அடுத்த 30 நாட்கள்.. ரூ.75 கொடுத்து உடனே இதை பண்ணிடுங்க.. ஆதார் கார்டு வைத்து இருப்பவர்கள் மொபைலில் செய்யலாம்!

இந்தியாவில் ஆதார் கார்டு வைத்து இருந்தால் மட்டுமே முக்கிய சேவைகளை பெற முடிகிறது. இதற்கு கட்டாயமாக ஆதார் எண்ணுடன் சரியான மொபைல் நம்பரை லிங்க் செய்திருக்க வேண்டும். இப்படி செய்யாமல் இருந்தால், ரூ.75 கட்டணம் செலுத்தி இதை கட்டாயம் செய்ய வேண்டி இருக்கும்.

ஆதார் கார்டில் (Aadhaar Card) மொபைல் நம்பரை லிங்க் செய்ய ஆதார் சென்டருக்கு செல்ல வேண்டிய இருந்தது. இப்போது, ஆதார் ஆப் வழியாக மொபைல் நம்பரை மாற்ற முடியும். ரூ.75 பணம் செலுத்தினால் போதும், அடுத்த 30 நாட்களுக்குள் உங்களது மொபைல் நம்பர் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டுவிடும். இதை ஸ்மார்ட்போன் வழியாக செய்து கொள்ளலாம்.


அடுத்த 30 நாட்கள்.. ரூ.75 கொடுத்து உடனே இதை பண்ணிடுங்க.. ஆதார் கார்டு!

ஆதாருடன் மொபைல் நம்பர் இணைப்பது எப்படி?

1. கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் ஆதார் ஆப்பை (Aadhaar App) டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். இந்த ஆப்பை லாகின் செய்ய வெரிபிகேஷன் இருக்கும். முதலில் 12 டிஜிட் ஆதார் நம்பர் கொடுக்கப்பட வேண்டும். பிறகு மொபைல் நம்பர் வெரிபிகேஷன் இருக்கும். ஆகவே, ஏற்கனவே இருக்கும் நம்பரை மட்டுமே இந்த சேவை மூலம் மாற்றி கொள்ள முடியும்.

2. எந்த நம்பரும் இணைக்கப்படாமல் இருந்தால், முதல் முறை இணைப்பதற்கு ஆதார் சென்டருக்கு மட்டுமே செல்ல வேண்டும். ஏனென்றால், பயோமெட்ரிக் வெரிபிகேஷன் செய்த பிறகு புதிதாக மொபைல் நம்பரை இணைக்கக்க முடியும். ஏற்கனவே, இருக்கும் மொபைல் நம்பரை இதில் எளிதாக மாற்றி கொள்ளலாம். ஆதார் நம்பரை கொடுத்தவுடன் மொபைல் வெரிபிகேஷன் இருக்கும்.

3. அடுத்து பேஸ் ஆதன்டிகேஷன் செய்யப்படும். அதாவது, ஸ்மார்ட்போனில் இருக்கும் செல்பீ கேமரா வழியாக உங்களது முகம் மற்றும் கண்கள் ஸ்கேன் செய்யப்படும். இது யார் அந்த ஆப்பை பயன்படுத்துகிறார்கள் என்பதற்கான வெரிபிகேஷனாக இருக்கிறது. இதை செய்தால், உங்களது ஆதார் கார்டு விவரங்களுடன் அக்கவுண்ட் திறக்கப்படும். இதற்கு பின் நம்பர் இருக்கும்.

4. முதல் முறை ஓப்பன் செய்யும்போது, நீங்களே பின் நம்பரை செட் செய்து கொள்ளலாம். இதையெல்லாமல், செய்த பிறகு ஹோம் பேஜ்ஜில் மை ஆதார் அப்டேட் (My Aadhaar Update) விருப்பம் தோன்றும். இதை கிளிக் செய்தால் பல்வேறு அப்டேட்கள் வரிசையாக தோன்றும். இதில் மொபைல் நம்பர் அப்டேட், முகவரி அப்டேட், பெயர் அப்டேட் இருக்கும்.

5 அதேபோல ஈமெயில் அப்டேட் இருக்கும். ஆனால், இப்போதைக்கு மொபைல் நம்பர் அப்டேட் மட்டுமே செய்து கொள்ள முடியும். மற்ற அப்டேட்கள் அடுத்தடுத்து கொடுக்கப்படும். மொபைல் நம்பர் அப்டேட்டை கிளிக் செய்து கொள்ளுங்கள். இப்போது, உங்களது பழைய மொபைல் நம்பர் மற்றும் புதிதாக மாற்ற வேண்டிய மொபைல் நம்பருக்கான பாக்ஸ் இருக்கும்.

6. இதில் புதிய மொபைல் நம்பரை கொடுத்து கொள்ளுங்கள். அதன் பிறகு மீண்டும் மொபைல் நமபர் வெரிபிகேஷன் இருக்கும். அதாவது புதிய நம்பருக்கான வெரிபிகேஷன் இருக்கும். இதை செய்த பிறகு ரூ.75 சேவை கட்டணத்தை செலுத்த வேண்டும். இதை டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, மொபைல் பேங்கிங் போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வழியாக செய்து கொள்ளலாம்.

7. இந்த கட்டணத்தை செலுத்திய பிறகு அடுத்த 30 நாட்களுக்குள் மொபைல் நம்பர் அப்டேட் செய்யப்படும். இந்த அப்டேட்டை செய்த பிறகு அந்த மொபைல் நம்பருக்கு மெசேஜ் அனுப்பி வைக்கப்படும். இதை வைத்து தெரிந்து கொள்ளலாம். இப்படி அப்டேட் செய்யப்பட்ட பிறகு வழக்கமாக டிஜிட்டலாக ஆதார் கார்டை டவுன்லோட் செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.

Credit: Gizbot

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+