஒரு சவரன் ரூ.98,000 (நேற்று காலை)
11.12.2025- ஒரு சவரன் ரூ.96,400
10.12.2025- ஒரு சவரன் ரூ.96,240
09.12.2025- ஒரு சவரன் ரூ.96,000
08.12.2025- ஒரு சவரன் ரூ.96,320
07.12.2025- ஒரு சவரன் ரூ.96,320
06.12.2025- ஒரு சவரன் ரூ.96,320
05.12.2025- ஒரு சவரன் ரூ.96,000
04.12.2025- ஒரு சவரன் ரூ.96,160
03.12.2025- ஒரு சவரன் ரூ.96,480
02.12.2025- ஒரு சவரன் ரூ.96,320
01.12.2025- ஒரு சவரன் ரூ.96,580
30.11.2025 - ஒரு சவரன் ரூ.95,840
29.11.2025 - ஒரு சவரன் ரூ.95,840
28.11.2025 - ஒரு சவரன் ரூ.94,720
27.11.2025 - ஒரு சவரன் ரூ.94,160
26.11.2025 - ஒரு சவரன் ரூ.94,400
25.11.2025 - ஒரு சவரன் ரூ.93,760
24.11.2025 - ஒரு சவரன் ரூ.92,160
23.11.2025 - ஒரு சவரன் ரூ.93,040
22.11.2025 - ஒரு சவரன் ரூ.93,040
21.11.2025 - ஒரு சவரன் ரூ.91,680
20.11.2025 - ஒரு சவரன் ரூ.92,000
19.11.2025 - ஒரு சவரன் ரூ.92,800 (மாலை)
19.11.2025 - ஒரு சவரன் ரூ.92,000 (காலை)
18.11.2025 - ஒரு சவரன் ரூ.91,200
17.11.2025 - ஒரு சவரன் ரூ.92,320
16.11.2025 - ஒரு சவரன் ரூ.92,400
15.11.2025 - ஒரு சவரன் ரூ.92,400
14.11.2025 - ஒரு சவரன் ரூ.93,920
14.11.2025 - ஒரு சவரன் ரூ.94,720
13.11.2025 - ஒரு சவரன் ரூ.95,200
12.11.2025 - ஒரு சவரன் ரூ.92,800
11.11.2025 - ஒரு சவரன் ரூ.93,600
10.11.2025 - ஒரு சவரன் ரூ.91,840
09.11.2025 - ஒரு சவரன் ரூ.90,400
08.11.2025 - ஒரு சவரன் ரூ.90,400
07.11.2025 - ஒரு சவரன் ரூ.90,160
06.11.2025 - ஒரு சவரன் ரூ.90,560
06.11.2025 - ஒரு சவரன் ரூ.90,000
05.11.2025 - ஒரு சவரன் ரூ.89,440
04.11.2025 - ஒரு சவரன் ரூ.90,000
03.11.2025- ஒரு சவரன் ரூ.90,800
02.11.2025- ஒரு சவரன் ரூ.90,480
01.11.2025- ஒரு சவரன் ரூ.90,400
01.11.2025- ஒரு சவரன் ரூ.90,480
31.10.2025- ஒரு சவரன் ரூ.90,400
30.10.2025- ஒரு சவரன் ரூ.90,400
29.10.2025- ஒரு சவரன் ரூ.90,600
28.10.2025- ஒரு சவரன் ரூ.88,600
27.10.2025- ஒரு சவரன் ரூ.91,600
26.10.2025- ஒரு சவரன்: ரூ.92,000
25.10.2025- ஒரு சவரன்: ரூ.92,000
22.10.2025- ஒரு சவரன் ரூ.92,000
21.10.2025 - ஒரு சவரன் ரூ.92,320
21.10.2025 - ஒரு சவரன் ரூ.93,600
20.10.2025- ஒரு சவரன் ரூ.96,000
19.10.2025 - ஒரு சவரன் ரூ.95,360
18.10.2025 - ஒரு சவரன் ரூ.96,000
17.10.2025- ஒரு சவரன் ரூ.97,600
16.10.2025 - ஒரு சவரன் ரூ.95,200
15.10.2025 - ஒரு சவரன் ரூ.94,880
14.10.2025 - ஒரு சவரன் ரூ.94,600
13.10.2025 - ஒரு சவரன் ரூ.92,640
13.10.2025 - ஒரு சவரன் ரூ.92,200
12.10.2025 - ஒரு சவரன் ரூ.92,000
11.10.2025 - ஒரு சவரன் ரூ.92,000
11.10.2025 - ஒரு சவரன் ரூ.91,400
09.10.2025 - ஒரு சவரன் ரூ.91,400
09.10.2025 - ஒரு சவரன் ரூ.91,200
08.10.2025 - ஒரு சவரன் ரூ.91,080
08.10.2025 - ஒரு சவரன் ரூ.90,400
07.10.2025 - ஒரு சவரன் ரூ.89,600
06.10.2025 - ஒரு சவரன் ரூ.89,000
06.10.2025 - ஒரு சவரன் ரூ.89,000
05.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600
04.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600
03.10.2025 - ஒரு சவரன் ரூ.87,200
03.10.2025 - ஒரு சவரன் ரூ 86,720
02.10.2025 - ஒரு சவரன் ரூ 87,600
02.10.2025 - ஒரு சவரன் ரூ 87,040
01.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600
01.10.2025 - ஒரு சவரன் ரூ.87,120
30.09.2025 - ஒரு சவரன் ரூ. 86,880.

Credit: Oneindia

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+