கேபிள் டிவி, டிடிஎச் இல்லாமலேயே ஐஃஎப்டிவி (IFTV) வழியாக 600+ லைவ் டிவி சேனல்களை பிஎஸ்என்எல் நிறுவனம் கொடுக்கிறது. பொங்கலில் இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 12 மாதங்கள் வேலிடிட்டியை மாதத்துக்கு வெறும் ரூ.799 விலைக்கு கொடுக்கிறது. பிரீமியம் சேனல்களும் கிடைக்கிறது.
பிஎஸ்என்எல் ஃபைபர் டூ தி ஹோம் (Fibre to the Home) திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு இந்த இன்ட்ராநெட் ஃபைபர் டிவி (Intranet Fiber TV) சேவை கொடுக்கப்படுகிறது. அதாவது, பைபர் இணைப்பு வழியாகவே நேரடியாக லைவ் டிவி சேனல்களை பெற்று கொள்ளலாம். கேபிள் டிவி, டிடிஎச் போல இன்டர்நெட் தேவையில்லை. அதேபோல தனியாக இணைப்பும் தேவையில்லை.

இதில் 600+ லைவ் டிவி சேனல்கள், 127 பிரீமியம் டிவி சேனல்கள் கிடைக்கின்றன. ஆகவே, ஃபைபர் டூ தி ஹோம் திட்டங்களில் லைவ் டிவி சேனல்களை பெற்று கொள்ளலாம். இப்போது, பொங்கல் பண்டிகை வந்துள்ளதால், மார்ச் 31ஆம் தேதி வரையில் பிஎஸ்என்எல் சூப்பர்ஸ்டார் பிரீமியம் திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 20 சதவீத தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.
இந்த சலுகையை பெறுவதற்கு 12 மாதங்களுக்கான தொகையை அட்வான்ஸ் முறையில் செலுத்த வேண்டும். அதாவது, பிஎஸ்என்எல் சூப்பர்ஸ்டார் பிரீமியம் திட்டத்தின் அசல் விலை மாதத்துக்கு ரூ.999ஆக இருக்கிறது. ஆனால், 12 மாதங்களுக்கான தொகையை முன்கூட்டியே செலுத்தினால் ரூ.799 விலைக்கே பெற்று கொள்ளலாம். இதன் மூலம் 20 சதவீத தள்ளுபடியை பெறலாம்.
ஆகவே, ஒவ்வொரு மாதத்துக்கும் ரூ.200 விலை குறைவாக கிடைக்கிறது. இந்த விலை லைவ் டிவி சேனல்களுக்கு மட்டும் கிடையாது. இதில் பைபர் டேட்டா, ஓடிடி ஆப்களின் சந்தா மற்றும் லேண்ட்லைன் வாய்ஸ் கால்களின் சலுகைகளும் 12 மாதங்கள் முழுவதும் கொடுக்கப்படும். சொல்லப்போனால், லைவ் டிவி சேனல்கள் கட்டணமில்லாமலேயே கிடைக்கின்றன.
பிஎஸ்என்எல் சூப்பர் ஸ்டார் பிரீமியம் திட்டம் ரூ. 799 (BSNL Super Star Premium Plan Rs 799): ஃபைபர் டூ தி ஹோம் இணைப்பு வழியாக 200 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகை கொடுக்கப்படும். மாதத்துக்கு அதிகபட்சம் 5000 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். இந்த டேட்டாவுக்கு பிறகும் 10 எம்பிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படும்.
லேண்ட்லைன் வழியாக அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி கால்கள் (Unlimited Local & STD Calls) கிடைக்கும். மேலும், ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), லயன்ஸ் கேட் பிளே (Lions Gate Play), ஹங்கமா (Hungama), சோனிலிவ் (SonyLIV) மற்றும் எபிக் ஆன் (EpicOn) ஆகிய ஓடிடி ஆப்களின் சந்தாவும் இந்த பிஎஸ்என்எல் சூப்பர் ஸ்டார் பிரீமியம் திட்டத்தில் கிடைக்கும்.
இந்த சலுகைகளுடன் கூடுதலாக 600+ லைவ் டிவி சேனல்கள் மற்றும் 127 பிரீமியம் டிவி சேனல்கள் கிடைக்கும். இந்த லைவ் டிவி சேனல்களுக்கு இணைய வசதி தேவையில்லை. நேரடியாக இன்ட்ராநெட் ஃபைபர் டிவி வழியாக பார்த்து கொள்ளலாம். டிடிஎச் போல டிஷ் தேவைப்படாது. கேபிள் டிவி போல தனியாக இணைப்பும் வேண்டியது கிடையாது.
ஏற்கனவே, இருக்கும் ஃபைபர் டூ தி ஹோம் இணைப்பு வழியாகவே பெற்று கொள்ளலாம். இந்த சலுகை விலையில் மார்ச் 31 ஆம் தேதி வரையில் பெறலாம். 12 மாதங்களுக்கான தொகையை செலுத்தும் போது, மாத செலவு குறைகிறது. அதேபோல இதில் ஜிஎஸ்எடி கட்டணம் வசூலிக்கப்படும். பிஎஸ்என்எல் வலைத்தளம் மற்றும் நிறுவனத்தின் ஆப் வழியாக திட்டத்தை பெறலாம்.
Credit: Gizbot
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications