2026 ஆம் ஆண்டில் எப்போது வேண்டுமானாலும் மொபைல் ரீசார்ஜ் திட்டங்களின் விலைகள் (2026 Mobile Recharge Tariff Hike) அதிகரிக்கக்கூடும் என்கிற சூழ்நிலை நிலவினாலும் கூட, முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தலைமையிலான, இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), அதன் வாடிக்கையாளர்களுக்கு மலிவு விலையில் 5ஜி ரீசார்ஜ் திட்டங்களை (5G Recharge Plans) வழங்கி வருகிறது.
மலிவு விலையில் 5ஜி நெட்வொர்க் (5G Network), 5ஜி ஸ்பீட் (5G Speed) மற்றும் 5ஜி எக்ஸ்பீரியன்ஸை (5G Experience) தேடுபவர்களுக்கு இந்த திட்டங்கள் - மிகவும் பயனுள்ளதாக.. பேஸிக் பிளான்களாக உள்ளது. போதாக்குறைக்கு ஜியோ தான் நாட்டிலேயே சிறந்த 5ஜி கவரேஜை (Best 5G Coverage in India) கொண்டுள்ளது. கிட்டத்தட்ட நீங்கள் எந்த பிரதான சிட்டிக்கு பயணம் செய்தாலும் அங்கே ஜியோ 5ஜி சேவை கிடைக்கும்.

கடந்த 2024 ஆம் ஆண்டில், 2ஜிபி டெய்லி டேட்டா மற்றும் அதற்கு மேற்பட்ட டேட்டா நன்மைகளுடன் வரும் திட்டங்களுடன் மட்டுமே அன்லிமிடெட் 5ஜி கிடைக்கும் என்று ஜியோ அறிவித்திருந்தது. இருப்பினும் இந்த "வரம்புகள்" மலிவு விலையிலும் கிடைப்பதை உறுதி செய்யவும், ஜியோவின் 5ஜி நெட்வொர்க்கை அனைவரும் அனுபவிக்கும் வகையில் விலை நிர்ணயம் செய்யப்பட்ட 2 ஜியோ திட்டங்கள் உள்ளன.
1. ரிலையன்ஸ் ஜியோ ரூ.198 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs.198 Prepaid Plan): ரிலையன்ஸ் ஜியோ அதன் வாடிக்கையாளர்களுக்கு ரூ.198 ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது. ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.198 ப்ரீபெய்ட் திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் டெய்லி 2 ஜிபி தினசரி டேட்டாவை வழங்குகிறது.
இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் சர்வீஸ் வேலிடிட்டி 14 நாட்கள் ஆகும். இந்த திட்டத்தின் டெய்லி டேட்டா லிமிட் முடிந்ததும், அதாவது டெய்லி 2ஜிபி டேட்டா முடிந்ததும், இண்டர்நெட் ஸ்பீட் 64 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும். மேற்குறிப்பிட்டதை போலவே இது டெய்லி 2ஜிபி டேட்டாவை வழங்குவதால், இந்த திட்டத்துடன் வரம்பற்ற 5ஜி டேட்டா நன்மையும் கிடைக்கும்.
2. ரிலையன்ஸ் ஜியோ ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs.349 Prepaid Plan): அடுத்ததாக ரிலையன்ஸ் ஜியோ அதன் வாடிக்கையாளர்களுக்கு ரூ.349 ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது. ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம் "அதே" அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் டெய்லி 2 ஜிபி தினசரி டேட்டா ஆகிய நன்மைகளை வழங்குகிறது.
ஆனால் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் சர்வீஸ் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இருப்பினும் ரூ.198-ஐ போலவே இந்த திட்டத்தின் டெய்லி டேட்டா லிமிட் முடிந்ததும், அதாவது டெய்லி 2ஜிபி டேட்டா முடிந்ததும், இண்டர்நெட் ஸ்பீட் 64 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும். வழக்கம் போல இதுவும் டெய்லி 2ஜிபி டேட்டாவை வழங்குவதால், இந்த திட்டத்தின் கீழும் ஜியோ அன்லிமிடெட் 5ஜி டேட்டா நன்மையை வழங்குகிறது.
ஜியோவின் இலவச 5ஜி நன்மையின் கீழ் உள்ள நல்ல விஷயம் என்னவென்றால், பயனர்கள் உண்மையிலேயே வரம்பற்ற 5ஜி டேட்டாவை பெறுகிறார்கள். மேலும் சமீபத்தில் - ஜியோ நிறுவனம் ஆனது ஓப்பன்சிக்னலின் சிறந்த 5ஜி கவரேஜ் விருதை வென்றதும் இங்கே குறிப்பிடத்தக்கது மற்றும் பல ஆண்டுகளாக தொடர்ந்து இந்த விருதை ஜியோ தான் வென்று வருகிறது. 4G கவரேஜுக்கு கூட, ஜியோ பல ஆண்டுகளாக சிறந்த ஆபரேட்டர் விருதை வென்று வருகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
Credit: Gizbot
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications