Sun Transit In Sagittarius Make Mahadhan Rajyog 2025: ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாவார் மற்றும் இவர் ஒரு ராசியில் 1 மாத காலம் வரை பயணிப்பார். இதன் காரணமாக இவர் ஒரு சுழற்சியை முடிக்க 1 ஆண்டு காலம் ஆகும். சூரியனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
மேலும் சூரியன் ஒவ்வொரு முறை ராசியை மாற்றும் போதும் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் 16 ஆம் தேதி தனுசு ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த தனுசு ராசியின் அதிபதி குரு பகவான். சூரியன் குரு பகவானின் ராசிக்கு சுமார் 1 ஆண்டு காலம் கழித்து செல்லவுள்ளார். மேலும் இந்த ராசியில் ஏற்கனவே செவ்வாயும் பயணித்து வருகிறார். இதனால் தனுசு ராசியில் மங்கள ஆதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.

அதோடு சூரியனின் இந்த பெயர்ச்சியால் மகாதன ராஜயோகமும் உருவாகவுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதில் சிலருக்கு மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது. இப்போது டிசம்பர் மாத சூரிய பெயர்ச்சியால் உருவாகும் மகாதன ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு மகாதன ராஜயோகம் சிறப்பான பலன்களைத் தரும். இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். அதிர்ஷ்ட கதவு திறந்து, பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணியிடத்தில் உங்களின் நிலை மேம்படும். ஆரோக்கியம் முன்பை விட சிறப்பாக இருக்கும்.
மேஷம்
மேஷ ராசியினருக்கு மகாதன ராஜயோகம் அதிர்ஷ்டத்தைத் தரப்போகிறது. ஏனெனில் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதன் காரணமாக அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வெற்றிகள் குவியும். குழந்தைகளிடம் இருந்து நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். தொழில் ரீதியாக சாதகமாக இருக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை மேம்படும். புதிய வருமான வழிகள் திறக்கப்படும். திட்டமிட்டு செலவழித்தால் பணத்தை சேமிக்கலாம். வணிகர்கள் எதிர்பாராத அளவில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் மகாதன ராஜயோகத்தால் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு மேம்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிறப்பாக இருக்கும். மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Credit: Boldsky


Click it and Unblock the Notifications