சென்னை: தளபதி விஜய் நடித்துள்ள ஜன நாயகன் திரைப்படம் இந்த வாரம் ஜனவரி 9ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக காத்திருக்கிறது. இந்நிலையில், ஜன நாயகன் படத்தை அமேசான் பிரைம் பெரிய தொகைக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், ஜன நாயகன் திரைப்படம் வெளியான 30 நாட்களுக்குள்ளே அமேசான் பிரைமில் வெளியாகி விடும் என்கிற தகவல் ஒன்றும் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றன.

அ. வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், நாசர், நரேன், பிரியாமணி மற்றும் சுனில் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் வெளியான பாடல்கள் அனைத்துமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
ஜன நாயகனை வாங்கிய அமேசான் பிரைம்: ஜன நாயகன் படத்தின் டிரைலர் வெளியாகி படம் பகவந்த் கேசரி தான் என பல மாதங்களாக பரவி வந்த தகவல்களை உண்மையாக்கிய நிலையில், ஓடிடி ரசிகர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் அந்த படத்தை பார்த்து டாப் டிரெண்டிங்கில் கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில், அமேசான் பிரைம் தான் விஜய்யின் ஜன நாயகன் படத்தையும் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெத்த தொகை: தெலுங்கு படத்தை ரீமேக் செய்து பல வெற்றிப் படங்களை கொடுத்த விஜய் தளபதி வெற்றிக் கொண்டான் (தவெக) ஆக நடித்துள்ள ஜன நாயகன் படத்தை சுமார் 110 கோடிக்கு அமேசான் பிரைம் வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், ஜன நாயகன் திரைப்படம் 8 வாரம் எல்லாம் இல்லாமல் 4 வாரத்துக்குள்ளே ஓடிடியில் வெளியாகும் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
ஜன நாயகன் ஓடிடி ரிலீஸ்: ஜனவரி 9ம் தேதி விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படம் தொடர்ந்து 10 நாள் வசூல் வேட்டை நடத்தினாலே பாக்ஸ் ஆபீஸ் பந்தயம் அடித்து விடும் என்கின்றனர். இந்நிலையில், பிப்ரவரி 6ம் தேதி ஜன நாயகன் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகும் என தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால், இதுதொடர்பாக அமேசான் பிரைம் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்யின் ஜன நாயகன் படத்தின் கதையை தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் அதிகமாக பகவந்த் கேசரியை பார்த்து வருவதும் அமேசான் பிரைம் ஓடிடி தளத்துக்கு நல்ல லாபம் தான்.
Credit: Filmibeat


Click it and Unblock the Notifications