சென்னை: ரஜினிகாந்த்துக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அவர்களில் மூத்தவரான ஐஸ்வர்யா 3, வை ராஜா வை, லால் சலாம் ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். இரண்டாவது மகளான சௌந்தர்யா கோச்சடையான் படத்தை இயக்கினார்.மேலும் கோவா படத்தை தயாரித்திருந்தார். இந்நிலையில் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா உள்ளிட்டோரை வைத்து இப்போது வித் லவ் என்ற படத்தை தயாரித்திருக்கிறார். படம் இன்று ரிலீஸாகவுள்ளது.
ரஜினிகாந்த்துக்கு மொத்தம் இரண்டு மகள்கள். மூத்த மகளான ஐஸ்வர்யா காதல் கொண்டேன் பட சமயத்தில் தனுஷுடன் பழகி காதலித்தார். வீட்டு சம்மதத்துடன் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணமும் செய்துகொண்டார். மொத்தம் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை சில வருடங்களுக்கு முன்பு விவாகரத்தில் முடிந்தது. மகன்களை அவர்கள் கோ பேரண்ட்டிங் முறையில் வளர்த்துவருகிறார்கள்.
இயக்குநர் ஐஸ்வர்யா: இதற்கிடையே தனுஷுடன் திருமண உறவில் இருந்தபோது தனது இயக்குநர் ஆகும் ஆசையை நிறைவேற்றிக்கொண்டார். அதன்படி 3 படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். தனுஷே ஹீரோவாகவும் நடித்துக்கொடுத்தார். படம் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. அதேசமயம் விமர்சன ரீதியாக ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. தொடர்ந்து வை ராஜா வை, லால் சலாம் ஆகிய படங்களை இயக்கினார். இந்தப் படங்களும் தோல்வியைத்தான் சந்தித்தன. ஆனால் இயக்குநராக அவரது வேலைகள் ரசிக்கும்படி இருந்தன.

இயக்குநர் டூ தயாரிப்பாளர்: அதேபோல் இரண்டாவது மகளான சௌந்தர்யாவும் தனது அக்கா மாதிரியே கேமராவுக்கு பின்னால்தான் ஜொலிக்கிறார். அன்பே ஆருயிரே, சந்திரமுகி உள்ளிட்ட பல படங்களுக்கு டைட்டில் டிசைனிங் செய்த அவர்; தொழில்நுட்பங்கள் பெரிதாக வளராத காலத்திலேயே மோஷன் கேப்சர் டெக்னாலஜியில் கோச்சடையான் படத்தை இயக்கியிருந்தார். படம் படுதோல்விதான். அதேசமயம் டெக்னாலஜி வளர்ச்சி உச்சத்தில் இருக்கக்கூடிய இப்போதைய காலத்தில் வந்திருந்தால் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கும்.
ஹீரோயின் சிவாங்கி காதலில் விழுந்தாரா? கன்னத்தோடு கன்னம் வச்சு ஓவர் நெருக்கம்.. ஓ கதை அப்படி போகுதா?
கோவா, வித் லவ்: இயக்குநர், டைட்டில் டிசைனிங் மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் ஜொலிக்கிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் கோவா படத்தை தயாரித்து கையில் சூடுபோட்டுக்கொண்ட அவர்; இப்போது டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்தை ஹீரோவாகவும், மலையாள நடிகை அனஸ்வராவை ஹீரோயினாகவும் வைத்து வித் லவ் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இதனை மதன் என்பவர் இயக்கியிருக்கிறார். படமானது இன்று ரிலீஸாகவுள்ளது.
லதா சொன்ன வாழ்த்து: மேலும் சில நாட்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களுக்கான காட்சி திரையிடப்பட்டது. அதேபோல் ரஜினிகாந்த்துக்கும் ப்ரீமியர் காட்சி போடப்பட்டது. படம் பார்த்த ரஜினி முதற்கொண்டு அனைவருமே படத்துக்கு தங்களது பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்தார்கள். இந்நிலையில் படம் இன்று வெளியாகும் சூழலில்; சௌந்தர்யாவின் தாயான லதா ரஜினிகாந்த் பாடல் ஒன்றை பாடி படத்துக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அந்த வீடியோ சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியிருக்கிறது.
Credit: Filmibeat
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications