ஏற்கனவே 2026 ஆம் ஆண்டானது - ஆதார், பான் கார்டு தொடங்கி பேங்க் அக்கவுண்ட், சிம் கார்டு, வருமான வரி வரையிலாக - எக்கச்சக்கமான புதிய விதிகள், புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் புதிய மாற்றங்களால் நிரம்பி வழிகிறது. இதற்கிடையில்யுபிஐ (UPI) சேவையிலும் ஒரு முக்கிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அது என்ன மாற்றம்? யுபிஐ என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகத்தில் (Unified Payments Interface) உள்ள புல் பேமெண்ட் (Pull Payment) அம்சத்தை நிறுத்துவதற்கான காலக்கெடுவை மேலும் நீட்டிப்பது குறித்து இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) ஆலோசித்து வருவதாக தொழில்துறை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர் (எக்கனாமிக் டைம்ஸ் அறிக்கையின்படி).

பெரும்பாலான பெரிய பேமண்ட் ஆப்கள் ஆனது பி2பி (P2P) என்கிற இரண்டு நபர்களுக்கு இடையேயான பண பரிவர்த்தனைகளில் புல் பேமண்ட் அம்சத்தை நிறுத்திவிட்டாலும் கூட, சில வணிகர்கள் இந்த வழியில் (அதாவது புல் பேமண்ட் வழியில்) யுபிஐ கட்டணங்களை செயல்படுத்துவதை தொடர்கின்றனர்.
புல் பேமண்ட் என்றால் என்ன? புல் பேமண்ட் என்பது கலெக்ட் ரிக்வெஸ்ட் (Collect Request) என்றும் அழைக்கப்படுகிறது, இதுவும் ஒரு வகையான யுபிஐ பேமண்ட் அம்சம் ஆகும். இதில் அனுப்புநருக்கு பதிலாக பெறுநர் பரிவர்த்தனையை தொடங்குகிறார். கட்டணக் கோரிக்கை தொடங்கப்பட்டதும், அனுப்புநர் தனது யுபிஐ பின்னை உள்ளிட்டு அதை அங்கீகரிப்பார்.
இருப்பினும், இந்த வகை பணப்பரிமாற்றம் ஆனது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நுகர்வோரை ஏமாற்றும் நோக்கத்தின் கீழ் மோசடி செய்பவர்களால் பயன்படுத்தபட்டதை தொடர்ந்து - புல் பேமண்ட் அம்சம் - ஒரு சிக்கலாக மாறியது. முன்னரே குறிப்பிட்டபடி பெரும்பாலான பெரிய ஆப்கள் பி2பி கட்டணங்களுக்கு இதை நிறுத்திவிட்டன.
இருப்பினும், சில சிறிய பிராண்டுகள் மற்றும் வணிகர்கள் இன்னும் இதை பயன்படுத்துகின்றனர், மேலும் அவற்றை க்யூஆர் கோட்களுக்கு சீராக நகர்த்த முடியும் என்பதை உறுதிசெய்ய, புல் பேமண்ட் அம்சத்தின் நிறுத்தத்திற்கு இன்னும் சிறிது நேரம் தேவைப்படலாம் என்று யுபிஐ அடிப்படையிலான கட்டண நிறுவனத்தின் நிறுவனர் ஒருவர் கூறி உள்ளதாகவும் எகானாமிக் டைம்ஸ் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
2026 இல் அமலுக்கு வந்த மற்ற புதிய விதிகள்: கட்டாய பான்-ஆதார் இணைப்பிற்கான காலக்கெடு முடிந்தது. ஒருவேளை நீங்கள் இன்னமும் உங்கள் பான் மற்றும் ஆதாரை இன்னும் இணைக்கவில்லை என்றால், வங்கி மற்றும் அரசு சேவைகளில் சிக்கல்களை சந்திக்க நேரிடும். மேலும் டிசம்பர் 31, 2025, 7வது ஊதியக் குழுவின் பதவிக்காலம் முடிவடைகிறது.
8வது ஊதியக் குழு ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வர உள்ளது. ஆக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்கள் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம். இதேபோல கிரெடிட் கார்டிலும் ஒரு மாற்றம் வந்துள்ளது. தற்போதைய 15 நாள் சுழற்சிக்கு பதிலாக, கிரெடிட் பீரோக்கள் இப்போது ஒவ்வொரு வாரமும் வாடிக்கையாளர் தரவை புதுப்பிக்கும்.
இதன் பொருள் கடன் திருப்பி செலுத்துதல்கள் அல்லது தவணை தவறுகள் உங்கள் கிரெடிட் ஸ்கோரில் மிக வேகமாகப் பிரதிபலிக்கும், இது கடன் தகுதியை நேரடியாக பாதிக்கும். மிகவும் முக்கியமான 2026 இல் புதிய வருமான வரி ரிட்டர்ன் (ஐடிஆர்) படிவங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இது வங்கி மற்றும் செலவு விவரங்களுடன் முன்பே நிரப்பப்படும். இந்த நடவடிக்கை தாக்கல் செயல்முறையை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் மோசடிகளை தடுக்க, வங்கிகள் ஆனது யுபிஐ பரிவர்த்தனைகளில் கடுமையான சோதனைகளையும், வாட்ஸ்அப் (WhatsApp) மற்றும் டெலிகிராம் (Telegram) போன்ற மெசேஜிங் பிளாட்ஃபார்ம் ஆப்களுக்கான மிகவும் வலுவான சிம் சரிபார்ப்பு சரிபார்ப்பு விதிமுறைகளையும் செயல்பட உள்ளன. கடைசியாக ஆர்பிஐ-யின் புதுப்பிக்கப்பட்ட இணை கடன் கட்டமைப்பின்படி, நியாயமான இடர் பகிர்வை (fair risk-sharing) உறுதி செய்வதற்காக, ஒவ்வொரு கடன் வழங்குநரும் கடனில் குறைந்தது 10% ஐ தங்கள் சொந்த கணக்கில் வைத்திருக்க வேண்டும் என்கிற விதியும் அமலுக்கு வந்துள்ளது.
Credit: Gizbot


Click it and Unblock the Notifications