உஷார்.. ஜனவரி 10 ஆம் தேதி UPI சேவை வேலை செய்யாது.. பிரபல வங்கி அறிவிப்பு.. எந்த வங்கி?

2026 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி அன்று திட்டமிடப்பட்ட கணினி பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளதாக எச்டிஎப்சி வங்கி ஆனது தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. இந்த பராமரிப்பு பணிகளின் போது எச்டிஎப்சி வங்கியின் பல டிஜிட்டல் வங்கி சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்படும்.

இதுகுறித்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், "உங்கள் வங்கி அனுபவத்தை மேம்படுத்த, ஜனவரி 10, 2026, அதிகாலை 02.30 மணி முதல் காலை 06:30 மணி வரை (அதாவது மொத்தம் 4 மணிநேரம்) அத்தியாவசிய கணினி பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளோம்" என்று எச்டிஎப்சி வங்கி அறிவித்துள்ளது.


ஜனவரி 10 ஆம் தேதி UPI சேவை வேலை செய்யாது.. பிரபல வங்கி அறிவிப்பு!

இந்த பராமரிப்பு காலத்தில், எச்டிஎப்சி வங்கி நெட்பேங்கிங் தளம் மற்றும் மொபைல் ஆப்பில் உள்ள முக்கிய சேவைகள் அணுக கிடைக்காது. அக்கவுண்ட்கள் மற்றும் வைப்புத்தொகைகளுக்கான அணுகல், யுபிஐ (UPI), என்இஎப்டி (NEFT), ஐஎம்பிஎஸ் (IMPS), ஆர்டிஜிஎஸ் (RTGS) மற்றும் உள்-வங்கி பரிமாற்றங்கள் மூலம் நிதி பரிமாற்றங்கள், ஆன்லைன் கட்டணங்கள் மற்றும் அக்கவுண்ட் தொடர்பான பிற பரிவர்த்தனைகளும் அணுக கிடைக்காது.

இருப்பினும், இந்த செயலிழப்பு நேரத்திலும் வாடிக்கையாளர்கள் பேஸாப் வேலட்-ஐ (PayZapp Wallet) பயன்படுத்தி தொடர்ந்து பணம் செலுத்தலாம் மற்றும் பணத்தை டிரான்ஸ்பர் செய்யலாம் என்று எச்டிஎப்சி வங்கி தெளிவுபடுத்தி உள்ளது. ஆகவே ஜனவரி 10 ஆம் தேதி காலை நேரத்தில் உங்களுக்கு பணம் அனுப்புதல் அல்லது பெறுதல் போன்ற வேலைகள் இருந்தால், அதை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளவும்.

சமீபத்தில் எச்டிஎப்சி வங்கி ஆனது இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய வங்கி டிஜிட்டல் நாணயத்தை (CBDC) அல்லது டிஜிட்டல் ரூபாயை (Digital Rupee) அதன் ஆன்லைன் வணிகர் கட்டண தளமான ஸ்மார்ட்கேட்வேயில் ஒருங்கிணைத்துள்ளதாக அறிவித்து இருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கை, ஸ்மார்ட்கேட்வே-ஐ பயன்படுத்தும் வணிகர்கள், எச்டிஎப்சி வங்கியின் செக்அவுட் அமைப்பிற்குள் பூஜ்ஜிய பரிவர்த்தனை செலவில் வாடிக்கையாளர்களுக்கு ஆதரவு டிஜிட்டல் கட்டண விருப்பத்தை வழங்க அனுமதிக்கிறது.

இந்த ஒருங்கிணைப்பு - வணிகர்கள் வாடிக்கையாளர்களுக்கு எச்டிஎப்சி வங்கி செக்அவுட் சுற்றுச்சூழல் அமைப்பிற்குள் பாதுகாப்பான, பூஜ்ஜிய-செலவு மற்றும் இறையாண்மை ஆதரவு மிக்க டிஜிட்டல் கட்டண விருப்பத்தை வழங்க உதவுகிறது என்று இந்தியாவின் மிகவும் முக்கியான தனியார் கடன் வழங்குநர் வங்கி ஆன எச்டிஎப்சி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

புதிய அம்சத்தின் மூலம், ஸ்மார்ட்கேட்வே வணிகர்கள் இப்போது யுபிஐ, கார்டுகள் மற்றும் நெட் பேங்கிங் போன்ற ஏற்கனவே உள்ள விருப்பங்களுடன் டிஜிட்டல் ரூபாய் மூலம் பணம் செலுத்தலாம். வாடிக்கையாளர்கள் உடனடி மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் கட்டண அனுபவத்திலிருந்து பயனடைவார்கள் என்றும், வணிகர்கள் தங்கள் பயனர்களுக்கு சேவை செய்ய கூடுதல் இலவச கட்டண முறையைப் பெறுவார்கள் என்றும் எச்டிஎப்சி வங்கி தெரிவித்துள்ளது.

யுபிஐ பாதுகாப்பு டிப்ஸ்: அடிக்கடி பேங்க் ஸ்டேட்மென்ட்களை தவறாமல் சரிபார்க்கவும். பேங்க் ஸ்டேட்மென்ட்களை அடிக்கடி கண்காணிப்பது சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளை முன்கூட்டியே கண்டறிய உதவுகிறது. ஒரு சிறிய அளவிலா அங்கீகரிக்கப்படாத டெபிட் கூட ஒரு பெரிய மோசடி முயற்சியின் அடையாளமாக இருக்கலாம்.

அதிகாரப்பூர்வ ஆப் ஸ்டோர்களில் இருந்து யுபிஐ ஆப்களை பதிவிறக்கவும்" எப்போதும் அதிகாரப்பூர்வ ஆப் ஸ்டோர்களில் இருந்து மட்டுமே யுபிஐ ஆப்களை பதிவிறக்கவும். ஆண்ட்ராய்டு பயனர்கள் ஜிபே, போன்பே மற்றும் பீம் போன்ற ஆப்களை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்தும், ஆப்பிள் பயனர்கள் ஆப்பிள் ஆப் ஸ்டோரில்இருந்தும் பதிவிறக்க வேண்டும்.

Credit: Gizbot

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+