EPFO எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தொடர்ந்து பல புதிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்த அமைப்பு கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. அதேபோல் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு விரைவில் EPFO 3.0 திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது.
EPFO 3.0 திட்டம்
அதாவது முழுக்க முழுக்க டிஜிட்டல் தளத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய திட்டம், பிஎப் சேவைகளை மேலும் வேகமாவும சிரமமில்லாமல் பெறுவதற்கும் உதவும் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குறிப்பாக இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்த உடன் EPFO-வின் அனைத்து பணிகளும் காகிதமற்ற முறையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உறுப்பினர்களின் தகவல்கள் துல்லியமாக ஆய்வு செய்து தேவையற்ற தாமதங்கள் தவிர்க்கப்படும். அதேபோல் EPFO 3.0 திட்டத்தில் தரவு பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் மோசடி நடவடிக்கைகள் தடுக்கவும் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குத் தகுந்த தொழில்நுட்பம் இந்த திட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.
அதுவும் உறுப்பினர்கள் கோரிக்கை வைக்கும் வரை காத்திருக்காமல் பிஎப் (PF) தொகையைத் தானாகவே அவர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தும் வசதியும் இந்த EPFO 3.0 திட்டத்தில் இடம்பெற உள்ளது. இதுதவிர உறுப்பினர்களுக்கு மிகவும் பயனளிக்கும் வகையில் பிஎப் தொகையை ஏடிஎம் மூலம் நேரடியாகப் பெறும் ஏற்பாடுகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
குறிப்பாக பிஎப் தொகையை ஏடிஎம் மூலம் எடுக்கும் திட்டம் கடந்த ஜூன் மாதமே அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொழில்நுட்ப சோதனைகள் மற்றும் முன்னோடி ஆய்வுகள் காரணமாகச் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை இந்த திட்டத்தின் அதிகாரப்பூர்வ தேதி அறிவிக்கப்படாத நிலையில், தற்போது ஒரு முக்கிய தகவல் ஆன்லைனில் கசிந்துள்ளது. அதாவது வரும் 2026-ம் தொடக்கத்தில் அல்லது அடுத்த மூன்று மாதங்களில் பிஎப் தொகையை ஏடிஎம் மூலம் எடுக்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என தகவல்கள் கசிந்துள்ளது.
குறிப்பாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் இந்த புதிய டிஜிட்டல் முயற்சி, கோடி கணக்கான பிஎப் உறுப்பினர்களுக்குச் சேவை அனுபவத்தை மறுமலர்ச்சியடையச் செய்யும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
பாஸ்புக் லைட்
மேலும் சில மாதங்களுக்கு முன்பு தான் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு பிஎப் பேலன்ஸ் விவரங்களைத் தெரிந்துகொள்ள Passbook Lite (பாஸ்புக் லைட்) எனும் வசதியை அறிமுகம் செய்தது. இந்த Passbook Lite மூலம் பிஎப் பேலன்ஸ்-ஐ உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடியும். பின்பு வேலை மாறும்போது தேவைப்படும் Annexure K என்ற ஆவணத்தை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய முடியும். குறிப்பாக இந்த வசதிகள் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும். பின்பு பிஎப் விவரங்களை எளிதாக அணுக உதவும்.

பிஎப் கணக்கு விவரங்களைப் பார்க்க தனி இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். இனி Passbook Lite மூலம் பிஃஎப் போர்ட்டலில் நேரடியாகப் பார்க்கலாம். அதுவும் ஒரே லாகின் மூலமாக அனைத்து விவரங்களைத் தெரிந்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Passbook Lite வந்ததால் பல இணையதளங்களுக்குச் செல்ல வேண்டியதில்லை. அதாவது பணம் செலுத்தியது, எடுத்தது மற்றும் இருப்பை (பேலன்ஸ்) Passbook Lite மூலம் எளிதாகப் பார்க்கலாம். குறிப்பாக இந்த புதிய வசதி அனைத்து பிஎப் பயனர்களுக்கும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.
Credit: Gizbot
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications