தமிழ்நாட்டில் 98.45 லட்சம் முன்னுரிமை ரேஷன் கார்டுகளில் (PHH) சுமார் 3 கோடி உறுப்பினர்களும், 18.64 லட்சம் அந்தியோதயா ரேஷன் கார்டுகளில் (AAY) 62.88 லட்சம் பேரும் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த இரண்டு கார்டுதாரர்களுக்கான அரிசி ஒதுக்கீட்டில், குறிப்பிட்ட அளவுக்கு கோதுமையை தேசிய ஒதுக்கீட்டின் கீழ் மத்திய அரசு இலவசமாக வழங்குகிறது.
ரேஷன் கார்டு வைத்து இருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
இந்நிலையில் முன்னுரிமை மற்றும் அந்தியோதயா ரேஷன் வைத்திருக்கும் மக்களுக்கு ஆதார் சரிபார்ப்பு வாயிலாக பாயணிட் ஆப் சேல் என்ற விற்பனை முனைய கருவியில் விரல் ரேகையை வைத்து உண்மைத் தன்மையை உறுதி செய்யுமாறு மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது.

குறிப்பாக 36 லட்சம் பேர் இன்னும் விரல் ரேகையை பதிவு செய்யாமல் உள்ளனர். இதையடுத்து இந்த பணியை வேகமாக முடிக்குமாறு மத்திய அரசு தற்போது அறிவுறுத்தி உள்ளது. மேலும் இதுகுறித்து உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கூறியது என்னவென்றால், விரல் ரேகை பதிவு செய்யும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதனை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதனை குறிப்பிட்ட காலக்கட்டத்துக்குள் முடிக்க வேண்டும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயிக்கவில்லை என்று கூறியுள்ளனர்.
ஆதார் அப்டேட்
மேலும் ஆதார் ஆணையம் சமீபத்தில் ஆதார் கார்டு பெயர் மாற்றம் செய்ய எந்தெந்த ஆவணங்கள் செல்லும் என்று அறிவிப்பு வெளியிட்டது. இது குறித்த தகவல்களையும் இங்கே பார்க்கலாம்.
சமீபத்தில் ஆதார் அட்டையில் பெயர் திருத்தம் மேற்கொள்ள இனிமேல் பான் (PAN) கார்டு சரியான ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்படாது என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தெரிவித்துள்ளது. அதுவும் ஆதார் கார்டில் திருத்தம் மேற்கொண்டால், அப்டேட் செய்யப்பட பல நாட்கள் எடுத்துக் கொள்ளும் நிலையில் இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக ஆதார் அட்டையில் சில தவறுகள் ஏதேனும் இருக்கும் பட்சத்தில், பொதுமக்கள் அதிக சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதன் காரணமாகவே ஆதார் அட்டையில் பெயர் திருத்தம், முகவரி திருத்தம், பிறந்த தேதி, புகைப்படங்களை மாற்றுதல் போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன.
அதுவும் ஆதார் கார்டு திருத்தங்களை விரைந்து மேற்கொள்ள இந்தியா முழுவதும் ஆதார் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர அஞ்சல் அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் பள்ளி கூடங்களில் ஆதார் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மக்கள் தற்போது இந்த ஆதார் சேவை மையங்களை அணுகி தான் திருத்தத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆதார் கார்டில் பெயர் திருத்தம் மேற்கொள் பான் கார்டு முக்கிய ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்தது, ஏனெனில் மத்திய அரசு வழங்கும் பான் கார்டில் பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி, புகைப்படம் போன்றவை இருக்கும். இந்த நிலையில் ஆதார் கார்டில் பெயர் திருத்தம் மேற்கொள்ள சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களில் இருந்து பான் கார்டை நீக்கியுள்ளது ஆதார் ஆணையம். எனவே இனிமேல் பான் கார்டை கொண்டு பொதுமக்கள் பெயர் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள முடியாது.

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வெளியிட்ட அறிக்கையில், பான் கார்டில் முகவரி ஆதாரங்கள் இல்லாத காரணத்தால், அவணப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதுவும் பான் கார் என்பது ஒரு வரிவிதிப்பு தொடர்பான ஆவணம் மட்டுமே, ஒரு நபரின் நபரின் அடையாளம் மற்றும் முகவரியை நிரூபிக்கும் ஆவணம் அல்ல. ஆகையால் தான் பான் கார்டை ஆவணப் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளோம்.
ஆகவே வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் ரேஷன்கார்டு, ஓட்டுநர் உரிமம், புகைப்படத்துடன் கூடிய சாதி சான்றிதழ், மத்திய, மாநில அரசுகள் வழங்கும் அடையாள அட்டை மதிப்பெண் சான்றிதழ் போன்ற ஆவணங்களை ஆதார் கார்டு திருத்தத்தை மேற்கொள்ள சமர்பிக்கலாம் என்று ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.
Credit: Gizbot
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications