ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்களை அதிகரித்துள்ளது. அதுவும் எஸ்பிஐ அல்லாத ஏடிஎம்களில் பரிவர்த்தனை கட்டணங்களை அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்த மாற்றம் கடந்த டிசம்பர் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆகவே எஸ்பிஐ டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் இப்போது மற்ற வங்கிகளின் ஏடிஎம்களை பயன்படுத்தும்போது அதிக கட்டணம் வசூலிக்கப்படலாம்.
எந்தக் கணக்குகள் பாதிக்கப்படாது
குறிப்பாக எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்கள் மாதாந்திர இலவச பரிவர்த்தனை வரம்பை முடித்துவிட்டால் கூடுதல் செலவு வரும். இந்த மாற்றங்கள் முதன்மையாக எஸ்பிஐ சேமிப்பு கணக்கு, சம்பள கணக்கு மற்றும் நடப்புக் கணக்கு வைத்திருப்பவர்களையே பாதிக்கும். ஆனால் கிசான் கிரெடிட் கார்டு (KCC) மற்றும் அடிப்படை சேமிப்பு வங்கி வைப்புத்தொகை (BSBD) கணக்குகள் இந்த திருத்தப்பட்ட கட்டணங்களிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன. அதாவது இவை எந்த கூடுதல் கட்டணங்களையும் செலுத்த வேண்டியது இல்லை. ஆகவே இந்த கணக்குகள் பாதிக்கப்படாது.

சேமிப்பு கணக்கு
அதாவது எஸ்பிஐ சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் பயனர்கள் மற்ற வங்கிகளின் ஏடிஎம்களில் மாதத்திற்கு 5 இலவச பரிவர்த்தனைகளைப் பெறுவார்கள். ஆனால் இந்த வரம்பைத் தாண்டி பணம் எடுப்பதற்கு இப்போது ரூ.23 மற்றும் ஜிஎஸ்டி (GST) செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பேலன்ஸ் சரிபார்ப்பு, மினி ஸ்டேட்மென்ட்கள் போன்ற நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு ரூ.11 மற்றும் ஜிஎஸ்டி செலவாகும்.
சம்பளக் கணக்கு
எஸ்பிஐ கொண்டுவந்துள்ள இந்த மாற்றம் சம்பளக் கணக்கு வைத்திருக்கும் பயனர்களுக்கு மிகவும் முக்கியமானது. அதாவது முன்பு இவர்கள் மற்ற ஏடிஎம்-களில் வரம்பற்ற இலவச பரிவர்த்தனைகளை அனுபவித்தனர். ஆனால் இப்போது இது மிகவும் குறைவாகவே உள்ளது. அதன்படி சம்பள கணக்கு வைத்திருப்பவர்கள் இப்போது மாதத்திற்கு 10 இலவச பரிவத்தனைகளை மட்டுமே பெறுவார்கள். அதன்பிறகு பணம் எடுப்பதற்கு ரூ.23 + GST வசூலிக்கப்படும், மேலும் நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு ரூ.11 + GST வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்பிஐ டெப்ட் கார்டு
ஆனால் எஸ்பிஐ டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் எஸ்பிஐ ஏடிஎம்-ல் பயன்படுத்தும் போது எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. எஸ்பிஐ ஏடிஎம்-இல் கார்ட்லெஸ் கேஷ் வித் டிராவல் வரம்பில்லாமல் தொடர்ந்து இலவசமாக இருக்கும்.
கட்டண உயர்வுக்குக் காரணம் என்ன?
இன்டர்சேஞ்ச் கட்டணங்கள் என்று அழைக்கப்படும் வங்கிகளுக்கு இடையேயான பரிவர்த்தனை கட்டணம் உயர்ந்ததால் தான் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக எஸ்பிஐ பயனர்கள் இனி வேறு வங்கி ஏடிஎம்-ஐ பயன்படுத்தும் போது கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

அதுவும் டிசம்பர் 1, 2025 முதல் அமலுக்கு வந்த இந்த புதிய விதிகளைப் பின்பற்றி, எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் பிற வங்கிகளின் ஏடிஎம்களை பயன்படுத்தும் போது இலவச பரிவர்த்தனை வரம்புகளுக்குச் சிறப்புக் கவனம் செலுத்துவது நல்லது.
அதேபோல் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இனிமேல் எஸ்பிஐ ஏடிஎம்களை தேடி பணம் எடுப்பது மிகவும் நல்லது. அதாவது இதன் மூலம் நாம் கூடுதல் கட்டணத்தைத் தவிர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. முடிந்தவரை பரிவர்த்தனைகள் இலவசமான 63,000 க்கும் மேற்பட்ட ATM-களைக் கொண்ட SBI-யின் நெட்வொர்க்கைப் பயன்படுத்தவும்.
Credit: Gizbot
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications