ஜிஎஸ்டிஎன் (GSTN) என்கிற சரக்கு மற்றும் சேவை வரி நெட்வொர்க் (Goods and Services Tax Network) ஆனது, யுபிஐ (UPI), கிரெடிட் கார்டு (Credit Card) மற்றும் டெபிட் கார்டு (Debit Card / ATM Card) முறைகள் மூலம் ஜிஎஸ்டி பணம் செலுத்த அனுமதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் ஆந்திர பிரதேசத்தையும் சேர்த்துள்ளது.
இது நாடு தழுவிய அளவில் - சரக்கு மற்றும் சேவை வரி ஆட்சியின் கீழ் 28 மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டதன் நிறைவை குறிக்கிறது. இந்த பட்டியலில் கூடிய விரைவில் யூனியன் பிரதேசங்களும் ஒருங்கிணைக்கப்படும் என்று ஜிஎஸ்டிஎன் கூறியுள்ளது; அதற்கான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது.

இந்த பட்டியலில் ஆந்திரப் பிரதேசத்தையும் சேர்ப்பதன் மூலமும், ஜிஎஸ்டி தளத்தில் வேகமான, பாதுகாப்பான மற்றும் பயனர் நட்பான டிஜிட்டல் கட்டண முறைகளை ஒருங்கிணைப்பதன் மூலமும் - இந்திய அரசாங்கம் ஆனது பணமில்லா வரி இணக்கத்தையும் ஊக்குவிப்பதோடு சேர்த்து பலருடைய வணிகத்தை எளிதாக்கி உள்ளது.
இந்த வசதியின் கீழ், ஜிஎஸ்டி பதிவுசெய்யப்பட்ட வரி செலுத்துவோர் இப்போது நெட் பேங்கிங் அல்லது மேனுவல் சலான் பதிவேற்றங்களை நம்பி இருக்காமல், ஜிஎஸ்டி போர்டல் மூலம் நேரடியாக தங்கள் வரிகளை செலுத்தலாம். இந்த புதிய இன்டர்பேஸில் யுபிஐ ஆப்கள் அல்லது ரூபே (Rupay), விசா (Visa), மாட்ஸர்கார்டு (MasterCard) மற்றும் டைனர்ஸ் கிளப் (Diners Club) போன்ற முக்கிய கார்டு நெட்வொர்க்குகள் மூலம் உடனடி செயலாக்கத்தை செய்யலாம்.
இது விரைவான தீர்வு மற்றும் நிகழ்நேர உறுதிப்படுத்தலை உறுதி செய்கிறது. மேலும் இந்த ஒருங்கிணைப்பு ஆர்பிஐ (RBI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவால் (Reserve Bank of India) அங்கீகரிக்கப்பட்ட கட்டண ஒருங்கிணைப்பு கட்டமைப்பின் (Payment Aggregator Framework) மூலம் எளிதாக்கப்படுகிறது.
ஆகையால் - ஆக்சிஸ் வங்கி, எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூனியன் வங்கி, கர்நாடகா வங்கி, கரூர் வைஸ்யா வங்கி மற்றும் சவுத் இந்தியன் வங்கி உள்ளிட்ட முன்னணி வங்கி கூட்டாளர்களிடம் இருந்து ஆதரவு கிடைக்கும்.
இந்த ஜிஎஸ்டி யுபிஐ ஒருங்கிணைப்பு ஆனது குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் அவர்கள் மொபைல் கட்டண ஆப்களை பயன்படுத்தி விரைவான, தொடர்பு இல்லாத வரி செலுத்துதல்களை செய்ய முடியும். இதேபோல் கார்டு அடிப்படையிலான விருப்பம் கார்ப்பரேட் அல்லது வங்கி தளங்களுடன் இணைக்கப்பட்ட டிஜிட்டல் சொல்யூஷன்களை விரும்பும் நிறுவனங்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது.
வரி செலுத்துவோர் அதிகாரப்பூர்வ ஜிஎஸ்டி போர்டல் வலைத்தளம் மூலம் இந்த புதிய வசதி அல்லது சேவையை நேரடியாக அணுகலாம் மற்றும் சலான் உருவாக்கும் நேரத்தில் - யுபிஐ / கிரெடிட் / டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்துதல் விருப்பத்தை (Payment through UPI / Credit / Debit Card" option) தேர்ந்தெடுக்கலாம்.
கடந்த நவம்பர் மாதம் சரக்கு மற்றும் சேவை வரி கட்டமைப்பு ஆனது ஜிஎஸ்டி 2.0-வை அமல் படுத்தியதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இதன்கீழ் புதிய ஜிஎஸ்டி பதிவு முறை (New GST registration system) ஆனது இன்று (நவம்பர் 1, 2025) முதல் அமலுக்கு வந்தது. இந்த சீர்திருத்தம் ஆனது குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (Micro, Small, and Medium Enterprises - MSMEs) மிகச்சிறந்த நன்மைகளை அளிக்கிறது.
ஜிஎஸ்டி 2.0-வின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஜிஎஸ்டி பதிவு முறை ஆனது மனித தலையீட்டை குறைப்பதையும் மற்றும் மிகவும் நீளமான நடைமுறை தாமதங்களை எதிர்கொள்ளும் சிறு வரி செலுத்துவோருக்கு ஒப்புதல்களை விரைவுபடுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளது. சிறு தொழில்முனைவோருக்கு ஜிஎஸ்டி பதிவு மிகவும் முக்கியமானதாகும். ஜிஎஸ்டி 2.0 வழியாக அந்த நடவடிக்கை - விரைவாகவும், மென்மையாகவும், வெளிப்படையாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Credit: Gizbot
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications