இபிஎப்ஓ (EPFO) என்கிற ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees Provident Fund Organisation) ஆனது கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ ஆப்களைவிட்டு இந்திய அரசின் கீழ் செயல்படும் பீம் (BHIM) ஆப்புக்கு மாறும்படி புதிய விதிகளை கொண்டுவந்துள்ளது. ஏடிஎம் மற்றும் யுபிஐ வழியாக இபிஎப்ஓ பணத்தை எடுக்க விதிகளில் மாற்ற செய்யப்பட்டதை அடுத்து இந்த புதிய விதிகள் அமலுக்கு வர உள்ளன.
வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் ஏடிஎம் (ATM) மற்றும் யுபிஐ (UPI) வழியாக பணத்தை எடுக்கும் விதிமுறைகள் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்பாக அமலுக்கு வர இருக்கிறது. இதில் யுபிஐ வழியாக பணத்தை எடுக்கும்போது ஒட்டுமொத்த சந்தாதாரர்களுக்கும் கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற ஆப்களைவிட்டு பீம் ஆப்புக்கு மாறும்படி விதிகள் வர இருக்கிறது.

யுபிஐ வழியாக பணத்தை எடுக்கும்போது, பீம் ஆப் வழியாக மட்டுமே எடுக்க முடியும். வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் பணத்தை கிளைம் செய்யும்போது, யுபிஐ முறையை தேர்ந்தெடுத்தால், பீம் ஆப்புடன் இணைக்கப்பட்ட பேங்க் அக்கவுண்டுக்கு முன்பணம் மாற்றப்படும். எஸ்பிஐ (SBI) வழியாக உடனடியாக தொகை பரிமாற்றம் செய்யப்படும்.
என்பிசிஐ (NPCI) என்று அழைக்கப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் (National Payments Corporation of India) கீழ் பீம் ஆப் செயல்படுகிறது. ஆகவே, இபிஎப்ஓ மற்றும் என்பிசிஐ இணைந்து வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களுக்கு பணத்தை எடுக்க வழிவகை செய்துள்ளன. இதில் சுகாதாரம் (Health), கல்வி (Education), சிறப்பு சூழ்நிலைகள் (Special Circumstances) போன்ற கிளைம்களும் கிடைக்கும்.
இதுபோன்ற பிரிவின் கீழ் முன்பண கோரிக்கையை பீம் ஆப் வழியாகவே சமர்ப்பிக்கலாம். இந்த கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டதும், இபிஎப்ஓ வழியாக வெரிபிகேஷன் செய்யப்படும். இந்த வெரிபிகேஷன் முடிந்த பிறகு எஸ்பிஐ பேங்க் வழியாக கோரப்பட்ட தொகை பரிமாற்றம் செய்யப்படும். பீம் ஆப்புடன் இணைக்கப்பட்ட பேங்க் அக்கவுண்டுக்கு பணம் மாற்றப்படுகிறது.
ஆகவே, யுபிஐ ஐடியில் பிரைமரி அக்கவுண்ட்டாக எந்த பேங்க் அக்கவுண்ட்டை வைத்திருக்கப்படுகிறதோ அந்த அக்கவுண்ட்டுக்கு பணம் பரிமாற்றம் செய்யப்படும். இந்த அக்கவுண்ட் ஊழியர் வருங்கால வைப்பு நிதியுடன் இணைக்கப்பட்ட அக்கவுண்ட்டாகவும் இருக்க வேண்டும். பீம் ஆப்பை தொடர்ந்து, கூகுள் பே, போன்பே, பேடிஎம் ஆப்களுக்கும் இந்த செயல்முறை வரலாம்.
இருப்பினும், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, யுபிஐ மற்றும் பீம் ஆகியவை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், மூன்றாம் தர ஆப்களுக்கு சலுகைகள் குறைவாகவே கிடைக்கும். ஆகவே, ரூ.10,000 கிளைம் செய்தாலும், பீம் ஆப் இருக்க வேண்டும். முன்னதாக யுபிஐ சர்க்கிள் (UPI Circle) விதிகளிலும் பீம் ஆப்புக்கு மட்டுமே ஃபுல் டெலிகேஷன் (Full Delegation) கொடுக்கப்பட்டது. அதாவது, யுபிஐ சர்க்கிள் வழியாக ரூ.15,000 வரையில் அனுப்பலாம்.
இந்த ரூ.15,000 மட்டுமே அதிகபட்ச தொகையாக இருக்கிறது. பேங்க் அக்கவுண்ட் இல்லாமலேயே யுபிஐ சர்க்கிள் வழியாக யுபிஐ ஐடிகளை உருவாக்கி கொள்ளலாம். இந்த யுபிஐ ஐடிகள் வழியாக மாதத்துக்கு ரூ.15,000 லிமிட்டுக்குள் பணத்தை அனுப்பி கொள்ளலாம். இதற்கு பிரைமரி அக்கவுண்டுடன் இணைக்கப்பட்ட யுபிஐ ஐடியின் ஒப்புதல் தேவைப்படுகிறது.
இந்த யுபிஐ சர்க்கிள் ஆனது கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ ஆப்களில் கிடைக்கிறது. ஆனால், மாதத்துக்கு ரூ.15,000 லிமிட் ஆனது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பீம் ஆப்புக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது, வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் பணத்தை எடுக்கவும் பீம் ஆப்புக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு உள்ளது.
Credit: Gizbot
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications