ஸ்டாக்கை கிளியர் பண்ண ரூ2 லட்சம் தள்ளுபடி! டெஸ்லா கார்கள் விலை குறையுது!

டெஸ்லா நிறுவனம் முதன்முறையாக இந்தியாவில் தனது மாடல் ஒய் வாகனத்தின் விலையை ரூபாய் 2 லட்சம் வரை குறைத்துள்ளது. குறிப்பிட்ட சில வேரியன்ட்களுக்கு மட்டும் இந்த விலை குறைவை அறிவித்துள்ளது. ஏற்கனவே இருக்கும் ஸ்டாக்கை கிளியர் செய்யவும் போட்டியாளர்கள் இடையே போட்டியை சமாளிக்கவும் இந்த விலை குறைவை அறிவித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

உலகின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமாக டெஸ்லா நிறுவனம் இருந்தது. உலகம் முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்களை மிக முக்கியமான தயாரிப்பாக பார்க்க வைத்த நிறுவனமாக இந்த நிறுவனம்தான் இருந்தது. இந்த நிறுவனம் இந்தியாவிற்கு எப்பொழுது வரும் எப்பொழுது இந்நிறுவனம் தயாரிக்க இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நீண்ட நாட்களாக இருந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்நிறுவனம் இந்தியாவில் தனது முதல் ஷோரூமை திறந்து இந்தியாவில் தனது விற்பனையை துவக்கியது.


ஸ்டாக்கை கிளியர் பண்ண ரூ2 லட்சம் தள்ளுபடி!

இருந்தாலும் இந்தியாவில் இந்த நிறுவனம் முழுமையாக காரை இறக்குமதி செய்து விற்பனை செய்ததால் காரின் விலை அதிகமாக இருக்கிறது. இதனால் இந்த காரை வாங்க மக்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் இந்நிறுவனம் இந்தியாவில் முதன் முறையாக 300 வாகனங்களை இறக்குமதி செய்தது அதில் சுமார் 100 வாகனங்கள் வரை இன்னும் விற்பனையாகாமல் ஸ்டாக்கிலேயே இருக்கிறது. இந்த ஸ்டாக்கை கிளியர் செய்வதற்காக டெஸ்லா நிறுவனம் தற்போது தனது மாடல் வாகனங்களுக்கு குறிப்பிட்ட சில வேரியன்ட்களுக்கு மட்டும் ரூபாய் 2 லட்சம் வரை தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. இதன் மூலம் இருக்கும் ஸ்டாக்குகளை எல்லாம் கிளியர் செய்ய முடியும் என அந்நிறுவனம் கருதுகிறது.

டெஸ்லா நிறுவனத்தின் தயாரிப்புகள் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது என்று தெரிந்தவுடன் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. கலர் ஷோரூம்களை நேரடியாக விசிட் செய்தனர். ஆனால் காரை புக் செய்தவர்கள் எண்ணிக்கை மிக குறைவாக இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் இறக்குமதி வரி தான். டெஸ்லா நிறுவனம் மாணவர்கள் இந்தியாவில் 110 சதவீத இறக்குமதி வரியுடன் விற்பனை செய்கிறது. இந்த காரை வாங்க வேண்டும் என்றால் ரூபாய் 70 லட்சம் வரை செலவாகிறது. வாடிக்கையாளர்கள் இந்த விலையை தற்போது இந்தியாவில் விற்பனையாகும் சொகுசு எலெக்ட்ரிக் கார்களின் விலையுடன் ஒப்பிட்டு பார்க்கிறார்கள்.


ஸ்டாக்கை கிளியர் பண்ண ரூ2 லட்சம் தள்ளுபடி!

அப்படி பார்க்கும்போது பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ்1 கார் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படுகிறது. இந்த காரின் விலை டெஸ்லா மாடல் ஒய் காரின் விலையை விட குறைவுதான். அதே நேரம் பிஒய்டி சீலயன் 7 காரின் விலை டெஸ்லா மாடல் போய் காரின் விலையை விட குறைவு தான். பிஎம்டபிள்யூ நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் கடந்து 2025ம் ஆண்டு 200% பெற்றுள்ளது. சுமார் 3700 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. பிஒய்டி நிறுவனம் 88% வளர்ச்சியுடன் 5400 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. அதே நேரம் டெஸ்ட்லா நிறுவனம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக விற்பனையில் வீழ்ச்சியை சதித்துள்ளது. இதனால் உலகிலேயே அதிக அளவு எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்யும் முதல் நிறுவனமாக இருந்த டெஸ்லா நிறுவனம் தனது இடத்தை இடம் இழந்துள்ளது.

இந்தியாவில் நிறுவனம் விற்பனையை பெற திண்டாடி வருகிறது இதற்கு முக்கியமான காரணம் கடும் போட்டிகள் தான் அதிக விலை கொண்ட கால்களை கடும் போட்டியில் கொண்ட மார்க்கெட் ஒப்பிடும்போது இந்தியா மார்க்கெட்டில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் மற்ற கார்கள் லாபகரமாக தோன்றுவதால் மக்கள் பலர் அந்த கார்களே விரும்புகிறார்கள். டெஸ்லா பிராண்டுக்காக மட்டும் விரும்பி வாங்குபவர்கள் மட்டுமே இந்த காரை விரும்பி வாங்குகிறார்கள் என்பதால் விற்பனை குறைவாக இருக்கிறது.


ஸ்டாக்கை கிளியர் பண்ண ரூ2 லட்சம் தள்ளுபடி!

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் வாகன தயாரிப்பை துவங்கினால் நிச்சயம் விலை கணிசமாக குறையும். இது போட்டி மார்க்கெட்டில் மிகப்பெரிய போட்டியை உருவாக்கும். டெஸ்லா நிறுவனத்தின் இந்தியாவில் மதிப்பு இருக்கிறது அந்த பிராண்ட் மதிப்பு வாடிக்கையாளர்களை அதன் பக்கம் ஈர்க்கும். இந்த முடிவை டெஸ்லா நிறுவனம் எடுத்தால் நிச்சயம் இந்தியாவில் மிகப்பெரிய அளவு வெற்றியை பெறலாம்.

Credit: Drivespark

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+