இந்தியாவில் மிகப் பெரிய வங்கியாகவும், அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட வங்கியாகவும் உள்ளது பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ). இந்நிலையில் தனது தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டுள்ளது எஸ்பிஐ. அதாவது இனி ஐஎம்பிஎஸ் (IMPS) மூலம் பணம் அனுப்பினால் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு இதுவரை இன்டர்நெட் பேங்கிங் மற்றும் மொபைல் ஆப் மூலம் செய்யப்படும் IMPS பரிமாற்றங்களுக்குக் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாமல் இருந்தது. ஆனால் இனிமேல் பெரிய தொகை அனுப்பும்போது ஒரு சிறிய தொகையைக் கட்டணமாகச் செலுத்த வேண்டியிருக்கும்.

அதாவது வங்கியின் வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட சமீபத்திய விகித விளக்கப்படத்தின்படி, திருத்தப்பட்ட எஸ்பிஐ IMPS கட்டணங்கள் வரும் பிப்ரவரி 15 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஐஎம்பிஎஸ் உடனடி நிதி பரிமாற்றங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. பலர் அதிகமான பணத்தை அனுப்ப இந்த வசதியைப் பயன்படுத்துகின்றனர். இந்த கட்டண உயர்வு பலரைப் பாதிக்கும்.
குறிப்பாக எஸ்பிஐ வங்கி ஆனது ரூ.25000க்கு மேல் உள்ள ஆன்லைன் IMPS பரிவர்த்தனைகளுக்கு புதிய கட்டணங்களை அறிமுகம் செய்துள்ளது. முன்பு இலவசமாக இருந்தது. இனி கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
பிப்ரவரி 15 முதல் அமலுக்கு வரும் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனை கட்டணங்கள்
1. ஆன்லைன் மற்றும் கிளை சேனல்கள் இரண்டிலும் ரூ.10,000 வரையிலான IMPS பரிமாற்றங்கள் இலவசம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. நீங்கள் ரூ.10,000 முதல் ரூ.25,000 வரையில் ஆன்லைன் வழியாக ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகள் செய்தால் கட்டணம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கிளை பரிமாற்றங்களுக்கு ரூ.4 மற்றும் ஜிஎஸ்டி தொடர்ந்து பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
3. அடுத்து ரூ.25,000 முதல் 1,00,000 வரையிலான ஐஎம்பிஎஸ் முறையில் பணம் அனுப்பினால் ரூ.2 கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். இதே கிளை சேனல் வழியாகப் பணம் அனுப்பினால் ரூ.4 கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்.
4. ரூ.1,00,000 முதல் ரூ.2,00,000 வரையில் ஆன்லைன் வழியாக ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகள் செய்தால் ரூ.6 கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். இதே நீங்கள் கிளை சேனல் வழியாக ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளைச் செய்தால் ரூ.12 கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் செலுத்த வேண்டும்.
5. ரூ.2,00,000 முதல் ரூ.5,00,000 லட்சம் வரையில் ஆன்லைன் வழியாக ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகள் செய்தால் ரூ.10 கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். இதே நீங்கள் கிளை சேனல் வழியாக ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளைச் செய்தால் ரூ.20 கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் செலுத்த வேண்டும்.

யாருக்கெல்லாம் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனை கட்டண உயர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும்
ரயில்வே சம்பள தொகுப்பு (Railway Salary Package)
பாதுகாப்பு சம்பள தொகுப்பு (Defence Salary Package)
மத்திய ஆயுத காவல் சம்பள தொகுப்பு (Central Armed Police Salary Package)
மத்திய அரசு சம்பள தொகுப்பு (Central Government Salary Package)
காவல்துறை சம்பள தொகுப்பு (Police Salary Package)
சௌர்யா குடும்ப பென்சன் அக்கவுண்ட் (Shaurya Family Pension Accounts)
கார்ப்பரேட் சம்பள தொகுப்பு (Corporate Salary Package)
மாநில அரசு சம்பள தொகுப்பு (State Government Salary Package)
ஸ்டார்ட் அப் சம்பள தொகுப்பு (Start Up Salary Package)
மேலே உள்ள அக்கவுண்ட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. முன்பு கூறியபடி, இந்த புதிய விதிமுறை வரும் பிப்ரவரி 15-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்பதைக் கவனத்தில் கொள்க.
Credit: Gizbot
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications