சென்னை: தங்கம் விலை (Gold Price) கடந்த இரு நாட்களாக குறைந்து வந்தது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,600 குறைந்து இருந்தது நகை பிரியர்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்து இருந்தது. இதனால் இன்றும் தங்கம் விலை குறையுமா என எதிர்ப்பார்த்த நகை பிரியர்களுக்கு அதிச்சியே மிஞ்சியது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரு.1,280 அதிகரித்துள்ளது.
தங்கம் விலை கடந்த ஆண்டில் இருந்தே கடுமையாக உயர்ந்து நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தது. கடந்த ஆண்டில்தான் இப்படி என்றால் இந்த ஆண்டிலும் விலை தொடர்ந்து உச்சத்தை நோக்கி அதிகரித்து வருகிறது.

உச்சம் தொட்ட தங்கம் விலை
சென்னையில் கடந்த மாதம் 29-ந் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ. 1.34 லட்சத்திற்கு விற்பனையாகி வரலாற்று சாதனை படைத்தது. அதன் பிறகு தங்கம் விலை குறைய தொடங்கியது. விலை குறைந்தது கடந்த 2-ந் தேதி ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 600-க்கு விற்கப்பட்டது.
தங்கம் விலையின் இந்த வரலாறு காணாத விலை ஏற்றத்திற்கு சர்வதேச அளவில் ஏற்பட்ட போர் சூழல், பொருளாதார நெருக்கடி ஆகியவை காரணமாக சொல்லப்படுகிறது. ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடைகள், சீனா - இந்தியா மீதான வரி உயர்வுகள், மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றங்கள் போன்றவையால் அனைத்து நாடுகளும் பாதுகாப்பான முதலீடாக கருதி தங்கத்தை வாங்கி குவிக்கின்றன.
இரண்டு நாட்களாக சரிவு
இதனால் தங்கம் விலையில் ஏற்றம் இருந்து வருகிறது. கடந்த இரு தினங்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது. நேற்று முன் தினம் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,16,800 ஆக குறைந்தது. நேற்று 2-வது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளது. நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.1,15,200-க்கு விற்கப்படுகிறது. 2 நாட்களில் சவரனுக்கு ரூ.3,120 குறைந்து உள்ளது.
நேற்று தங்கம் கிராமுக்கு ரூ.200 குறைந்து ரூ.14 ஆயிரத்து 400-க்கு விற்பனையானது. தங்கம் விலை தாறுமாறாக எகிறிய நிலையில், கடந்த 2 நாட்களாக சரிந்து வருவது நகை பிரியர்களுக்கு கொஞ்சம் ஆறுதலை கொடுத்து இருந்தது. ஆனால் இன்று அப்படியே நிலைமை மாறியுள்ளது.
இன்றைய ரேட் என்ன?
மீண்டும் தங்கம் விலை எகிறத் தொடங்கி இருக்கிறது. அதாவது இன்று ஒரே நாளில் சவரனுக்கு சென்னையில் ரூ.1,280 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,16,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.160 அதிகரித்து ரூ.14,560-க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
இரண்டு நாட்களாக குறைந்த தங்கம் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வெள்ளி விலை எந்த வித மாற்றமும் இன்றி இன்றும் ஒரு கிராம் ரூ.280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் தங்கம் விலை:
14.02.2026 - ஒரு சவரன்ரூ.1,16,800 (இன்று)
13.02.2026 - ஒரு சவரன் ரூ.1,15,200 (நேற்று)
12.02.2026- ஒரு சவரன் ரூ.1,16,800
11.02.2026 - ஒரு சவரன் ரூ.1,18,320
11.02.2026 - ஒரு சவரன் ரூ.1,16,800
10.02.2026 - ஒரு சவரன் ரூ.1,16,640
09.02.2026 - ஒரு சவரன் ரூ.1,17,200
08.02.2026 - ஒரு சவரன் ரூ.1,15,360
07.02.2026 - ஒரு சவரன் ரூ.1,15,360
06.02.2026 - ஒரு சவரன் ரூ.1,14,000 (மாலை)
06.02.2026 - ஒரு சவரன் ரூ.1,12,960 (காலை)
05.02.2026 - ஒரு சவரன் ரூ.1,14,560
04.02.2026 - ஒரு சவரன் ரூ.1,19,200
03.02.2026 - ஒரு சவரன் ரூ.1,14,160 (பிற்பகல்)
03.02.2026 - ஒரு சவரன் ரூ.1,12,240 (காலை)
02.02.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600
01.02.2026 - ஒரு சவரன் ரூ.1,19,200
Credit: Oneindia
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications