இந்த 2026-ம் ஆண்டு பல முக்கிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதேபோல் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சில முக்கிய மாற்றங்களை இந்த ஆண்டு அமல்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்த புதிய வழிகாட்டுதல்களின்படி, குறிப்பிட்ட வகையை சேர்ந்த சில வங்கி கணக்குகள் (bank accounts ) மூடப்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.
அதுவும் நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான கணக்குதாரர்களை இது பாதுகிக்ககூடும் என்பதால், இந்த புதிய விதிமுறைகளைப் புரிந்து கொண்டு முன் கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும். மேலும் இந்த புதிய முடிவின் நோக்கம், வங்கிகளை மேலும் பாதுகாப்பானதாகவும் வெளிப்படையானதாகவும் மாற்றுவது தான்.

குறிப்பாக நீண்ட காலமாக பயன்படுத்தப்படாத கணக்குகள், மோசடி, ஹேக்கிங், பண மோசடி போன்ற அபாயங்களுக்கு எளிதில் இலக்காகின்றன. தற்போது இதனைத் தடுக்கும் வகையில் தான் இந்திய ரிசர்வ் வங்கி புதிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன் மூலம் டிஜிட்டல் வங்கி அமைப்பை வலுப்படுத்தவும், வாடிக்கையாளர்களின் பண பாதுகாப்பை உறுதி செய்யவும் தான் இந்த மாற்றங்கள் கொண்டுவரப்படுகிறது.
1.டார்மன்ட் (Dormant) கணக்குகள்
பொதுவாக இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேலாக எந்தவித பணப் பரிவர்த்தனையும் நடக்காத கணக்குகள் டார்மண்ட் கணக்குகள் என்று கருதப்படுகின்றன. இந்த வகை கணக்குகள் தொடர்ந்து கண்காணிக்கப்படாமல், ஹேக்கர்களுக்கு எளிதான இலக்காக மாறுகின்றன என்று கூறப்படுகிறது. எனவே தான் இது போன்ற கணக்குகள் பயன்பாட்டில் இல்லாவிட்டால் மூடப்பட வாய்ப்பு அதிகம்.
2.இன் ஆக்டிவ் கணக்குகள் (Inactive Accounts)
அதாவது 12 மாதங்கள் அல்லது அதற்கு மேல் பரிவர்த்தனை இல்லாத கணக்குகள் தான் இன் ஆக்டிவ் கணக்குகள் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இது போன்ற கணக்குகளைத் தவறாகப் பயன்படுத்தப்படும் அபாயம் அதிகம். எனவே தான் புதிய விதிகளின்படி, கணக்குதாரர் சிறிய பரிவர்த்தனை ஒன்றை செய்தால்கூட, அந்த கணக்கை மீண்டும் செயலில் வைக்க முடியும்.
3.ஜீரோ பேலன்ஸ் கணக்குகள் (Zero Balance Accounts)
ஜீரோ பேலன்ஸ் கணக்குகள் அதாவது நீண்ட காலமாகப் பணமில்லாமல் இருக்கும் கணக்குகள் மூடப்படலாம். குறிப்பாக இதன் மூலம் தவறான பயன்பாடுகளை குறைப்பதுடன் KYC விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை வங்கிகள் உறுதி செய்ய உதவும். ஆகவே வங்கி கணக்கு செயலியில் உள்ளதா என்பதை அனைவரும் சரிபார்த்து தேவையான நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் நல்லது.
ஆதார் மற்றும் பான் கார்டு
மேலும் ஜனவரி 1-ம் தேதி முதல் உங்களது வங்கி மற்றும் அரசு சேவைகளுக்கு பான்-ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்படுகிறது. குறிப்பாக பான் கார்டு (pan card) மற்றும் ஆதார் கார்டு (aadhaar card) இணைக்கப்படாவிட்டால் சேவைகள் மறுக்கப்பட வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக பான் எண் மட்டும் முடக்கப்பட்டால் உங்களால் வங்கி கணக்கைத் தொடங்க முடியாது. டீமேட் கணக்கையும் தொடங்க முடியாது. இதனால் நீங்கள் பங்குச் சந்தையிலோ அல்லது ஈடிஎப்ஃகளிலோ வர்த்தகம் செய்ய முடியாது. ரூ.50,000-க்கு மேல் நிலையான வைப்புத்தொகை வைத்திருக்கவும் பான் தேவைப்படுகிறது.
அதேபோல் அரசு முக்கிய திட்டங்கள் மற்றும் பலன்களைப் பெறுவதற்கும் பான் கணக்கு அவசியம் தேவைப்படுகிறது. பான் கார்டு இல்லாமல் எந்த நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்க முடியாது. மேலும் பான் எண் இல்லாமல் வங்கிகளிடமிருந்தோ அல்லது நிதி நிறுவனங்களிடமிருந்தோ கடன் கூட பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
Credit: Gizbot
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications