பான் கார்டு ரெடியா வச்சுக்கோங்க.. இனி இதற்கெல்லாம் தேவைப்படும்.. வெளியானது புதிய விதிகள்.. இதோ முழு விவரம்!

இந்தியாவில் ஆதார் போன்று பான் கார்டும் (PAN Card) மிகவும் முக்கியமான ஆவணம் ஆகும். அதுவும் மக்கள் வங்கி சேவைகளைப் பெறுவதற்கு தற்போது ஆதார் மற்றும் பான் கார்டு முக்கியமான ஆவணங்களான இருக்கின்றன. இந்நிலையில் பான் கார்டு குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது ஒரு நாளைக்கு ரூ.50000-க்கு மேல் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்தால், பான் கார்டு விவரங்களை வங்கிகள் கேட்கும். ஆனால் பணத்தை டெபாசிட் செய்யும் போது பான் கார்டை வங்கிகள் கேட்பதில்லை.


பான் கார்டு ரெடியா வச்சுக்கோங்க.. இனி இதற்கெல்லாம் தேவைப்படும்..

இந்த நிலையில் ஒரு நிதியாண்டில் ரூ.10 லட்சத்திற்கும் மேலான பணத்தை டெபாசிட் செய்தாலோ அல்லது வங்கி கணக்கில் இருந்து எடுத்தாலோ பான் கார்டு சமர்ப்பிக்க வேண்டும் என்று வருமான வரித்துறை ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது 2025-2026 நிதியாண்டு வருகின்ற மார்ச் 31-ம் தேதி முடிவடையும் நிலையில் 2026-2027 நிதியாண்டுக்கான வருமான வரி வரைவு விதிகளை இன்று வெளியிட்டுள்ளது வருமான வரித்துறை.

இப்போது நடைமுறையில் உள்ள வருமான வரிச் சட்டம் 1961-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. எனவே தான் தற்போதைய காலத்திற்கு ஏற்ற வகையில் வருமான வரிச் சட்டங்களைப் புதுப்பிக்க கடந்த ஆண்டு ஆண்டு நாடாளுமன்றத்தில் புதிய வருமான வரி மசோதா நிறைவேற்றப்பட்டது.

மேலும் மக்களின் கருத்துகளையும் கேட்க வேண்டும் என்பதற்காக, புதிய வருமான வரி விதிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இப்போது வரைவு விதிகள் வெளியாகி உள்ள நிலையில் மார்ச் முதல் வாரத்தில் இறுதியான புதிய வருமான வரிச் சட்டம் விதிகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் இந்த புதிய வருமான வரிச் சட்டம் வரும் ஏப்ரல் 1-ம தேதி முதல் அமலுக்கு வரும். அதுவும் வருமான வரிச் சட்டத்தில் உள்ள 511 விதிகள் 333 ஆக குறைக்கப்படும் என்று தவல்கள் வெளியாகி உள்ளது. இதுதவிர 399 படிவங்கள் 190 படிவங்களாக குறைக்கப்பட்டுள்ளது. சரி இப்போது இதன் முக்கிய அம்சங்களைப் பார்க்கலாம்.

1. வருமான வரி விதி 2026-ன் படி, ஒரு நபர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வங்கி கணக்குகளில் இருந்து ஒரு நிதியாண்டில் ரூ,10 லட்சத்திற்கும் மேல் பணத்தை எடுத்தாலோ அல்லது டெபாசிட் செய்தாலோ பான் கார்டை சமர்ப்பிக்க வேண்டும்.

2.அதுவே ரூ.10 லட்சத்திற்கும் குறைவான பரிவர்த்தனைகள் மேற்கொண்டால், பான் கார்டை சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இனிமேல் இருக்காது.

3. குறிப்பாக ஒரு நிதியாண்டில் ரூ.10 லட்சத்திற்கும் மேலான பணப் பரிவர்த்தனைகள் நிகழும் வங்கிக் கணக்கு விவரங்களை, வருமான வரித் துறையிடம் வங்கிகள் சமர்ப்பிக்கும்.

4. இனிமேல் ரூ.5 லட்சத்திற்கும் மேலான இருசக்கர வாகனங்களை வாங்கினால் பான் கார்டை சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் ஆகும். அதேபோல் கார் வாங்கினாலும் பான் கார்டு கட்டாயம் ஆகும்.

5. ஹோட்டல் பில் தொகை இதற்கு முன்பு வரை ரூ.50000-ஐ கடந்தால் பான் கார்டு சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் தற்போது இந்த பில் தொகை ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.


பான் கார்டு ரெடியா வச்சுக்கோங்க.. இனி இதற்கெல்லாம் தேவைப்படும்..

6. அசையா சொத்துக்களை வாங்குவதற்கும் விற்பதற்குமான உச்ச வரம்பு ரூ.20 லட்சத்தைக் கடந்தால் மட்டுமே இனி பான் கார்டு சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு முன்பு உச்சவரம்பு ரூ.10 லட்சம் ஆக இருந்தது.

7. குறிப்பாக காப்பீடுகளை எடுக்கும் போதும், கிரிப்டோ கரன்சி பணப் பரிமாற்றத்திற்கும் பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல் கிரிப்டோ கரன்சி பணப் பரிமாற்றங்கள் அனைத்தும் இனி வருமான வரித் துறைக்கு தெரிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Credit: Gizbot

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+