பேங்க் அக்கவுண்ட்.. ரூ.10 லட்சம் மேல் 85 சதவீத வரி.. கஸ்டமர்கள் தலையில் இடி.. உண்மையை போட்டுடைத்த இந்திய அரசு!

2026 ஏப்ரல் மாதத்தில் இருந்து பேங்க் அக்கவுண்ட் பரிவர்த்தனைகளுக்கு 2 பேக்டர் ஆதன்டிகேஷன் விதிகள், புதிய வருமான வரிச் சட்ட விதிகள், பேசிக் சேவிங் பேங்க் டெபாசிட் அக்கவுண்ட் விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. இந்த விதிகளுடன் ரூ.10 லட்சம் மேல் பேங்க் பரிவர்த்தனைகளை செய்யும்போது 85 சதவீத வரியை செலுத்தும் விதிகளையும் இந்திய அரசு அமல் செய்ய இருப்பதாக இன்ஸ்டாகிராம் ரீல் வழியாக தகவல் வெளியாகியது.

இந்தியாவில் வருமான வரிகளில் விலக்கு அளிக்கப்படுவதும், திடீரென வரிகள் உயர்த்தப்படுவதும் வழக்கமாக நடந்து வருகிறது. ஆகவே, அது தொடர்பான இந்திய அரசின் அறிவிப்புகள் பேங்க் கஸ்டமர்கள் மற்றும் மாதாந்திரம் சம்பளம் வாங்கும் ஊழியர்களிடம் கவனம் பெறுகிறது. ஆகவே, ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வர இருக்கும் விதிகள் மீது ஒட்டுமொத்த கவனமும் இருக்கிறது.


பேங்க் அக்கவுண்ட்.. ரூ.10 லட்சம் மேல் 85 சதவீத வரி.. PIB விளக்கம்!

ஏனென்றால், பேங்க் அக்கவுண்ட் வழியாக செய்யப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு 2 பேக்டர் ஆதன்டிகேஷன் வர இருக்கிறது. பேசிக் சேவிங் பேங்க் டெபாசிட் அக்கவுண்ட்டில் டிஜிட்டல் பேங்கிங் விதிகளும் அமலுக்கு வருகின்றன. மேலும், புதிய வருமான வரிச் சட்ட விதிகளையும் இந்திய அரசு அமல் செய்ய இருக்கிறது. இதில் 85 சதவீத வரியும் இருப்பதாக கூறப்பட்டது.

அதாவது, பேங்க் அக்கவுண்ட்கள் வழியாக ரூ.10 லட்சத்துக்கும் மேல் பரிவர்த்தனை செய்தால் 85 சதவீத வரி விதிக்கப்படுவதாக இன்ஸ்டாகிராம் ரீல் வழியாக தகவல் வெளியாகியது. இது பேங்க் கஸ்டமர்களின் தலையில் இடியை இறக்கியது. இது தொடர்பாக பிஐபி பேக்ட் செக் (PIB Fact Check) என்கிற மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலக தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.

இந்த கூற்று பொய்யானது, வருமான வரி என்பது வருமானத்தின் மீது மட்டுமே விதிக்கப்படுகிறது. பேங்க் பரிவர்த்தனைகளின் மீது விதிக்கப்படுவதில்லை. ரூ.10 லட்சத்திற்கும் மேற்பட்ட பேங்க் பரிவர்த்தனைகளின் (Bank Transactions) மீது எந்த வரியையும் விதிப்பதற்கு வருமான வரி சட்டத்தில் இடம் கிடையாது. இது போன்ற போலியான கூற்றுகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.

இதுபோன்ற கூற்றுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை மட்டுமே நம்ப வேண்டும் என்று விளக்கம் கொடுத்துள்ளது. மேலும், 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் பல்வேறு விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. இந்த விதிகளும் பேங்க் கஸ்டமர்களுக்கு அமல் செய்யப்படுகிறது. இதில் கிரெடிட் ஸ்கோர் (Credit Score) மீதான மாற்றங்கள் முக்கியமாக இருக்கிறது.

கடன் தகவல் நிறுவனங்கள் (Credit Bureaus) ஆனது 15 நாட்களுக்கு ஒருமுறை என்பதற்கு பதிலாக, ஒவ்வொரு வாரமும் பேங்க் கஸ்டமர்களின் கிரெடிட் விவரங்களை புதுப்பிக்கும். ஆகவே, கடன் திருப்பி செலுத்துதல்கள், தவறிய மாதாந்திர தவணைகள் அல்லது கடன் செலுத்தலில் ஏற்படும் முன்னேற்றங்கள் ஆகியவை கிரெடிட் ஸ்கோரில் வேகமாக புதுப்பிக்கப்படும்.

மேலும், யுபிஐ விதிகளிலும் மாற்றங்கள் வந்தன. கூகுள் பே, பேடிஎம், போன்பே உள்ளிட்ட யுபிஐ செயலிகளில் கிடைத்துவந்த ஆட்டோபே மேன்டேட்களிலும் புதிய விதிகள் அமல் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆட்டோபே மேன்டேட் ஆனது மின்சார கட்டணம் செலுத்துவது, மாதாந்திர தவணை செலுத்துவது உள்ளிட்டவைக்கு பயன்படுத்தப்படுகிறது.

ஒரு முறை மேன்டேட் செய்துவிட்டால், மாதாந்திரம் பணத்தை தானாக அனுப்பி கொள்ளும். பின் நம்பர் போன்ற எதுவும் கிடையாது. நேரடியாக பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து டெபிட் செய்யப்பட்டுவிடும். இது எந்த ஆப்பில் மேன்டேட் செய்யப்படுமோ அதில் மட்டுமே கிடைத்தது. இப்போது, ஒரு ஆப்பில் இருந்து மற்றொரு ஆப்புக்கு போர்ட் செய்து கொள்ளலாம்.

Credit: Gizbot

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+