சென்னை: ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் இணைந்து நடிக்கும் படம் பற்றிய பேச்சுத்தான் கடந்த சில மாதங்களாகவே ஓடிக்கொண்டிருந்தது. முதலில் லோகேஷ் இயக்குவதாக இருந்தார். சில காரணங்களால் அவரால் இயக்க முடியாமல் போக; நெல்சன் திலீப்குமார் படத்தை இயக்குகிறார். அனிருத் இசையமைக்க; ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் இன்பநிதி படத்தை தயாரிக்கிறார். இந்நிலையில் அந்தப் படத்தின் ப்ரோமோ இப்போது வெளியாகியிருக்கிறது.
ரஜினியும், கமலும் இந்திய சினிமாவின் அடையாளங்களாக திகழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இரண்டு பேரும் திரைத்துறைக்கு வந்து பல வருடங்கள் ஆகியும்; இப்போதைய ஹீரோக்களுக்கும் போட்டியாக இருக்கிறார்கள். அவர்கள் தங்களது கரியர் ஆரம்பத்தில் பல படங்களில் சேர்ந்து நடித்தார்கள். பிறகு தங்களுக்குள்ளேயே ஒரு முடிவெடுத்து பிரிந்து தனித்தனியாக படம் செய்தார்கள். கிட்டத்தட்ட 40 வருடங்களாக அவர்கள் சேர்ந்து நடிக்காமல் இருந்தார்கள். எப்படியாவது அவர்கள் சேர்ந்து ஒரு படத்தில் நடிப்பதை பார்த்திட வேண்டும் என ரசிகர்கள் ஆவலோடு இருந்தார்கள்.
ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்: சுழல் இப்படி இருக்க ரஜினியும், கமலும் சேர்ந்து நடிக்கவிருப்பதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் ஓடின. ஆனால் அதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. இப்படிப்பட்ட சூழலில் இரண்டு பேரும் சேர்ந்து நடிக்கும் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குவார் எனவும்; இன்பநிதி தயாரிப்பார் எனவும் சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. இது ஒட்டுமொத்த இந்திய திரையுலகத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

40 வருடங்களுக்கு பிறகு: 40 வருடங்களுக்கு பிறகு அவர்கள் சேர்ந்து நடிப்பதன் காரணமாக படத்தில் என்ன மாதிரியான சம்பவம் எல்லாம் இருக்கும் என்ற பேச்சுக்களும் உருவாகின. முக்கியமாக இரண்டு பேருமே முழுக்க முழுக்க ஆக்ஷன் படங்களில் நடிக்க விரும்பவில்லை என்றும்; அதனால்தான் லோகேஷ் சொன்ன கதையை ரிஜெக்ட் செய்துவிட்டார்கள் எனவும் கூறப்படுகிறது. அதேசமயம் ஆக்ஷன், காமெடி இரண்டையும் கலந்து ஒரு படத்தை கொடுக்க பிளான் செய்ததால்தான்; நெல்சன் திலீப்குமாரை டிக் அடித்ததார்கள்.
இன்பநிதி கையால் சம்பளம் வாங்கும் ரஜினி, கமல்.. எல்லோரும் இப்படி ஓட்டுறாங்களே.. என்னங்க நடக்குது?
ப்ரோமோ ஷூட்: படத்தின் ப்ரோமோ ஷூட் சில வாரங்களுக்கு முன்பு சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் நடந்தது. தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக இது உருவாகிறது. நீண்ட நாட்களாகவே தமிழிலிருந்து ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்கும் படம் வராதா என்ற கேள்வி அனைவரிடமும் இருந்தது. அதனை இந்தப் படம் தீர்க்கும் என்ற நம்பிக்கையில் கோலிவுட் இருக்கிறது. சூழல் இப்படி இருக்க படத்தின் ப்ரோமோ இன்று வெளியாகும் என அறிவிப்பு வெளியானது.
வெளியானது KH X RK பட ப்ரோமோ: அதன்படி இன்று ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. மொத்தம் 3 நிமிடங்கள் 46 நொடிகள் ஓடும் இந்த ப்ரோமோவில் நெல்சன் திலீப்குமாரும், அனிருத்தும் ஆரம்பத்தில் வருகிறார்கள். அதனைத் தொடர்ந்து ரஜினியும், கமலும் ஒரு அறையில் தங்களுக்கான உடைகள், கூலிங் கிளாஸ், வாட்ச், ஷூ உள்ளிட்டவைகளை தேர்தெடுக்கிறார்கள். அதற்கு பிறகு அறையை திறந்து இரண்டு பேரும் நடந்து வரும்போது; கார் சாவியை ரஜினி ஸ்டைலாக கமலிடம் தூக்கி போட இரண்டு பேரும் காரில் ஏறி அமர்கிறார்கள்.
அப்போது அனிருத்தும், நெல்சனும் பின்னால் அமர்ந்திருக்க; இதில் யார் ஹீரோ என கமல் கேட்கிறார். கேட்குறாங்கள சொல்லுங்க ஜி என ரஜினி நெல்சனிடம் சொல்லி முடித்ததும்; கமல்ஹாசன் காரை ஸ்டார்ட் செய்து ஓட்டி செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த க்ளிம்ப்ஸை பார்த்த ரசிகர்கள் நீண்ட வருட ஏக்கம் தீர்ந்துவிட்டது. நிச்சயம் இப்படம் மெகா ஹிட்டடிக்கும் என சொல்லி அந்த வீடியோவை அதிகம் ஷேர் செய்து ட்ரெண்டாக்கிவருகிறார்கள்.
Credit: Filmibeat
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications