ஜியோ (Jio) நிறுவனத்தின் போஸ்டுபெய்ட் கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கும் ரூ.449 விலை கொண்ட திட்டத்தில் 2 சதவீத ஜியோ கோல்டு (Jio Gold) கொடுக்கப்படுகிறது. ரூ.150 கூடுதல் செலவில் 3 ஃபேமிலி சிம் கார்டுகளுக்கு வாய்ஸ் கால்கள் மற்றும் டேட்டா சலுகைகளும் கொடுக்கப்படுகிறது. இந்த ஜியோபிளஸ் (JioPlus) போஸ்டுபெய்ட் திட்டத்தின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
ஜியோ ஃபைனான்ஸ் (Jio Finance) ஆப் வழியாக ரூ.10 விலைக்கும் ஜியோ கோல்டு விற்பனை செய்யப்படுகிறது. இதை டிஜிட்டலாக வாங்கி வைத்து கொள்ளலாம். எப்போது வேண்டுமானாலும் விற்பனை செய்து கொள்ளலாம். மார்கெட் விலையின் அடிப்படையில் வாங்குவது மற்றும் விற்பது நடக்கும். இதில் வாங்கும் டிஜிட்டல் கோல்டில் கூடுதலாக 2 சதவீத கோல்டு கொடுக்கப்படுகிறது.

ஜியோ நிறுவனத்தின் போஸ்ட்பெய்ட் கஸ்டமர்களுக்கு கிடைக்கும், ஜியோபிளஸ் ரூ.449 திட்டத்தை பெற்றால் போதும், இந்த கூடுதல் கோல்டு சலுகை கொடுக்கப்படும். ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கும் இந்த சலுகைகளை கொடுக்கப்பட்டது. ஆனால், இப்போது போஸ்ட்பெய்ட் கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. அதிலும் இந்த ரூ.449 திட்டமானது ஃபேமிலி சிம் கார்டுகளுக்கும் சலுகை கொடுக்கிறது.
ஜியோபிளஸ் ஃபேமிலி திட்டம் ரூ. 449 விவரங்கள் (JioPlus Family Plan Rs 449 Details): 3 ஃபேமிலி சிம் கார்டுகளை இந்த திட்டத்தில் இணைத்து கொள்ளலாம். ஒவ்வொரு சிம் கார்டுக்கும் ரூ.150 கூடுதலாக செலுத்தினால் போதும், அதாவது திட்டத்தின் விலை ரூ.449 ஆக இருக்கிறது. 3 சிம் கார்டுகளுக்கு ரூ.150 வீதம் ரூ.450 தேவைப்படுகிறது. ஆகவே, ரூ.899 இருந்தால் 4 சிம்களுக்கு சலுகை கிடைக்கும்.
பிரைமரி சிம் கார்டுக்கு அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Unlimited Local, STD & Roaming) கொடுக்கப்படும். மேலும், 75 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். இந்த டேட்டாவுக்கு பிறகு 1 ஜிபிக்கு ரூ.10 செலவு செய்து பயன்படுத்தலாம். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களையும் பிரைமரி சிம் கார்டு வைத்திருக்கும் கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம்.
ரூ.150 கூடுதலாக செலுத்தி ஃபேமிலி சிம் கார்டுகளை இணைக்கலாம். இப்படி இணைக்கப்படும் சிம் கார்டுகளுக்கும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி & ரோமிங் வாய்ஸ் கால்கள் கொடுக்கப்படும். 5 ஜிபி டேட்டா சலுகையும் கொடுக்கப்படும். இந்த சலுகைகள் மட்டுமல்லாமல், ஜியோ கோல்டு, ஜியோ ஹோம், ஜியோ ஏஐ கிளவுட் மற்றும் ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி சந்தா கொடுக்கப்படும்.
1. ஜியோ ஃபைனான்ஸ் ஆப் வழியாக ஜியோ கோல்டு வாங்கும்போது, அந்த மதிப்பில் இருந்து கூடுதலாக 2 சதவீத கோல்டு கொடுக்கப்படும். +91-8010000524 என்னும் எண்ணுக்கு மிஸ்ட் கால் கொடுத்து, இந்த சலுகையை போஸ்பெய்ட் கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம்.
2. வை-பை டேட்டா, வை-பை காலிங், லைவ் டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி ஆப்களின் சந்தாவை கொடுக்கும் ஜியோஹோம் (JioHome) திட்டத்தை 2 மாதங்களுக்கு இலவமாக பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கு ஜியோ ஃபைபர் மற்றும் ஜியோ ஏர்ஃபைபர் திட்டங்கள் கிடைக்கும் பகுதிகளில் கஸ்டமர்கள் இருக்க வேண்டும்.
3. மொபைல் மற்றும் டிவிகளில் பயன்படுத்தும்படி ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா கொடுக்கப்படும். இந்த சந்தாவை 3 மாதங்களுக்கு பயன்படுத்த முடியும். போஸ்பெய்ட் திட்டத்தின் பில் சைக்கிள் முடிந்த 48 மணி நேரத்துக்குள் அடுத்த பில் சைக்கிள்களுக்கு சென்றால் மட்டுமே இதை 3 மாதங்களுக்கு பயன்படுத்த முடியும்.
4. ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சலுகையை இந்த ஜியோபிளஸ் போஸ்ட்பெய்ட் திட்டம் கொடுத்துள்ளது. இதில் 50 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கும். இந்த சலுகைகள் போல கூடுதலாக அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையை இந்த போஸ்ட்பெஸ்ட் திட்டம் கொண்டுள்ளது.
Credit: Gizbot
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications