ஹோண்டா நிறுவனம் தனது எலவேட் காரின் விலையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. என்னதான் விலை அதிகரித்தாலும் போட்டி கார்களின் டாப் வேரியன்ட் விலையை விட குறைவாக இருக்கிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
2026ம் ஆண்டு பிறந்த பிறகு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்த காலாண்டர் ஆண்டிற்கான விலை உயர்வை வரிசையாக அறிவிக்க துவங்கும். அதன்படி ஹோண்டா நிறுவமன் தனது எலெகவேட் காருக்கான விலையை அதிகரிது அறிவித்துள்ளது. இதன்படி 5.5% வரை விலை உயர்வை அறிவித்துள்ளது.

ஹோண்டா நிறுவனம் எலவேட் காரின் விலையை ரூ10.99 லட்சம் என இதுவரை விற்பனை செய்து வந்தது.இனி இந்த கார் ரூ11.59,890 என்ற விலையில் விற்பவனை செய்யப்படுகிறது. அதாவது ரூ59,990 விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இது 5.5 சதவீத வளர்ச்சியாகும்.
இந்த கார் மார்கெட்டில் கியா செல்டோஸ், ஹூண்டாய் கிரெட்டா, ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக் ஆகிய கார்களுக்கு போட்டியாக விற்பனையாகி வருகிறது. தற்போது விலை உயர்வு அறிவிக்கப்பட்டிருந்தாலும் ரூ11 லட்சம் என்ற விலையிலேயே விற்பனையில் இருக்கிறது. இந்த காரில் எஸ்வி, வி, விஎக்ஸ், மற்றும் இசட் எக்ஸ் ஆகிய வேரியன்ட்களிலும், பிளாக் மற்றும் ஏடிவி என்ற ஸ்பெஷல் எடிசன்களிலும் விற்பனையாகி வருகிறது. இந்த காரில் ஆட்டோமெட்டிக் மற்றும் மேனுவல் கியர் ஆகிய ஆப்ஷன்கள் எஸ்வி வேரியன்ட் தவிர மற்ற வேரியன்ட்களில் உள்ளது.

வி வேரியன்ட் ரூ9,990 விலை அதிகமாகி ரூ12.06 லட்சம் என்ற விலையில் மேனுவல் வேரயன்டும், ரூ13.22 லட்சம் என்ற விலையில் ஆட்டோமெட்டிக் வேரியன்டும் விற்பனையாகி வருகிறது. விஎக்ஸ் வேரியன்ட்டை பொருத்தவரை ரூ13,590 விலை அதிகமாகி ரூ13.75 லட்சத்திற்கு மேனுவல் வேரியன்டும், ரூ14.91 லட்சத்திற்கு ஆட்டோமெட்டிக் வேரியன்டும் கிடைக்கிறது.
இசட்எக்ஸ் வேரியன்டை பொருத்தவரை ரூ9990 விலை அதிகமாகி ரூ14.98 லட்சத்தில் மேனுவல் வேரியன்டும், ரூ16.25 லட்சத்தில் ஆட்டோமெட்டிக் வேரியன்டும் கிடைக்கிறது. பிளாக் எடிசனை பொருத்தவரை அதே 9,990 என்ற விலையேற்றத்துடன் ரூ15.07 லட்சத்தில் மேனுவல் எடிசனும், ரூ16.25 லட்சத்தில் ஆட்டோமெட்டிக் வெர்ஷனும் விற்பனையாகி வருகிறது.

ஏடிவி எடிசனை பொருத்தவரை அதே ரூ 9990 என்ற விலையேற்றத்தில் மேனுவல் வேரியன்ட் ரூ15.39 லட்சம் என்ற விலையிலும், ஆட்டோமெட்டிக் வேரியன்ட் ரூ16.57 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது. இந்த காரில் ஹோண்டா நிறுவனம் ரூ1.5 லிட்டர் 4 சிலிண்டர் இன்ஜினை பொருத்தியுள்ளது. இது 119 எச்பி பவரையும், 145 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இது 6 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்களுடன் வருகிறது. இந்த கார் மார்கெட்டில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதனால் சிறப்பாக விற்பனையாகி வரும் காராக இருக்கிறது. இந்த கார் நிச்சயம் வரும் காலத்திலும் சிறப்பாக விற்பனையாகும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அதிக அளவில் வாகனங்களை விற்பனைக்கு கொண்டு வந்துவிட்டது. ஹோண்டாவின் விலை உயர்வு அறிவிப்பு நிச்சயம் விற்பனையில் பெரிய பாதிப்பை எல்லாம் ஏற்படுத்தாது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார்கள் நிச்சயம் தொடர்ந்து சிறப்பாக விற்பனையாகும் என எதிர்பார்க்கலாம்.
Credit: Drivespark
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications