ஓப்போ நிறுவனத்தின் ஏ சீரிஸ் மாடல்கள் மலிவான விலைக்கு கிடைப்பதால் நல்ல வரவேற்பை பெறுகின்றன. இப்போது, 14 சதவீத தள்ளுபடி விலையில் ஓப்போ ஏ6எக்ஸ் 5ஜி (OPPO A6x 5G) ஸ்மார்ட்போன் வாங்க கிடைக்கிறது. 6500mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் பீச்சர்களை கொண்டுள்ளது. இந்த ஓப்போ ஏ6எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் தள்ளுபடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இப்போது, அமேசான் தளத்தில் 14 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.12,499 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், ரூ.374 தள்ளுபடி தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுக்கு கிடைக்கிறது. மேலும், மலிவாக வாங்கி கொள்ளலாம். ரூ.11,850 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் கிடைத்துள்ளது.

ஓப்போ ஏ6எக்ஸ் 5ஜி அம்சங்கள் (OPPO A6x 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட்டை இந்த ஓப்போ ஏ6எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும், ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (ARM Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) கொடுக்கப்பட்டு உள்ளது.
ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) உள்ளது. கலர்ஓஎஸ் 15 கிடைப்பதால், ஏஐ கேம்பூஸ்ட் 2.0 (AI GameBoos 2.0), ஏஐ லிங்க்பூஸ்ட் 3.0 (AI LinkBoost 3.0) கிடைத்துள்ளது. மேலும், அவுட்டோர் மோட் 2.0 (Outdoor Mode 2.0) மற்றும் க்ளோவ் டச் (Glove Touch) சப்போர்ட் கொண்ட 6.7 இன்ச் (1604 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைத்துள்ளது. மேலும், எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் உள்ளது.
120 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1152 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைத்துள்ளது. IP64 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் (Water & Dust Resistance) இந்த ஓப்போ ஏ6எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிறது. 13 எம்பி அல்ட்ரா கிளியர் மெயின் கேமரா கொண்டுள்ளது. போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), ஏஐ போர்ட்ராய்டு ரீடச்சிங் (AI Portrait Retouching) கிடைத்துள்ளது.
மேலும், ஏஐ பர்பெக்ட் ஷாட் (AI Perpect Shot), ஏஐ ரீகம்போஸ் (AI Recompose) மற்றும் ஏஐ எரைசர் 2.0 (AI Eraser 2.0) கொடுக்கப்பட்டு உள்ளது. செல்பீகள் மற்றும் வீடியோ கால்களை கொடுக்க 5 எம்பி செல்பீ ஷூட்டரை இந்த ஓப்போ ஏ6எக்ஸ் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. ஓப்போ ஸ்மார்ட்போன்களுக்கு வழக்கமாக கிடைக்கும் டிரினிட்டி என்ஜின் (Trinity Engine) கிடைக்கிறது.
லுமினஸ் ரெண்டரிங் என்ஜின் (Luminous Rendering Engine) கொடுக்கப்பட்டுள்ளது. 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6500mAh பேட்டரி கொடுத்துள்ளது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சாரை இந்த ஓப்போ ஏ6எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. வை-பை 802.11 ஏசி (Wi-Fi 802.11 ac), ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1) மற்றும் ஜிபிஎஸ் (GPS) கனெக்டிவி்ட்டி கொடுத்துள்ளது.
5ஜி என்ஏ / என்எஸ்ஏ (5G NA / NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கனெக்டிவிட்டி கிடைத்துள்ளது. ஐஸ் ப்ளூ (Ice Blue) மற்றும் ஆலிவ் கிரீன் (Olive Green) ஆகிய கலர்களில் கிடைக்கிறது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட் மட்டுமல்லாமல், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்களும் கிடைக்கின்றன.
Credit: Gizbot
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications