ஏஐ (AI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸின் (Artificial Intelligence) அபார வளர்ச்சிக்கு எப்படி எல்லையே இல்லையோ, அதே போலத்தான் - ஒப்பன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி மற்றும் கூகுள் நிறுவனத்தின் ஜெமினி (ChatGPT VS Gemini) ஆகிய இரண்டிற்க்குமான போட்டியும் மோதலும்!
சாட்ஜிபிடி "பூண்டு" வெர்ஷன்: அதனொரு பகுதியாக சிஇஓ சாம் ஆல்ட்மேன் (Sam Altman) தலைமையிலான ஓப்பன்ஏஐ நிறுவனமானது ஒரு புதிய லார்ஜ் லேங்குவேஜ் மாடலில் (Large language model - LLM) செயல்பட்டு வருவதாகவும், அது கார்லிக் (Garlic) என்கிற.. அதாவது "பூண்டு" என்கிற குறியீட்டு பெயரின் கீழ் உருவாக்கப்படுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

என்ன ஸ்பெஷல்? சாட்ஜிபிடி-க்கான இந்த புதிய எல்எல்எம் - கோடிங் மற்றும் பகுத்தறிவு பணிகள் போன்ற பயன்பாட்டு நிகழ்வுகளில், தனது போட்டியாளர்களை விட சிறப்பாக செயல்படுவதாக கூறப்படுகிறது. மேலும் இது பயோமெடிசின் மற்றும் ஹெல்த்கேர் போன்ற சிறப்பு உயர் மதிப்புள்ள தொழில்களில் நிறுவனத்தின் மூலோபாய நகர்வையும் குறிக்கிறது என்றும் கூறப்படுகிறது. சுருக்கமாக இந்த கார்லிக் மாடல் ஆனது "பொதுவான" ஏஐ-யில் இருந்து "சிறப்பான" ஏஐ பயன்பாடுகளுக்கு மாறுகிறது என்று கூறலாம்.
கார்லிக் Vs ஜெமினி 3: ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் தலைமை ஆராய்ச்சி அதிகாரி ஆன மார்க் சென், கூகுளின் ஜெமினி 3 மற்றும் ஆந்த்ரோபிக்கின் கிளாட் ஓபஸ் 4.5 உடன் ஒப்பிடும்போது, இந்த மாடல் உள் மதிப்பீடுகளில் சிறப்பாக செயல்பட்டு வருவதாக தனது சக ஊழியர்களிடம் கூறி உள்ளாராம். குறிப்பாக கோடிங் மற்றும் பகுத்தறிவு திறன்களில் சிறப்பாக செயல்படுகிறதாம்.
எப்போது அறிமுகம்? ஓப்பன்ஏஐ நிறுவனமானது வருகிற 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அதன் புதிய கார்லிக் மாடலை ஜிடிபிடி 5.2 அல்லது ஜிபிடி 5.5 ஆக அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாட்ஜிபிடி-ஐ மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்குமாறு சிஇஓ சாம் ஆல்ட்மேன் ஒரு உள் குறிப்பில் ஊழியர்களை வலியுறுத்தியதாக வெளியான தகவலை தொடர்ந்தே கார்லிக் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
கூகுள் செய்த வேலையால் அவசரம் காட்டும் ஓப்பன் ஏஐ: கடந்த நவம்பர் 18 அன்று கூகுள் நிறுவனம் அதன் ஜெமினி 3 வெர்ஷனை வெளியிட்டு - அதன் சுற்றுச்சூழல் அமைப்பில் அதை ஒருங்கிணைத்து, ஏஐ நிலப்பரப்பில் ஒரு வியத்தகு மாற்றத்தை கொண்டுவந்தது. ஆக ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் இந்த அவசர உணர்வை நம்மால் தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது
ஜெமினி 3 என்பது கூகுளின் வேகமான வெளியீடு (Fastest-ever rollout) என்று கூறப்படுகிறது. மேலும் இந்த மாடல் இமேஜ் எடிட்டிங், டெக்ஸ்ட் ஜெனெரஷன் மற்றும் மல்டிமாடல் பகுத்தறிவுக்கான பெஞ்ச்மார்க் லீடர்போர்டுகளில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது. இதேபோல், ஆந்த்ரோபிக் ஆனது கடந்த மாதம் அதன் கிளாட் ஓபஸ் 4.5-ஐ வெளியிட்டது, இது கோட்டிங்-க்கான உலகின் சிறந்த மாடல் என்றுஅந்நிறுவனம் கூறுகிறது
ஒருவேளை ஓப்பன்ஏஐ-யின் கவலைக்கு முக்கிய காரணம் அதன் குறைந்து வரும் டிராஃபிக் (பயன்பாடு) ஆக கூட இருக்கலாம். கலிபோர்னியாவின் பாலோ ஆல்டோவை சேர்ந்த தொழில்முனைவோரான டீடி தாஸ் கூறுகையில், ஜெமினி 3 அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு வாரங்களில், சாட்ஜிபிடி-யின் தனித்துவமான டெய்லி ஆக்டிவ் யூசர்கள் (7-நாள் சராசரி) மைனஸ் 6 சதவீதம் ஆக குறைந்துள்ளனர்.
கடந்த ஜூலையில் 450 மில்லியனாக இருந்த கூகுளின் ஜெமினி ஆப்பின் மன்த்லி ஆக்டிவ் யூசர்களின் எண்ணிக்கை அக்டோபரில் 650 மில்லியன் ஆக வளர்ந்துள்ளதாக ஃபார்ச்சூன் பத்திரிகையின் ஒரு சமீபத்திய அறிக்கை கூறுவதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஆக 2026 ஆம் ஆண்டு போட்டிகள் இன்னும் சூடுபிடிக்கும், இன்னும் பலமானதாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்!
Credit: Gizbot
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications