சென்னை: சென்னையில் ஜனவரி 30-ஆம் தேதியான இன்று தங்கம் விலை (Gold Rate) சவரனுக்கு ரூ. 4,800 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,29,600 -க்கு விற்பனையானது. தற்போது, மேலும் ரூ.2800 குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 7,600 குறைந்து ரூ. 1,26,800க்கு விற்பனையாகி வருகிறது. கிராமிற்கு ரூ. 950 குறைந்து 15,850க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மிடில் கிளாஸ் மக்கள் எல்லாம் இனி தங்கம் வாங்கவே முடியாது என்கிற நிலை உருவாகியுள்ளது. சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடைகள், சீனா- இந்தியா மீதான வரி உயர்வுகள், மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றங்கள் போன்றவையால் அனைத்து நாடுகளும் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர்.

ஏற்றுமதி, இறக்குமதியை டாலருக்கு பதிலாக தங்கத்தின் அடிப்படையில் நடத்தலாம் என்ற முடிவுக்கு மற்ற நாடுகள் வந்துவிட்டன. இதனால் தங்கம் விலையில் ஏற்றம் இருந்தது. கடந்த டிசம்பர் மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 4 ஆம் தேதி ஒரு சவரன் ரூ 96,160-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 30-ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 1,00,800- க்கு விற்பனையானது.
சென்னையில் ஜனவரி 29-ஆம் தேதியான நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 9520 உயர்ந்து ஒரு சவரன் ரூ 1,34,400 -க்கும், கிராமுக்கு ரூ 1190 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 16,800-க்கும் விற்பனையானது. அது போல் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ 25 உயர்ந்து ஒரு கிராம் ரூ 425-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ 4,25,000-க்கும் விற்பனையானது.
இந்நிலையில், சென்னையில் ஜனவரி 30-ஆம் தேதியான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 4,800 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,29,600-க்கும், கிராமுக்கு ரூ. 600 குறைந்து ஒரு கிராம் ரூ. 16,200-க்கும் விற்பனையானது. அது போல் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ. 10 குறைந்து ஒரு கிராம் ரூ.415-க்கும், ஒரு கிலோ வெள்ளி கிலோவுக்கு ரூ. 10 ஆயிரம் குறைந்து கிலோ ரூ. 4,15,000-க்கும் விற்பனையானது. கிராமிற்கு 10 குறைந்து ஒரு கிராம் ரூ. 415க்கு விற்பனையானது.
இதைத்தொடர்ந்து, தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ. 4,800 குறைந்த நிலையில், தற்போது மேலும் ரூ.2,800 குறைந்துள்ளது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 7,600 குறைந்து ரூ. 1,26800க்கு விற்பனையாகி வருகிறது. தங்கம் கிராமிற்கு ரூ. 950 குறைந்து 15,850க்கு விற்பனையாகிறது.
ஜனவரி 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:
30.01.2026 - ஒரு சவரன் ரூ.1,26,800 (பிற்பகல்)
30.01.2026 - ஒரு சவரன் ரூ.1,29,600
29.01.2026 - ஒரு சவரன் ரூ.1,34,400
28.01.2026 - ஒரு சவரன் ரூ.1,24,880
27.01.2026 - ஒரு சவரன் ரூ.1,19,680
26.01.2026 - ஒரு சவரன் ரூ.1,20,200
25.01.2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
24.01.2026 - ஒரு சவரன் ரூ.1,18,000 (பிற்பகல்)
24.01.2026 - ஒரு சவரன் ரூ.1,16,690 (காலை)
23.01.2026 - ஒரு சவரன் ரூ.1,17,200
22.01.2026 - ஒரு சவரன் ரூ.1,13,600
21.01.2026 - ஒரு சவரன் ரூ.1,15,320 (பிற்பகல்)
21.01.2026 - ஒரு சவரன் ரூ.1,14,000 (காலை)
20.01.2026 - ஒரு சவரன் ரூ.1,11,200 (மாலை)
20.01.2026 - ஒரு சவரன் ரூ.1,08,880 (காலை)
19.01.2026 - ஒரு சவரன் ரூ.1,07,600
18.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,240
17.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,240
16.01.2026 - ஒரு சவரன் ரூ.1,05,840
15.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,320
14.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,240
13.01.2026 - ஒரு சவரன் ரூ.1,05,360
12.01.2026 - ஒரு சவரன் ரூ.1,04,960
11.01.2026 - ஒரு சவரன் ரூ.1,03,200
10.01.2026 - ஒரு சவரன் ரூ.1,03,200
09.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,400
08.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,200
07.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,600
06.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,640
05.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,080 (மாலை)
05.01.2026- ஒரு சவரன் ரூ.1,01,440 (காலை)
04.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,800
03.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,800 (மாலை)
03.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,160 (காலை)
02.01.2026- ஒரு சவரன் ரூ.96,320
01.01.2026- ஒரு சவரன் ரூ.96,580
Credit: Oneindia
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications