டெல்லி: சுங்கச்சாவடி செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கும், வாகனங்களின் தடையற்ற இயக்கத்தை செயல்படுத்துவதற்கும், அரசு பல வழித்தடங்களில் இயங்கும் மின்னணு சுங்கச்சாவடி வசூல் முறையை செயல்படுத்த முடிவு செய்திருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார். இந்த எலக்ட்ரானிக் முறையில் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறை ஓராண்டுக்குள் அமல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் நிதன் கட்காரி உறுதியளித்தார்.
நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகள் விரைவில் அகற்ற வேண்டும் என்றும், வாகனங்கள் எந்தவித தடங்கலும் இல்லாமல் பயணிக்க வழிவகை செய்வதற்காக எலக்ட்ரானிக் முறையில் சுங்கக்கட்டணம் வசூல் திட்டத்தை கொண்டுவர வேண்டும் என்றும் மத்திய அரசு ஆர்வமாக உள்ளது. இந்த புதிய எலக்ட்ரானிக் முறை நடைமுறைக்கு வந்தால், வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசையில் நின்று காத்திருக்க வேண்டிய தேவை இருக்காது என்றும் இது போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் என்றும் மத்திய அரசு பலமாக நம்புகிறது.

இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த, GNSS என்ற தொழில் நுட்பம் (உலகளாவிய வழிசெலுத்தல் செயற்கைக்கோள் அமைப்பு) அல்லது வாகனங்களின் நம்பர் பிளேட்களைக் கண்காணிக்கும் கேமராக்கள் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது. இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சம் என்ன வென்றால், ஒரு வாகனம் தேசிய நெடுஞ்சாலையில் உண்மையில் எவ்வளவு தூரம் பயணிக்கிறதோ, அதற்குரிய கட்டணத்தை மட்டுமே செலுத்தினால் போதும். தற்போது, ஒரு சுங்கச்சாவடியைக் கடந்தால், அடுத்த சுங்கச்சாவடி வரையிலான முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டிய நிலை இருக்கிறது. இது முற்றிலும் மாறிவிடும்.
கோவை பீளமேட்டில் வந்து போன காதலன்.. தனியார் விடுதியில் இளம் பெண் இருந்த கோலம்
வாகனத்தின் ஜி.பி.எஸ் சாதனம் அல்லது பதிவு எண் மூலம் வாகனத்தின் பயணத்தை கண்காணித்து, கட்டணம் பயண தூரத்தின் அடிப்படையில் கணக்கிட்டு, வாகன உரிமையாளரின் வங்கி கணக்கில் இருந்து நேரடியாக வசூலிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த எலக்ட்ரானிக் முறையில் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறை ஓராண்டுக்குள் அமல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் நிதன் கட்காரி உறுதியளித்தார்.
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று சுங்கக்கட்டணம் வசூலிப்பது தொடர்பான உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி எழுத்து மூலம் பதிலளித்தார். அதில் அவர் கூறுகையில், சுங்கச்சாவடி முறை முடிவுக்கு வரும். சுங்கக்கட்டணத்துக்காக உங்களை யாரும் நிறுத்தப்போவது இல்லை. எலக்ட்ரானிக் முறையில் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் அமைப்பு நாடு முழுவதும் ஓராண்டுக்குள் அமல்படுத்தப்படும். இந்த வசதி தற்போது 10 இடங்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது நாடு முழுவதும் ஒராண்டுக்குள் விரிவுபடுத்தப்படும். இது நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு தடையற்ற அனுபவத்தை கொடுக்கும்.
எழும்பூருக்கு பதில் தாம்பரம்.. உழவன், அனந்தபுரி, சேது உள்ளிட்ட ரயில்கள் சேவையில் மீண்டும் மாற்றம்
மேலும் நெரிசலைக் குறைத்தல், கட்டண மையங்களில் தாமதங்களை நீக்குதல் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஒட்டுமொத்த பயனர் அனுபவத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு பயனாளர் கட்டண வசூலுக்கான புதுமையான முறைகளை அறிமுகப்படுத்தவும் அரசு முடிவு செய்துள்ளது.
சுங்கச்சாவடி செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கும், வாகனங்களின் தடையற்ற இயக்கத்தை செயல்படுத்துவதற்கும், அரசு பல வழித்தடங்களில் இயங்கும் மின்னணு சுங்கச்சாவடி வசூல் முறையை செயல்படுத்த முடிவு செய்துள்ளது, இது செயற்கை நுண்ணறிவு பகுப்பாய்வுடன் தானியங்கி பதிவெண் அடையாளம் காணுதல் மற்றும் மின்னணு சுங்கச்சாவடி வசூல் (பாஸ்டாக்) உள்ளிட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தடையற்ற சுங்கச்சாவடிகளை எளிதாக்குகிறது" இவ்வாறு கூறினார்.
முன்னதாக நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க வசூலை நெறிப்படுத்த, எலக்ட்ரானிக் சுங்கக் கட்டணங்களுக்கான ஒருங்கிணைந்த, ஒன்றோடொன்று இயங்கக்கூடிய தளமான தேசிய எலக்ட்ரானிக் சுங்கக்கட்டண வசூல் திட்டத்தை தேசிய கொடுப்பனவு கழகம் உருவாக்கி இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.
Credit: Oneindia


Click it and Unblock the Notifications