துபாய்: நடிகர் அஜித் குமார் மலேசியாவை தொடர்ந்து தற்போது துபாயில் நடைபெற்று வரும் கார் பந்தயத்தில் பங்கேற்று வருகிறார். சிறு வயதில் இருந்தே பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸில் தான் அதிக ஆர்வம் கொண்டிருந்தார் அஜித் குமார்.
விளம்பரப் படங்களில் மாடலாக நடித்து வந்த அவர் சினிமா வாய்ப்புக் கிடைத்ததும் அதை சரியாக பயன்படுத்திக் கொண்டார். ரஜினிகாந்த் - கமல்ஹாசன் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் அஜித் மற்றும் விஜய் இருவரும் அடுத்த கோலிவுட் ஸ்டார்ஸ் என்கிற அந்தஸ்த்தை பெற்றனர்.

அல்டிமேட் ஸ்டார் என ஆரம்பத்தில் அஜித்துக்கு பட்டம் கிடைத்தது. தீனா படத்துக்குப் பிறகு தல என ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தனர். ஆனால், ஒரு கட்டத்தில் இதெல்லாம் கிரிஞ்ச் என நினைத்த அஜித் குமார் வெறும் பெயர் மட்டுமே போதும் என்கிற முடிவுக்கு வந்தார். அஜித் குமார் அல்லது அதை சுருக்கி AK என மட்டும் அழைத்தால் போதும் என அன்புக் கட்டளை விடுத்தார்.
படையெடுக்கும் பிரபலங்கள்: சிம்பு, நயன்தாரா, சிவகார்த்திகேயன் மற்றும் லேட்டஸ்ட்டாக குட் பேட் அக்லி படத்தில் நடித்த பிரியா வாரியர் உள்ளிட்ட பிரபலங்கள் அஜித் கார் பந்தயத்தில் பங்கேற்கும் இடத்துக்கு சென்று அஜித் அணியின் டிசர்ட்டையும் அணிந்துக் கொண்டு அஜித் குமார் ரேசிங் பிராண்டை பிரபலப்படுத்தி வருகின்றனர். கேம்பா விளம்பரத்திலும் அஜித் நடித்த நிலையில், அவரது ரசிகர்கள் கேம்பாவுக்கும் புரமோஷன் செய்ய ஆரம்பித்துள்ளனர். பிரபலங்களை அன்போடு வரவேற்று அவர்களுடன் சந்தோஷமாக பேசி போட்டோக்களையும் வீடியோக்களையும் எடுத்து வருகிறார் அஜித் குமார்.
குவியும் ரசிகர்கள்: பிரபலங்களை விட அஜித் மீது உயிரே வைத்துள்ள அவரது ரசிகர்கள் தமிழ்நாட்டில் இருந்து கிளம்பி துபாய்க்கே சென்றே அவரை சந்தித்து வருகின்றனர். துபாயில் உள்ள அஜித் ரசிகர்களும் தொடர்ந்து அவருக்கு அங்கே மற்ற கார் ரேஸர்களுக்கு கிடைக்கும் ஃபேன் பேஸை விட பல மடங்கு அதிகம் ஆதரவு கொடுத்து அஜித்தின் ஒவ்வொரு வெற்றியையும் கொண்டாடி வருகின்றனர்.
தியேட்டர் கிடையாது: ஆனால், அதே நேரத்தில் அங்கேயும் சில ரசிகர்கள் ஆர்வ மிகுதியால் 'தல' என கத்துவதும் 'கடவுளே' என அழைப்பதும் எல்லை மீறிய செயல்களில் ஈடுபடுவதுமாக உள்ளனர். இந்நிலையில், அப்படி அத்துமீறிய ரசிகர்கள் சிலரை நடிகர் அஜித் குமார் கண்டித்துப் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. "தியேட்டர் கிடையாதுங்க.. ப்ளீஸ் பார்த்து பிஹேவ் பண்ணுங்க" என அஜித் குமார் ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
Credit: Filmibeat
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications