தட்கல் டிக்கெட் முன்பதிவு.. இனி இதுவும் கட்டாயம்.. அமலுக்கு வந்தது புதிய விதி.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

இந்திய ரயில்வே (Indian Railways) அமைப்பு தட்கல் டிக்கெட் பதிவு முறையில் முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது. அதாவது நேற்று (டிசம்பர் 1) முதல் தட்கல் டிக்கெட் பதிவு செய்யும் போது பயனர் வழங்கிய மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். அதை உள்ளிட்ட பிறகே டிக்கெட் பதிவு செய்யும் முறை நிறைவடையும்.

தட்கல் டிக்கெட் பதிவு

ஆனால் தற்போது வெஸ்டர்ன் ரயில்வேயில் சில ரயில்களில் மட்டுமே இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து ரயில்வே மண்டலங்களிலும் இந்த புதிய முறை செயல்படுத்தப்படும்.


தட்கல் டிக்கெட் முன்பதிவு..  இனி இதுவும் கட்டாயம்..

குறிப்பாக ரயில்வே அமைப்பு வெளியிட்ட தகவலின்படி, மும்பை சென்ட்ரல்-அகமதாபாத் ஷதாப்தி எக்ஸ்பிரஸில் டிசம்பர் 1 முதல் OTP அடிப்படையிலான தட்கல் டிக்கெட் முறை தொடங்குகிறது எனவும், உண்மையில் அவசரமாகப் பயணம் செய்ய விரும்பும் பயணிகளுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகும் நிலையைத் தவிர்க்கவே இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுவும் டிக்கெட் பதிவு செய்யும்போது மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும். அதை உள்ளிட்ட பிறகே டிக்கெட் உறுதிப்படுத்தப்படும். தவறான அல்லது போலி மொபைல் எண்கள் மூலம் பதிவு செய்வது இனிமேல் சாத்தியமில்லை. அதேபோல் செயலியில் உள்ள சரிபார்க்கப்பட்ட மொபைல் எண் வைத்திருப்பவர்கள் மட்டுமே தட்கல் டிக்கெட்டை பதிவு செய்ய முடியும் என இந்திய ரயில்வே அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐஆர்சிடிசி (irctc) இணையதளம், மொபைல் செயலி மற்றும் ரயில்வே கவுண்டர்கள் உள்ளிட் அனைத்து முன்பதிவு வழிகளிலும் இந்த புதிய முறை பொருந்து என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த மாற்றத்தின் முக்கிய நோக்கம், வெளிப்படையான தட்கல் முன்பதிவுகளை உறுதிசெய்வதும், உண்மையான பயணிகளுக்கு தட்கல் டிக்கெட் பெறுவதற்கான சிறந்த அணுகலை வழங்குவதும் ஆகும்.

தெற்கு ரயில்வே அறிவிப்பு
மேலும் சில நாட்களுக்கு முன்பு வெளியான அறிவிப்பில், ரயில் பயணிகளின் வசதிக்காக ஒரு முக்கிய முடிவை இந்திய ரயில்வே எடுத்துள்ளது. அதன்படி ஸ்லீப்பர் கிளாஸ் பயணிகளுக்கும் தலையணை மற்றும் விரிப்பு (போர்வை) வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 2026-ம் ஆண்டின் ஜனவரி 1-ம் தேதி முதல் ஸ்லீப்பர் கிளாஸில் பயணிக்கும் பயணிகளுக்குச் சுத்தமான மற்றும் சுகாதாரமான தலையணை மற்றும் விரிப்புகள் கிடைக்கும். இந்த வசதிக்குப் பயணிகள் தனியாகப் பணம் செலுத்த வேண்டும்.

யாருக்கெல்லாம் தலையணை மற்றும் விரிப்பு தேவையோ, அவர்கள் ரயில்வே ஊழியரிடம் பணம் கொடுத்துப் பெற்றுக்கொள்ளலாம். குறிப்பாக இந்தியாவில் இதுவே முதல் முறையாக ஸ்லீப்பர் கிளாஸிலும் இந்த வசதி அறிமுகப்படுத்துகிறது. தற்போது ஏசி கிளாஸில் மட்டுமே விரிப்பு, தலையணை, போர்வை மற்றும் துண்டு அடங்கிய பெட்-ரோல் கிட் வசதி உள்ளது.


தட்கல் டிக்கெட் முன்பதிவு..  இனி இதுவும் கட்டாயம்..

ஏசி கிளாஸ் பயணிகளுக்குத் தலையணை-விரிப்பு வசதிக்கு தனியாகக் கட்டணம் இல்லை. டிக்கெட் விலையிலேயே இது சேர்க்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் தற்போது அறிவித்தபடி, ஒரு விரிப்பு, ஒரு தலையணை மற்றும் தலையணை உறைக்கு மொத்தம் 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். பின்பு விரிப்பு மட்டும் வேண்டும் என்றால் 20 ரூபாய் செலுத்த வேண்டும். தலையணை மற்றும் தலையணை உறை மட்டும் வேண்டுமென்றால் 30 ரூபாய் செலுத்த வேண்டும்.

இந்த வசதி எல்லா ரயில்களிலும் கிடைக்காது. அதாவது முதலில், தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் 10 ரயில்களில் மட்டுமே இந்த வசதி அறிமுகம் செய்யப்படுகிறது. ஒருவேளை இது வெற்றி பெற்றால், மற்ற ரயில்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Credit: Gizbot

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+