தவெக விஜயுடன் சென்ற 6 பேர்.. சிபிஐ அலுவலகத்தில் விஜயிடம் அதிகாரிகள் விசாரணை.. கவனம் பெறும் டெல்லி

டெல்லி: கரூர் வழக்கு தொடர்பாக நடந்து வரும் சிபிஐ விசாரணையில் ஆஜராக விஜய் தனி விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி சென்றுள்ளார். ..சிபிஐ அலுவலகத்துக்கு சரியாக காலை 11.30 மணிக்கு விஜய் வந்தார்.. சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.. இன்று முழுவதும் விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள், கரூர் துயரம் குறித்த பலவிதமான கேள்விகளை கேட்க உள்ள நிலையில், அதற்கு விஜய் பதிலளிக்க உள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தை சார்ந்த மக்கள் சந்திப்பு மற்றும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


தவெக விஜயுடன் சென்ற 6 பேர்.. சிபிஐ அலுவலகத்தில் விஜயிடம் அதிகாரிகள் விசாரணை.. கவனம் பெறும் டெல்லி

கரூர் சம்பவ வழக்கு

தவெக தலைவர் விஜய் நேரில் பங்கேற்ற இந்த நிகழ்வில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக, உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ தற்போது விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கின் ஒரு பகுதியாக, கடந்த டிசம்பர் 29ம் தேதி முதல் மூன்று நாட்கள் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, சி.டி. நிர்மல்குமார் ஆகியோர் ஆஜராகி விசாரணை அளித்தனர்.

8 மணி நேரம் விசாரணை

அதேபோல் கரூர் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது. 3 பேரிடமும் தினமும் சுமார் 8 மணி நேரம் தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்ற நிலையில், கூட்டத்திற்கு விஜய் எத்தனை மணி நேரம் தாமதமாக வந்தார், தாமதத்திற்கான காரணம் என்ன, போலீசாரிடம் அனுமதி கோரப்பட்ட கூட்ட எண்ணிக்கை எவ்வளவு, உண்மையில் திரண்ட கூட்டம் எத்தனை பேர் என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன
.
சமீபத்தில் சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் விஜய் பயன்படுத்திய பிரச்சார பஸ்ஸை சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்ததுடன், அந்த பஸ்ஸின் ஓட்டுநரிடமும் விசாரணை நடத்தினர்.

கரூர் வேலுசாமிபுரத்தில் அதிகாரிகள்

அதேநேரத்தில், கரூர் வேலுசாமிபுரம் பகுதியில் மத்திய உள்துறை
அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் 2 நாட்களுக்கு முன்பு கள ஆய்வு மேற்கொண்டனர்.

விஜய் பிரச்சாரத்திற்காக பயன்படுத்திய வாகனம் நிறுத்தப்பட்ட இடம், கூட்டம் கூடிய சாலையின் அகலம், நெரிசல் ஏற்பட்ட பகுதிகள் உள்ளிட்டவை துல்லியமாக அளவீடு செய்யப்பட்டு, வீடியோ மற்றும் போட்டோ ஆதாரங்களாக பதிவு செய்யப்பட்டது. மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடமும் அன்றைய நிகழ்வுகள் மற்றும் கூட்ட மேலாண்மை குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டது.

விஜய்க்கு சம்மன்

இதன் தொடர்ச்சியாக, கடந்த 6ம் தேதி தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, கரூர் சம்பவம் தொடர்பாக இன்று காலை 11 மணியளவில் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்காக விஜய் இன்று காலை தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுள்ளார்.. காலை 10.15 மணியளவில் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக உள்ளார்.. விசாரணை பல மணி நேரம் நீடிக்கலாம் என்றும், இன்று மட்டுமல்லாமல் நாளையும் தொடர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. விசாரணை முடிந்த பின்னர், நாளை மாலை சென்னை திரும்ப திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்க்கு பாதுகாப்பு

இதற்கிடையில், விஜய் டெல்லி வருகையின் போது பொதுமக்கள், ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் கூடக்கூடும் என்பதால், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என தவெக சார்பில் டெல்லி போலீசுக்கு மின்னஞ்சல் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து மத்திய அரசின் ஒய் பிரிவு பாதுகாப்பு நடைமுறைகள் அடிப்படையில் டெல்லி விமான நிலையத்தில் இருந்து விஜய் செல்ல உள்ள அனைத்து பகுதிகளிலும் முழுப் பாதுகாப்பு வழங்க தில்லி போலீஸாா் ஒப்புதல் அளித்த நிலையில், தற்போது முழுவீச்சில் பாதுகாப்புகள் செய்யப்பட்டுள்ளன.

இன்று காலை 6.15 மணியளவில் தன்னுடைய நீலாங்கரை வீட்டில் இருந்து புறப்பட்ட விஜய், சென்னை ஏர்போர்ட்டுக்கு 6.50 மணிக்கு வந்தடைந்தார். பிறகு அங்கிருந்து தனி விமானம் மூலமாக விஜய் டெல்லி புறப்பட்டு சென்றார்..


யாரந்த 6 பேர்?

விஜய் வருகையையொட்டி, சிபிஐ அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கூடுதல் பாதுகாப்புகள் டெல்லியில் செய்யப்பட்டுள்ளன..

காலை 9.30 மணியளவில் டெல்லி சென்ற விஜய், அங்குள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு சென்றார்.. பிறகு அங்கிருந்து புறப்பட்டு காலை 11.30 மணிக்கு டெல்லி சிபிஐ அலுவலகத்திற்கு வந்த விஜய், அதிகாரிகள் முன்பு ஆஜரானார்.. அங்கு கரூர் துயரம் குறித்த கேள்விகளுக்கு, விஜய் பதிலளித்து வருகிறார்.

அதேபோல விஜயுடன் தவெக நிர்வாகிகள் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா, விஷ்ணு ரெட்டி, ஜெகதீஸ் பழனிசாமி, சி.ராஜேந்திரன், விஜயின் தனி பாதுகாவலர் நயீம் ஆகிய 6 பேரும் விஜய்யுடன் டெல்லி சென்றுள்ளனர்.

Credit: Oneindia

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+