சென்னை: நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் என விஜய் பெயர் செய்திகளில் இடம் பெறாத நாட்களே இல்லை என்று கூறலாம். அதுவும் தேர்தல் நெருங்கிக் கொண்டு இருக்கையில் ஒவ்வொரு மணிக்கு ஒரு முறை அவரது பெயர் செய்திகளில் இடம் பிடித்துக் கொண்டே இருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம். இப்படி இருக்கையில் விஜய்யிடம் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்த செல்வம் என்பவர் அளித்துள்ள சமீபத்திய பேட்டி பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
அந்த பேட்டியில், " நான் அறைக்குள் விஜய் சாருக்கு சாப்பாடு எல்லாம் டைனிங் டேபிளில் பார்த்து பார்த்து எடுத்து வைத்துக் கொண்டு இருக்கிறேன். இது மட்டும் இல்லாமல், தட்டு, ஸ்பூன் என அனைத்தையும் பலமுறை துடைத்து வைத்துக் கொண்டு காத்திருக்கிறேன்.

ஓங்கி அறைந்தார்: வெளியே யாரிடமோ போனில் மிகவும் கோபமாக பேசிக் கொண்டிருந்தார். ரொம்பவும் டென்ஷனாக தான் அறைக்குள் சாப்பிட வந்தார். வந்தவர் கடும் கோபத்திலேயே சாப்பிட்டுக் கொண்டும் இருந்தார். திடீரென என்னை ஓங்கி அறைந்தார். எதற்கு அறைந்தார் ஏன் அறைந்தார் என்று எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அவர் அறிந்ததில் நான் அங்கிருந்த ஷோபா மீது விழுந்துவிட்டேன். அடுத்து கொஞ்ச நேரத்தில் அவர் என்னை எட்டி எட்டி உதைத்தார்.
ஷாக் பேட்டி: அவர் எதற்கு அடிக்கிறார் ஏன் அடிக்கிறார் என்று கூட சொல்லவில்லை. ஆனால் அவரது முகத்தில் கோபம் இருப்பது மட்டும் எனக்குத் தெரிகிறது. மறு நாள் காலையில் கேரவனில் என்னிடத்தில் மன்னிப்பு கேட்டார் என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த பேட்டி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அவரது பேட்டியை பார்த்த பலரும் விஜய் இவ்வளவு மோசமாக நடந்து கொண்டாரா? என அதிர்ச்சியுடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள். செல்வர் விஜய்யிடம் உதவியாளராக பணியாற்றுவதற்கு முன்னர், அவரது தந்தை அதாவது விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரிடம் அவர் இயக்கிய 60 படங்களுக்கு மேல் உதவியாளராக பணியாற்றி இருக்கிறார் என்றும் அந்த பேட்டியில் தெரிவிக்கிறார். அவரது இந்த பேட்டி பலருக்கும் பகீர் கிளப்பும் பேட்டியாக உள்ளது.
Credit: Filmibeat


Click it and Unblock the Notifications