சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான பராசக்தி திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றாலும் வசூலில் கெத்து காண்பித்துவிட்டது. அடுத்ததாக அவர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் என்ற படத்திலும், வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் அவர் இன்று 41ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். பலரும் அவருக்கு தங்களது வாழ்த்தை தெரிவித்துவரும் சூழலில்; எஸ்கேவின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் இணையத்தில் பரவ ஆரம்பித்திருக்கின்றன.
திருச்சியில் நடுத்தர குடும்பத்தில் பிறந்து தந்தையை இழந்து ரொம்பவே கஷ்டப்பட்டவர் சிவகார்த்திகேயன். தனக்குள் இருக்கும் மிமிக்ரி திறமையை வைத்து முன்னேறிவிடலாம் என இருந்த அவருக்கு குடும்பத்தினர் பெரிதாக சப்போர்ட் செய்யவில்லை. இருந்தாலும் மனம் தளராத அவர்; தொடர்ந்து முயன்று சின்னத்திரை ரியாலிட்டி ஷோ டைட்டில் வின்னராக மாறினார். அதிலிருந்து தனக்கு கிடைத்த அடுத்தடுத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி அதே சேனலில் தவிர்க்க முடியாத தொகுப்பாளராகவும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார்.

சினிமாவில் சிவகார்த்திகேயன்: சேனலில் அவர் செய்த ஆங்கரிங் ஸ்டைல் மற்ற ஈவென்ட்டுகளுக்கும் அழைத்து சென்றது. அப்போது திரை பிரபலங்களின் கவனத்தையும் அவர் ஈர்க்க; தனுஷும், பாண்டிராஜும் சினிமாவுக்கு அவரை அழைத்து வந்தார்கள். தனுஷ் தான் ஹீரோவாக நடித்த 3 படத்தில் ஒரு ரோலை கொடுக்க; பாண்டிராஜ் ஹீரோவாக அறிமுகம் செய்தார். இரண்டையும் சரியாக செய்ததால் திரைத்துறையில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தன. சிவா ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தபோது பத்தே படங்களில் காணாமல் போய்விடுவார் என்று பலர் ஆரூடம் கூறினார்கள்.
சிவகார்த்திகேயன் வானத்தில் ஒரு நட்சத்திரம்.. மகள் வாங்கிய விருது.. அப்பாவா எவ்வளவு பெருமை பாருங்க
ஆரூடம் கூறியவர்களை காணவில்லை: ஆனால் அப்படி ஆரூடம் கூறியவர்களைத்தான் இப்போது காணவில்லை. சிவாவோ கோலிவுட்டின் டயர் 1 ஹீரோக்கள் லிஸ்ட்டில் வந்துவிட்டார். அவர் நடித்த டாக்டர், டான், அமரன், பராசக்தி ஆகிய நான்கு படங்கள் 100 கோடி ரூபாயை வசூலித்திருக்கின்றன. இவை தவிர்த்து மாவீரன், மதராஸி உள்ளிட்ட படங்கள் 80 கோடி ரூபாய் வரை வசூலித்திருப்பதாகவும் பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படி கமர்ஷியல் ரீதியாக சக்சஸ்ஃபுல் ஹீரோவாக உயர்ந்ததோடு மட்டுமின்றி; விஜய் சினிமாவை விட்டு விலகுவதால் அவரது இடத்தையும் எஸ்கேதான் பிடிப்பார் என்று பலரும் சொல்கிறார்கள்.
எவ்வளவோ விமர்சனங்கள்: ஒருவர் வளர்ச்சியடைந்தாலே அவரை வீழ்ச்சியடைய செய்வதற்கு ஒரு கூட்டம் தொடர்ந்து வேலை செய்யும். அப்படி சிவாவுக்கு எதிராகவும் ஒருதரப்பினர் வேலை செய்துகொண்டே இருக்கிறார்கள். ஆனால் அவர்களது எந்த சதியும் சிவாவின் வளர்ச்சியை தடுக்க முடியவில்லை. ஒவ்வொரு படத்துக்கும் அவரது மார்க்கெட்டும், சம்பளமும் உச்சத்தில்தான் சென்றுகொண்டிருக்கின்றன. சினிமாவின் காட்ஃபாதர் என்று புகழப்படும் கமலின் தயாரிப்பில் இரண்டாவது படமாக சேயோன் படத்தில் நடிக்கவும் கமிட்டாகிவிட்டார் அவர். இதற்கடுத்து பிரமாண்ட பட்ஜெட்டில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கிறார்.
சிவகார்த்திகேயன் பிறந்தநாள்: இந்நிலையில் அவர் இன்று தனது 41ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அதனையொட்டி பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவரும் சூழலில்; சிவாவின் சொத்து மதிப்பு குறித்த தகவலும் வெளியாகியிருக்கிறது. அமரன் வெற்றிக்கு பிறகு எஸ்கேவின் சம்பளம் 50 கோடி ரூபாயை நெருங்கிவிட்டதாம். மொத்தம் அவரிடம் 120 கோடி ரூபாயிலிருந்து 130 கோடி ரூபாய்வரை சொத்து மதிப்பு இருக்கிறதாம். சென்னையில் சகல வசதிகளுடன் பங்களா வைத்திருக்கும் அவர்; பென்ஸ், மினி கூப்பர், பிஎம்டபிள்யூ சொகுசு கார்களை வைத்திருக்கிறார். தயாரிப்பாளராகவும் மின்னும் அவர் அதிலிருந்தும் வருமானம் ஈட்டுகிறார்.
Credit: Filmibeat
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications