டெல்லி: 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்று இருந்தது. இந்த பட்ஜெட் அறிவிப்பைத் தொடர்ந்து எந்தப் பொருட்களின் விலை குறையும்.. எந்தப் பொருட்களின் விலை உயரும் என்பது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை தனது ஒன்பதாவது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இன்று காலை 10.30 மணியளவில் நாடாளுமன்றத்திற்கு வருகை வந்த நிர்மலா சீதாராமன், சரியாக 11 மணியளவில் தனது பட்ஜெட் உரையை ஆரம்பித்தார். இந்த முறை அவரது பட்ஜெட் உரை சுமார் 90 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது.

மத்திய பட்ஜெட்
இந்த பட்ஜெட் உரையில் அவர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். வருமான வரி சார்ந்து மிக பெரிய அறிவிப்புகள் இல்லை என்றாலும் கூட சில குறிப்பிட்ட அறிவிப்புகள் முக்கியத்துவம் பெற்றன. இந்த அறிவிப்புகளால் பல்வேறு பொருட்களின் விலை குறையும். மேலும், சில பொருட்களின் விலை அதிகரிக்கவே செய்யும். எந்தப் பொருட்கள் விலை குறையப் போகிறது.. எதன் விலை அதிகரிக்கும் என்பது தொடர்பாக நாம் பார்க்கலாம்.
17 உயிர் காக்கும் மருந்துகளுக்கு ஜீரோ இறக்குமதி வரி.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு
விலை குறையும் பொருட்கள்
- வெளிநாட்டுச் சுற்றுலா பேக்கேஜ் செலவுகள் குறையும். வெளிநாட்டுச் சுற்றுலாவில் வசூலிக்கப்படும் டிசிஎஸ் எனப்படும் மூலதன வரி 5-20%ஆக இருந்த நிலையில், அது 2% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
- வெளிநாட்டுக் கல்விச் செலவுகளுக்கான தாராளமயமாக்கப்பட்ட பணப் பரிமாற்றத் திட்டத்தின் (LRS) கீழ் மூலத்தில் வரிப் பிடித்தம் (TDS) வரியும் குறைக்கப்பட்டுள்ளது.
- மதுபானக் கழிவுகள் மற்றும் சில கனிமங்களுக்கான இறக்குமதி வரி 5%இலிருந்து 2% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
- எனர்ஜி மாற்ற உபகரணங்கள், சூரியசக்தி கண்ணாடிப் பொருட்கள், முக்கிய தாதுக்களுக்கான மூலதனப் பொருட்கள், சிவில் விமான உற்பத்தி பாகங்கள், மைக்ரோவேவ் ஆகிய பொருட்கள் மீதான இறக்குமதி வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
- அதேபோல அரிய மற்றும் புற்றுநோய் நோய்களுக்கான மருந்துகள், இந்திய மீனவர்களால் பிடிக்கப்படும் மீன்கள், அணுசக்தி திட்டங்களுக்கான பொருட்கள் ஆகியவற்றுக்கும் அடிப்படை சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
- மேலும், தனிப்பட்ட பயன்பாட்டுக்கான இறக்குமதிகளுக்கு இறக்குமதி வரியும் கூட 20%இலிருந்து 10% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
- மொபைல் போன் தயாரிப்பு உதிரிப் பாகங்கள் மற்றும் மூலதனப் பொருட்களுக்கு நிவாரணம் வழங்கியதால் செல்போன் விலை சற்று குறையலாம்!
- கிரீன் எனர்ஜி மாற்றத்தை ஊக்குவிக்க, மின்சார வாகன பேட்டரிகளில் உள்ள லித்தியம்-அயன் செல்களுக்கு அடிப்படை சுங்க வரி விலக்கப்பட்டுள்ளது.
- 'வெட் ப்ளூ' தோல் மற்றும் குறிப்பிட்ட ஜவுளி இன்புட் வரி குறைப்பால் தோல் பொருட்கள், ஆடைகள் விலை குறையும்.
- விளையாட்டுப் பொருட்கள் விலையைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்மலா சீதாராமன் தனது உரையில் குறிப்பிட்டார்.
விலை அதிகரிக்கும் பொருட்கள்
- மறுபுறம், சில விஷயங்கள் இனி அதிக செலவை ஏற்படுத்தும். வருமான வரித் தகவல்களைத் தவறாகத் தெரிவித்தால், வரித் தொகைக்கு இணையான 100% அபராதம் விதிக்கப்படும்.
- அசையும் சொத்துக்களை அறிவிக்காதவர்களுக்கு இனி அபராதம் விதிக்கப்படும்.
- பங்குச்சந்தையில் ஆப்ஷன் மற்றும் ப்யூச்சர்ஸ் டிரேடிங் செய்வோருக்கான பங்குப் பரிவர்த்தனை வரி (STT) 0.02%இலிருந்து 0.05% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
- மிகக் குறைந்த அளவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிச்சலுகைகள் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. இறக்குமதி அளவு மிகக் குறைவாக இருப்பதால் வரிச்சலுகைக்கு அளிக்கப்பட்ட பொருட்களுக்கான வரிவிலக்குகள் நீக்கப்பட்டுள்ளன. இதனால் அவற்றின் விலையும் உயரும்!
இனி வருமான வரி இல்லை.. விபத்து இழப்பீட்டு தொகைக்கு நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
புகையிலை
அதேபோல பீடி, சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் மீதான வரி உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதனால் அவற்றின் விலையும் கூட கணிசமாக உயரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. உரம், ஏடிஎம்கள், சில வகை கெமிக்கல்கள் மீதான வரியும் உயர்வதால் விலை ஏறும்!
Credit: Oneindia
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications