ஆதார் கார்டு வைத்து இருக்கும் ஒட்டுமொத்த குடிமக்களுக்கும் இந்திய அரசின் கீழ் செயல்படும் யுஐடிஏஐ (UIDAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) ஆனது புதிய விதிகளை அமலுக்கு கொண்டு வருகிறது. இந்த விதிகள் ஆதார் கார்டை ஜெராக்ஸ் எடுக்கும் ஒட்டுமொத்த பேருக்கும் பொருந்துகிறது. இந்த விதிகள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
ஆதார் கார்டு ஜெராக்ஸ் இருக்கா? இப்படி பல்வேறு இடங்களில் கேட்கப்படுகிறது. ஹோட்டல் புக்கிங் முதல் டிக்கெட் புக்கிங் வரையில் ஆதார் கார்டு ஜெராக்ஸ் தேவைப்படுகிறது. அது ஒரு அடையாள சான்றாக மட்டுமே பயன்படுகிறது. ஆனால், அதில் இருக்கும் போட்டோ, பிறந்த தேதி, மொபைல் நம்பர் மற்றும் ஈமெயில் போன்ற விவரங்கள் கூடுதல் தகவல்களாக அதில் இருக்கிறது.

இதை வைத்து பேங்க் அக்கவுண்ட், ஏடிஎம் பின் நம்பர் போன்றவற்றை யூகிக்கவும் இங்கு ஆள் இருக்கிறது. அதேபோல விருப்பம் இல்லையென்றாலும் இந்த தகவல்களை கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதையே புதிய ஆதார் விதிகள் (New Aadhaar Rules) மாற்ற இருக்கிறது. ஆதார் கார்டு ஜெராக்ஸ் கேட்கும் இடங்களில் கியூஆர் கோட் மட்டுமே கொடுக்கப்பட இருக்கிறது.
1. ஆதார் ஆப் அல்லது கியூஆர் கோட் வழியாக ஆதார் விவரங்களை பகிர்ந்து கொள்ளலாம். இந்த கியூஆர் கோட் வழியாக கொடுக்கப்படும் ஆதார் விவரங்கள் என்கிரிப்டெட் செய்யப்பட்டு இருக்கும். ஆகவே, டீமோகிராபிக் (Demographic) உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை பகிர முடியாது. அதேபோல அந்த கியூஆர் கோட் மூலம் வாங்குவோரும் இந்த தகவல்களை பெற முடியாது.
2. இது ஆப்லைனிலும் செய்து கொள்ளலாம். ஆதார் ஆப் மட்டுமே இருந்தால் போதும், வெரிபிகேஷனை முடிக்கலாம். இது ஆப் டு ஆப் (App to App) செயல்முறையாக இருக்கிறது. ஆகவே, யுஐடிஏஐ டேட்டாபேஸை அணுகாமல், எளிதாக செய்து முடிக்கலாம். இது ஆதார் அடிப்படையிலான வெரிபிகேஷன்களுக்கு (Aadhaar Based Verifications) பொருந்துகிறது.
3. இந்த விதிகள் ஹோட்டல்கள், டிராவல் ஏஜென்சிகள் உள்ளிட்ட ஆதார் தேவைப்படும் நிறுவனங்களுக்கு பொருந்தும். ஆகவே, இந்த நிறுவனங்கள் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திடம் தங்களை பதிவு செய்து கொள்ள இருக்கின்றன. இது முடிந்த பிறகு இந்த கியூஆர் கோட் மற்றும் ஆதார் ஆப் வழியான வெரிபிகேஷன்கள் மட்டுமே இருக்கும். ஜெராக்ஸ் அப்படியே நிறுத்தப்படும்.
மேலும், புதிய ஆதார் ஆப் வழியாக மொபைல் நம்பரை அப்டேட் (Mobile Number) அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுபோக முகவரி மாற்றம் (Address Update), பெயர் அப்டேட் (Name Update) மற்றும் ஈமெயில் அப்டேட் (Email Update) அம்சங்களும் கொண்டுவரப்பட இருக்கிறது. இப்போதைக்கு மொபைல் நம்பர் அப்டேட் கிடைக்கிறது. இதை எப்படி செய்யலாம்.
1. கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரில் ஆதார் ஆப் டவுன்லோட் செய்ய கிடைக்கிறது. இதை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். உங்களது ஆதார் நம்பர் கேட்கப்படும். அதை கொடுத்துவிட்டால், பேஸ் வெரிபிகேஷன் செய்யப்படும். ஆகவே, கேமரா இருக்கும் ஸ்மார்ட்போனில் இந்த ஆதார் ஆப்பை பயன்படுத்துங்கள்.
2. பேஸ் வெரிபிகேஷன் செய்த பிறகு மொபைல் நம்பர் வெரிபிகேஷன் செய்யப்படும். இதை செய்த பிறகு ஓப்பன் செய்து ஹோம் பேஜ்ஜில் இருக்கும் மை ஆதார் அப்டேட் (My Aadhaar Update) விருப்பத்துக்கு செல்லுங்கள். இதில் முதலாவதாக மொபைல் நம்பர் அப்டேட் இருக்கும். இதை கிளிக் செய்து தொடரவும் (Continue) கொடுங்கள்.
3. இப்போது, புதிய மொபைல் நம்பரை கொடுத்து வெரிபிகேஷன் செய்து கொள்ளுங்கள். இப்போது, பேஸ் ஆதன்டிகேஷன் இருக்கும். இதை செய்துவிட்டால் போதும், நம்பர் மாற்றம்படும். இந்த புது மொபைல் நம்பர் 30 நாட்களில் அப்டேட் செய்யப்படும். இதற்காக கட்டணம் இருக்கும். ஆதாருடன் எந்த நம்பரும் இணைக்கப்படாமல் இருந்தால், வேறு நம்பரை அப்டேட் செய்ய முடியாது.
Credit: Gizbot


Click it and Unblock the Notifications