ஜனவரி 2026 முதல் எல்லாமே மாறுது.. புதிய விதிகள்.. ஆதார் முதல் UPI வரை.. இதோ முழு விவரம்..

இந்த 2025 வருடம் முடிய இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன. அதாவது இன்னும் சில நாட்களில் 2026 புத்தாண்டு பிறக்கிறது. அதுவும் ஜனவரி 1 2026 முதல் பல்வேறு புதிய மாற்றங்கள் மற்றும் விதிமுறைகள் செயல்பாட்டுக்கு வருகிறது. இப்போது ஜனவரி 1, 2026 முதல் நடைமுறைக்கு வரவுள்ள முக்கிய மாற்றங்கள் என்னவென்று தற்போது இந்த பதிவில் பார்க்கலாம்.

1.ஆதார் மற்றும் பான் கார்டு: வரும் ஜனவரி 1 முதல் உங்களது வங்கி மற்றும் அரசு சேவைகளுக்கு பான்-ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்படுகிறது. குறிப்பாக பான் கார்டு (pan card) மற்றும் ஆதார் கார்டு (aadhaar card) இணைக்கப்படாவிட்டால் சேவைகள் மறுக்கப்பட வாய்ப்பு உள்ளது.


ஜனவரி 2026 முதல் எல்லாமே மாறுது..  புதிய விதிகள்..

இதுவரை பான் கார்டு தராமல் வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்கள் பான் கார்டு எடுத்து அதனை வங்கி கணக்குடன் இணைத்துவிடுங்கள். ஒருவேளை இணைக்காவிட்டால் ஒரு நாளைக்கு 49000க்கு மேல் பணப்பரிமாற்றம் செய்ய முடியாது.

2.கிரெடிட் ஸ்கோர் அப்டேட்: சிபில் போன்ற கிரெடிட் பீரோக்கள் உங்கள் கிரெடிட் ஸ்கோரை 15 நாட்களுக்கு ஒருமுறை என்பதற்குப் பதிலாக வாரந்தோறும் அப்டேட் செய்ய போகின்றன. அதுவும் 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றிய காரணத்தால் உங்களின் கடன் அப்டேட் வங்கிகளுக்குத் தெரியாமல் இருந்தது. ஆனால் இனி கடன் தகுதி மற்றும் கடன் வரலாறு குறித்த தகவல்கள் உடனுக்குடன் வங்கிகளுக்குத் தெரிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

3.யுபிஐ மற்றும் சிம் கார்டு: தற்போது இந்தியா முழுவதும் யுபிஐ (UPI) சேவையை தான் மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மோசடிகளைக் குறைக்க யுபிஐ மற்றும் வங்கி விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதுவும் வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் சிக்னல் போன்ற செயலிகள் மூலம் நடக்கும் மோசடிகளைத் தடுக்க சிம் சரிபார்ப்பு விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.


ஜனவரி 2026 முதல் எல்லாமே மாறுது..  புதிய விதிகள்..

4.சமூக ஊடகங்கள்: ஆஸ்திரேலியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் குழந்தைகளுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்தக் கட்டுப்பாடுகள் உள்ளன. இதுபோன்று இந்தியாவிலும் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குக் கடுமையான விதிகளைக் கொண்டுவருவது குறித்து அரசாங்கம் தற்போது பரிசீலித்து வருகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது.

5 போக்குவரத்து விதிகள்: பல்வேறு முக்கிய நகரங்களில் டீசல் மற்றும் பெட்ரோல் வணிக வானங்கள் நுழைவதைக் கட்டுப்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதுவும் மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் டெல்லி, நொய்டா போன்ற நகரங்களில் பெட்ரோல் வாகனங்களுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்பு உள்ளது.


ஜனவரி 2026 முதல் எல்லாமே மாறுது..  புதிய விதிகள்..

6.சிலிண்டர் விலை: எல்ஜிபி சமையல் எரிவாயு மற்றும் வணிக எரிவாயு சிலிண்டர்களின் புதிய விலைகள் ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும். மேலும் ஏரிபொருள் விலைகளில் ஏற்படும் மாற்றங்கள் விமான டிக்கெட் விலைகளையும் பாதிக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.

7. ரீசார்ஜ் கட்டணம் உயர்வு: ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள் குறைந்தபட்சம் 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த கட்டண உயர்வு 2026 புத்தாண்டு அமலுக்கு வரும் வகையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அறிவிப்பை வெளியிடலாம் என்று சொல்லப்படுகிறது.

Credit: Gizbot

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+