ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ப்ரீபெய்ட் கஸ்டமர்கள் அடுத்த 336 நாட்களுக்கு கம்மியான விலைக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டுமானால், கண்ணை மூடிக்கொண்டு இந்த திட்டத்துக்கு செல்லலாம். இதில் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டுமே கிடைக்கும் என்பதால், விலை மிகவும் கம்மியாகவே இருக்கிறது. முழு சலுகை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
2026 ஆம் ஆண்டு அடுத்த ஒரு வாரத்தில் வர இருக்கிறது. அந்த ஆண்டில் நிச்சயம் டெலிகாம் கட்டணங்கள் உயரும் என்பதில் சந்தேமில்லை. இதனால், ஜியோ நிறுவனத்தின் கஸ்டமர்கள் ஒரு வருடத்துக்கு வேலிடிட்டி கொண்ட திட்டங்களை ரீசார்ஜ் செய்ய தொடங்விட்டனர். இதில் மலிவான விலைக்கு சிம் ஆக்டிவ் கொடுக்கும் திட்டமாக இருக்கும் ரூ. 1748 திட்டம் அதிகமாக ரீசார்ஜ் செய்யப்படுகிறது.

ஜியோ ரூ. 1748 திட்ட விவரங்கள் (Jio Rs 1748 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டம் மாதத்துக்கு ரூ.145 செலவில் கிடைக்கிறது. இந்த விலைக்கே 336 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கிறது. ஆகவே, வருடம் முழுவதும் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் சலுகைகளை பயன்படுத்தி கொள்ள முடியும். டேட்டா சலுகை இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு கிடைக்காது. ஏனென்றால், இது வாய்ஸ் ஒன்லி திட்டமாகும்.
ஆகவே, 336 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Unlimited Local, STD & Roaming Voice Calls) செய்து கொள்ளலாம். 3,600 எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கும். இது 336 நாட்களுக்கும் பொருந்தும். அதாவது, தினசரிக்கு எந்த லிமிட்டும் இருக்காது. தேவைப்படும்போது, அனுப்பி கொள்ளலாம். வேலிடிட்டிக்கு முன்பாக முடிந்தால், கட்டணம் இருக்கும்.
இந்த 2 சலுகைகளுக்கு அடுத்து ஜியோ டிவி (Jio TV) கிடைக்கும். மேலும், ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சலுகை கொடுக்கப்படும். இதைத் தவிர வேறு சலுகைகள் இந்த வருடாந்திர திட்டத்தில் கிடையாது. இருப்பினும், இப்போது ரீசார்ஜ் செய்தால், அடுத்த வருடம் இறுதி வரையில் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் சிம் ஆக்டிவ் கொடுக்கப்பட்டு விடும்.
இதற்கிடையில் டெலிகாம் கட்டணங்கள் உயர்ந்தாலும், இப்போது ரீசார்ஜ் செய்யும் விலையிலேயே சலுகைகளை பெற்று கொள்ளலாம். மேலும், 2026 ஆம் ஆண்டுக்காக ஜியோ நிறுவனம் பிரத்யேகமாக மூன்று ப்ரீபெய்ட் திட்டத்தை களமிறக்கி இருக்கிறது. இதில் ஜியோ ரூ.500 விலை கொண்ட திட்டம் அதிகமாக ரீசார்ஜ் செய்யப்பட்டு வருகிறது.
ஜியோ ரூ. 500 திட்ட விவரங்கள் (Jio Rs 500 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். ஆனால், இந்த நாட்களில் தினமும் 2 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி & ரோமிங் வாய்ஸ் கால்கள் கிடைக்கும். மேலும், 100 எஸ்எம்எஸ்கள் தினசரிக்கு அனுப்பி கொள்ள கிடைக்கும். அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கும்.
மேலும், யூடியூப் பிரீமியம் (YouTube Premium), பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் (Prime Video Mobile Edition), ஜியோஹாட்ஸ்டார் மொபைல் / டிவி (JioHotstar Mobile/TV), சோனிலிவ் (Sony LIV), ஜீ5 (ZEE5), லயன்கேட் பிளே (Liongate Play), டிஸ்கவரிபிளஸ் (Discovery+), சன்நெக்ஸ்ட் (Sun NXT), கான்ச்சா லங்கா (Kanchha Lannka) மற்றும் பிளானர் மராத்தி (Planet Marathi) ஆகிய ஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன.
மேலும், சாவ் பால் (Chaupal), பேன்கோட் (FanCode) மற்றும் ஹோய்சோய் (Hoichoi) ஆகிய ஓடிடி ஆப்களின் சந்தாவும் கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கு தினசரி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைப்பதால், ஓடிடி ஆப்களை பார்ப்பதில் டேட்டாவுக்கு குறையிருக்காது. அதேபோல ஒரே ரீசார்ஜ் வழியாக ஏகப்பட்ட ஓடிடி ஆப்களை பெற்று கொள்ளலாம்.
Credit: Gizbot
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications