கார், ஜீப் மற்றும் வேன் வைத்து இருக்கும் உரிமையாளர்களுக்கு பிப்ரவரி 1 முதல் புதிய விதிகள் அமலுக்கு வர உள்ளன. இதில் இரண்டு முக்கிய மாற்றங்கள் அமல் செய்யப்பட இருக்கின்றன. புதிய ஃபாஸ்டேக் (FASTag) வாங்கும் வாகனங்களுக்கு நேரடி மாற்றத்தை இந்த விதிகள் கொண்டுவர உள்ளன. பழைய ஃபாஸ்டேக் வைத்திருக்கும் வாகனங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே மாற்றங்கள் பொருந்த உள்ளது. இந்த ஃபாஸ்டேக் விதிகள் குறித்த முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
பிப்ரவரி 1 முதல் கார், ஜீப் மற்றும் வேன் ஆகிய நான்கு சக்கர வாகனங்களுக்கு கேஒய்வி (KYV) என்கிற உங்கள் வாகனத்தைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள் (Know Your Vehicle) செயல்முறை நிறுத்தப்பட உள்ளது. ஆகவே, அந்த தேதியில் இருந்து கார், ஜீப் மற்றும் வேன் உரிமையாளர்கள் கேஒய்வி செயல்முறையை செய்ய வேண்டியது கிடையாது.

மேலும், ஏற்கனவே ஃபாஸ்டேக் வைத்திருக்கும் கார், ஜீப் மற்றும் வேன் உரிமையாளர்களும் கேஒய்வி செயல்முறையை செய்ய வேண்டியது கிடையாது. ஆனால், குறிப்பிட்ட சம்பவங்களின் போது மட்டுமே கேஒய்வி தேவைப்படும். அதாவது, காரின் விண்ட்ஷீல்டில் ஃபாஸ்டேக் ஸ்டிக்கரை ஒட்டாமல் இருந்தால் அல்லது ஃபாஸ்டேக்கை தவறவிட்டிருந்தால் தேவைப்படும்.
மேலும், தவறாக வழங்கப்பட்ட ஃபாஸ்டேக் அல்லது தவறாக பயன்படுத்தப்படும் ஃபாஸ்டேக் என்று புகார்கள் கொடுக்கப்படும் போதும் கேஒய்வி தேவைப்படும். எந்தப் புகாரும் இல்லாத பட்சத்தில், ஏற்கனவே உள்ள கார், ஜீப் மற்றும் வேன் ஃபாஸ்டேக்குகளுக்கு கேஒய்வி தேவையில்லை. ஆகவே, புகார்கள், சந்தேகங்கள் இல்லாதபட்சத்தில் கேஒய்வி இருக்காது.
இந்த புதிய விதிகளை என்எச்ஏஐ (NHAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (National Highways Authority of India) ஆனது அமலுக்கு கொண்டவர உள்ளது. கேஒய்வி இல்லாததால், ஃபாஸ்டேக்கை செயல்படுத்துவதற்கு முந்தைய செயல்முறைகள் வலுவாக இருக்கப் போகின்றன. வாஹான் (VAHAN) அடிப்படையிலான சரிபார்ப்பு கட்டாயமாக இருக்கும்.
வாகனத்தின் விவரங்கள் பதிவு செய்யப்படும் வாஹான் போர்டல் வழியாக சரிபார்ப்பு செயல்முறைகள் இருக்கும். இது ஃபாஸ்டேக் வழங்கப்படுவதற்கு முன்பாகவே செய்யப்பட்டுவிடும். ஆகவே, ஃபாஸ்டேக் வழங்கிய பிறகு எந்தவொரு வெரிபிகேஷன் செயல்முறைகளும் வாகனங்களுக்கு இருக்காது. குறிப்பிட்ட சம்பவங்களில் ஆர்சி புக் சரிபார்ப்பு செய்யப்பட உள்ளது.
அதாவது, வாகனத்தின் விவரங்கள் வாஹன் போர்டலில் கிடைக்காத நேரத்தில், ஆர்சி புக் அடிப்படையிலான சரிபார்ப்பு செய்யப்படும். இதை ஃபாஸ்டேக் கொடுக்கும் பேங்குகள் சரிபார்த்து கொள்ள வேண்டும். ஆன்லைன் வழியாக பெறப்பட்ட ஃபாஸ்டேக்குகளுக்கும் இது பொருந்தும். ஆகவே, பேங்குகளால் முழுமையாக சரிபார்க்கப்பட்ட பின்னரே ஃபாஸ்டேக் செயல்படுத்தப்படும்.
இந்த முக்கிய மாற்றங்களே பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளன. மேலும், ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கூடுதலாக சில விதிகள் அமலுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் இதை உறுதி செய்யவில்லை. இருப்பினும், இந்த விதிகள் அமலுக்கு வர வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது, டோல் கட்டணத்தை கையில் காசு கொடுத்து செலுத்த முடியாது. யுபிஐ பரிவர்த்தனைகள் அல்லது ஃபாஸ்டேக் அடிப்படையிலான பரிவர்த்தனைகளில் மட்டுமே செலுத்த அனுமதி கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, ஃபாஸ்டேக் மற்றும் யுபிஐ வழியாக டோல் கட்டணத்தை செலுத்தினால், கையில் கொடுக்கும் பணத்தைவிட குறைவாகவே செலுத்த வேண்டி இருக்கிறது.
இதனாலேயே டோல் கட்டணத்தை செலுத்த ஃபாஸ்டேக்களுக்கு கார், ஜீப் மற்றும் வேன் உரிமையாளர்கள் மாறிவருகின்றனர். இந்த நேரத்தில் கையில் பணத்தை கொடுத்து டோல் செலுத்த முடியாமல் போனால், வேறு வழியில்லாமல் ஃபாஸ்டேக் அல்லது யுபிஐ வழியாக செலுத்த வேண்டும். ஆனால், இந்த விதிகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரையில் நம்ப வேண்டாம்.
Credit: Gizbot
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications