ஜியோ நிறுவனத்தின் ஜியோபோன் திட்டங்களுக்கு டெலிகாம் கஸ்டமர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. இதில் மாதத்துக்கு ரூ.74 செலவில் 12 மாதங்களுக்கு வேலிடிட்டி கொடுக்கும் திட்டம் அதிகளவில் ரீசார்ஜ் செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் சலுகைகள் 2026 ஆம் ஆண்டில் மாற்றப்படவில்லை. அதே விலையில் கிடைக்கிறது.
2025 ஆம் இறுதியில் ஏர்டெல் (Airtel) மற்றும் ஜியோ (Jio) போன்ற முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் ப்ரீபெய்ட் திட்டங்களின் சலுகையை குறைக்க தொடங்கின. ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தாமல், மலிவு விலை திட்டத்தை நீக்கின. ஆனால், ஜியோ நிறுவனத்திலேயே மலிவான விலைக்கு கிடைக்கும் ஜியோபோன் (JioPhone) திட்டங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இது 2026 ஆம் ஆண்டிலும் தொடர்வதால், 2025 ஆம் ஆண்டில் கிடைத்த அதே விலைக்கு ஜியோபோன் ப்ரீபெய்ட் திட்டங்கள் இப்போது கிடைக்கின்றன. இதில் மாதத்துக்கு ரூ.74 செலவில் 12 மாதங்களுக்கு வேலிடிட்டி கொடுக்கும் ரூ.895 விலை கொண்ட திட்டமும் அதே விலையில் நீடிக்கிறது. இதில் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்களும் கிடைக்கின்றன.
ஜியோபோன் ரூ.895 திட்ட விவரங்கள் (JioPhone Rs 895 Plan Details): 28 நாட்கள் வீதம் 12 மாதங்களுக்கு இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் வேலிடிட்டி கிடைக்கும். ஆகவே, 336 நாட்கள் வேலிடிட்டியில் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்களை பயன்படுத்தி கொள்ளலாம். ஒவ்வொரு 28 நாட்களுக்கும் ஒரே மாதிரியான சலுகைகள் 12 மாதங்களுக்கு பிரித்து கொடுக்கப்படும்.
அதாவது, இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 50 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் கிடைக்கும். மேலும், 2 ஜிபி டேட்டாவையும் கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். இந்த 2 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படும். இதேபோல, 12 மாதங்களுக்கு சலுகைகள் தொடர்ந்து கிடைக்கும்.
ஆகவே, 12 மாதங்களுக்கு மொத்தமாக 24 ஜிபி டேட்டா சலுகையும், 600 எஸ்எம்எஸ்களும் கிடைக்கும். ஒரு 28 நாட்கள் சைக்கிளில் அந்த வேலிடிட்டி முடிவதற்கு முன்பாகவே 2 ஜிபி டேட்டா மற்றும் 50 எஸ்எம்எஸ்களை பயன்படுத்தி முடித்துவிட்டால், அடுத்தது கட்டணம் இருக்கும். ஏனென்றால், அடுத்த 28 நாட்களின் சைக்கிள் தொடங்கினால், மட்டுமே சலுகைகள் மீண்டும் கொடுக்கப்படும்.
மேலும், ஜியோ டிவி, ஜியோ ஏஐ கிளவுட் சலுகைகளையும் இந்த ஜியோ போன் திட்டம் கொடுத்துள்ளது. ஒரு மாதத்துக்கு மட்டும் திட்டம் போதுமானால், ஜியோபோன் ரூ.223 திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதில் 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். ஆனால், தினசரிக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கும். ஆகவே, 56 ஜிபி டேட்டாவை பெறலாம். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள், அன்லிமிடெட் கால்கள் வருகிறது.
1 ஜிபி டேட்டா மட்டும் தினசரிக்கு போதுமானால், ஜியோபோன் ரூ.186 திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதில் நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கும். 28 நாட்கள் வேலிடிட்டியுடன் 28 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் தினமும் அனுப்ப கிடைக்கிறது. 500 எம்பி டேட்டாவுக்கு ஜியோபோன் ரூ.152 திட்டம் உள்ளது.
இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். நாளொன்றுக்கு 500 எம்பி டேட்டாவை பயன்படுத்த முடியும். மொத்தமாக 14 ஜிபி டேட்டாவை மட்டுமே பெற முடியும். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களின் சலுகையும் இந்த திட்டத்துக்கு கொடுக்கப்படுகிறது.
Credit: Gizbot
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications