ஜியோ நிறுவனம் அவ்வப்போது பட்ஜெட் விலையில் புதிய புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் மற்ற நிறுவனங்களை விட இந்நிறுவனம் கூடுதல் டேட்டா நன்மையை வழங்குகிறது. எனவே தான் ஜியோ திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சரி இப்போது ஜியோ 90 நாட்களுக்கு மேல் வேலிடிட்டி தரும் இரண்டு திட்டங்களை வைத்துள்ளது. இங்கே அந்த திட்டத்தின் நன்மைகளைப் பார்க்கலாம்.
ஜியோவின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 999 prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. 98 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். எனவே நீங்கள் ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 196ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

அதேபோல் மூன்று மாதங்களுக்கு நாட்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த திட்டம். இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளன.
ரூ.35100 மதிப்புள்ள கூகுள் ஜெமினி ப்ரோ, ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) போன்றவற்றை இந்த ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். குறிப்பாக 98 நாட்கள் வேலிடிட்டி, ஓடிடி, மற்றும் தினசரி டேட்டா எதிர்பார்க்கும் பயனர்கள் இந்த திட்டத்தைத் தேர்வு செய்வது நல்லது.
ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 899 prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. 90 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். மேலும் 20ஜிபி இலவச டேட்டாவும் இந்த திட்டத்தில் கிடைக்கும். ஆகவே நீங்கள் ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 200ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த திட்டம். இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளன.

அதன்படி மூன்று மாதங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) போன்றவற்றை இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும் ரூ.35100 மதிப்புள்ள கூகுள் ஜெமினி ப்ரோ சந்தாவும் இதில் கிடைக்கும்.
ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டத்தில் அதிக டேட்டா நன்மை மற்றும் 90 நாட்கள் வேலிடிட்டி இருப்பதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம். மேலும் ஜியோ நிறுவனம் விரைவில் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் ஓடிடி சந்தா தரும் திட்டங்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது ஜியோ நிறுவனம்.
Credit: Gizbot
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications