2026 ஆம் ஆண்டு தொடங்கி 1 மாதம் முடிந்துவிட்டது, தொடக்கத்திலேயே ஒரு வருடத்துக்கு ரீசார்ஜ் செய்துவிட்டால், டெலிகாம் கட்டணங்கள் உயர்ந்தாலும் கவலைப்பட வேண்டியது கிடையாது. இப்படி பார்க்கையில், ஜியோ ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு அடிமட்ட விலைக்கு 336 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும் திட்டம் அதிகமாக ரீசார்ஜ் செய்யப்பட்டு வருகிறது. டேட்டா சலுகை இல்லாமல், வாய்ஸ் ஒன்லி திட்டமாக இது இருக்கிறது. இதுகுறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
ஜியோ நிறுவனத்தில் ஆரம்ப விலை வருடாந்திர திட்டமாக ரூ. 1748 ரீசார்ஜ் இருக்கிறது. மாதத்துக்கு ரூ.145 செலவில் மட்டுமே கிடைப்பதால், அதிகமாக ரீசார்ஜ் செய்யப்படுகிறது. டேட்டா சலுகைகள் வேண்டாம், வருடம் முழுவதும் வாய்ஸ் கால்கள் (Voice Calls), சிம் ஆக்டிவ் (SIM Active) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) சலுகைகள் மட்டும் போதுமென்றால், இதை கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்யலாம்.

ஜியோ வாய்ஸ் ஒன்லி திட்டம் ரூ. 1748 (Jio Voice Only Plan Rs 1748): 336 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்களின் சலுகை மட்டுமே கிடைக்கும். டேட்டா, ஓடிடி, ஜியோ ஸ்பெஷல் ஆஃபர் போன்ற எந்த சலுகைகளும் கிடைக்காது. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு வருடம் முழுவதும் சிம் ஆக்டிவ் கிடைக்கும்.
ஆகவே, 336 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகைகள் கிடைக்கிறது. இதே 336 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 3600 எஸ்எம்எஸ்களை பெற்று கொள்ளலாம். மேலும், ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சலுகை கிடைத்துள்ளது. இந்த சலுகைகள் மட்டுமே கொடுக்கப்படும்.
மற்ற எந்த சலுகைகளும் கிடைக்காது. ஏனென்றால், மாதத்துக்கு ரூ.145 செலவில் இந்த திட்டம் கொடுக்கப்பட்டு உள்ளது. இதைவிட கொஞ்சம் கூடுதல் விலைக்கு மற்றொரு திட்டம் இருக்கிறது. இதில் வருடம் முழுவதும் வேலிடிட்டி கிடைக்காது. ஆனால், 6 மாதங்களுக்கும் மேல் வேலிடிட்டி கிடைக்கும். அதேபோல சலுகைகள் எக்கச்சக்கமாக கொடுக்கப்படும்.
ஜியோ ரூ. 2025 திட்டம் (Jio Rs 2025 Plan): 200 நாட்கள் வேலிடிட்டியை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்துள்ளது. இது 6 மாதங்களுக்கும் மேலான வேலிடிட்டியாக இருக்கிறது. இந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை (Unlimited 5G Data) சலுகையை கொடுத்துள்ளது. மேலும், நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா வீதம் 500 ஜிபி டேட்டா கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேக டேட்டா கிடைக்கும். முந்தைய திட்டத்தை போலல்லாமல், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகளை கொடுக்கிறது. வாய்ஸ் கால்களில் மாற்றமில்லை. அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை கொடுத்துள்ளது. இந்த சலுகைகள் போக ஜியோஹாட்ஸ்டார் (Jio Hotstar) சலுகை கொடுக்கப்பட்டு உள்ளது.
ஆனால், இந்த சந்தாவை திட்டத்தை பெற்ற முதல் 3 மாதங்களுக்கு மட்டுமே பயன்படுத்தி கொள்ள முடியும். மொபைல் மற்றும் டிவியிலும் இந்த ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை பயன்படுத்தலாம். மேலும், ஜியோ ஏஐ கிளவுட் சலுகை வழியாக 50 ஜிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ் கொடுக்கப்படும். ஜியோ மொபைல் நம்பரை வைத்து ஜியோ கிளவுட் ஆப்பில் பயன்படுத்தி கொள்ளலாம்.
Credit: Gizbot
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications