டிஜிட்டல் இந்தியாவில் எச்சரிக்கையாக இருக்கும்படி பல்வேறு வகையில் அறிவுறுத்தப்பட்டு வந்தாலும் ஆங்காங்கே மோசடி கும்பல் விரிக்கும் வலையில் பொதுமக்கள் சிக்கிக் கொள்கின்றனர். குறிப்பாக ஓடிபி, யுபிஐ ஆன்லைன் பணப் பரிமாற்றம் என அனைத்து விஷயங்களிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
இந்நிலையில் எச்டிஎப்சி (HDFC)வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதன்படி நீங்கள் செய்யும் ஒரே ஒரு சிறிய தவறு அடுத்த சில நிமிடங்களில் உங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் மொத்த பணத்தையும் காலி செய்துவிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதாவது APK Scam என்பது மோசடி செய்யும் நபர்கள் போலியான APK (Android Package Kit) கோப்புகளை அனுப்பி, உங்களது மொபைல் போனை கட்டுப்படுத்தி வங்கி விவரங்கள், கடவுச்சொற்கள், ஓடிபி போன்ற தனிப்பட்ட தகவல்களை திருடி, உங்கள் பணத்தை கொள்ளையடிக்கும் ஒரு ஆன்லைன் மோசடியாகும்.
குறிப்பாக இவை KYC அப்டேட், பரிசு கூப்பன்கள், அல்லது பார்சல் டெலிவரி போன்ற அவசர தேவைகள் என்ற பெயரில் அனுப்பப்படும். அதாவது உங்கள் போனுக்கு திடீரென ஒரு எஸ்எம்ஸ் மற்றும் வாட்ஸ்அப் மெசேஜ் வரும். அதில் நீங்கள் இன்னும் KYC அப்டேட் செய்யவில்லை, உடனே இந்த ஆப்பை டவுன்லோடு செய்யவும், இல்லையெனில் உங்கள் கணக்கு முடக்கப்படும், உடனே இந்த லிங்க்கை கிளிக் செய்யுங்கள் என்று பயமுறுத்துவார்கள்.
உடனே நீங்களும் அந்த லிங்க்கை கிளிக் செய்தால் ஒரு APK file டவுன்லோட் ஆகும். அது பார்ப்பதற்கு ஒரிஜினல் பேங்க் ஆப் போலவே இருக்கும். இதன் மூலம் உங்கள் விவரங்கள் திருடப்பட அதிக வாய்ப்பு உள்ளது. இப்படிதான் ஹேக்கர்கள் உங்களுடைய செல்போனுக்குள் நுழைகிறார்கள்.
குறிப்பாக கூகுள் பிளே ஸ்டோர் இல்லாத ஆப்பை நீங்கள் டவுன்லோடு செய்தால் அடுத்த நொடியே உங்கள் போன் ஹேக்கர்கள் கட்டுப்பாட்டுக்குள் சென்று விடும். நீங்கள் அந்த செயலிக்கு (ஆப்) பர்மிஷன் கொடுத்த உடன் உங்களது போனில் உள்ளன படங்கள், போன் நம்பர்கள், மெசேஜ் உள்ளிட்ட அனைத்து முக்கிய தகவல்களும் அவர்களுக்குத் தெரிந்துவிடும். அதுவும் வங்கியில் இருந்து உங்களுக்கு வரும் OTP அவர்களுக்கு நேரடியாகப் போய்விடும்.
குறிப்பாக நீங்கள் ஓடிபி-ஐ யாருக்கும் சொல்லவே வேண்டாம். அவர்களே பார்த்து விடுவதுடன் நீங்கள் கண்ணை மூடி திறப்பதற்குள் உங்களது வங்கி கணக்கில் உள்ள பணத்தை மற்றொரு கணக்கிற்கு எளிமையாக மாற்றி விடுவார்கள். மேலும் உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் காணாமல் போவதைக் காட்டும் மெசேஜ் கூட அவர்களால் டெலிட் செய்ய முடியும்.
எச்டிஎப்சி வங்கி முக்கிய அறிவிப்பு
தற்போது எச்டிஎப்சி வங்கி தரப்பில் வெளியான தகவலின்படி, எங்கள் வங்கியில் இருந்து எந்த வாடிக்கையாளர்களுக்கும் APK file-ஐ அனுப்ப மாட்டோம். குறிப்பாக நீங்கள் எப்போதும் போல் Google Play Store அல்லது Apple App Store போன்ற அதிகாரப்பூர்வ இடங்களில் இருந்து மட்டுமே ஆப்களை பதிவிறக்கம் செய்யுங்கள். லிங்க் மூலம் வரும் எதையும் நம்ப வேண்டாம் என எச்டிஎப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதேபோல் கரண்ட் பில், டிராபிக் செல்லான் என்று சொல்லி வரும் எந்தவொரு போலியான லிங்க் மற்றும் APPSயும் நம்பி ஏமாற வேண்டாம். தெரியாத நபர்களிடம் இருந்து வரும் APK கோப்புகள் அல்லது லிங்குகளை திறக்கவோ, பதிவிறக்கம் செய்யவோ வேண்டாம். இவற்றை உடனே நீக்கி விடுங்கள் என எச்டிஎப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
ஒருவேளை இதுபோன்ற ஏதாவது ஒரு மோசடி உங்களுக்கு நடந்தால் cybercrime.gov.inஎன்ற இணையதளத்திற்குச் சென்று புகார் கொடுக்கலாம் அல்லது 1930 என்ற எண்ணை அழைக்கலாம்.
Credit: Gizbot
More From GoodReturns

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications