UPI.. 100 ரூபாயோ.. 500 ரூபாயோ.. உடனே இதை பண்ணுங்க.. GPay, PhonePe, Paytm வைத்து இருப்பவர்களுக்கு இதுதான் வழி!

கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ ஆப்கள் வழியாக பரிவர்த்தனைகளை செய்யும்போது, தவறான நம்பருக்கு பணத்தை அனுப்பினால், அதை எப்படி திரும்பப் பெறுவது என்பதை கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதைத்தான் இப்போது தெரிந்து கொள்ளப் போகிறோம்.

ரூ.100 அனுப்ப வேண்டிய இடத்தில் தவறுதலாக ரூ.1000 அனுப்புவது அடிக்கடி நடந்துவிடுகிறது. இதுபோன்ற நேரத்தில் அந்த நபரிடம் பேசி பணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம். ஏனென்றால், அந்த நபர் பெரும்பாலும் தெரிந்தவராக இருப்பார். ஆனால், யாரென்றே தெரியாத நபருக்கு பணத்தை அனுப்பிவிட்டால், அப்போதுதான் சிக்கல் தொடங்குகிறது.


UPI.. 100 ரூபாயோ.. 500 ரூபாயோ.. உடனே இதை பண்ணுங்க.. GPay, PhonePe!

ரூ.100 போன்ற கம்மியான தொகையை தவறுதலாக அனுப்பினாலும், அதை திரும்ப பெற்று கொள்ள வேண்டும். சின்ன தொகை என்று விட்டுவிடக் கூடாது. இப்படி தவறுதலாக செய்யப்படும் பரிவர்த்தனைகளின் போது என்னென்ன வழிகளில் பணத்தை திருப்ப பெற முடியும் என்பதை முதலில் தெரிந்து வைத்து கொள்ள வேண்டும்.

1. முதலில் பணத்தை அனுப்பும் முன், சரியான மொபைல் நம்பர் மற்றும் யுபிஐ ஐடியில் கொடுக்கப்பட்ட பெயரை சரிபார்த்து கொள்ளுங்கள். அதேபோல அனுப்ப வேண்டிய நபரிடம் இருந்து யுபிஐ ஆப்கள் வழியாக மெசேஜ் பெறுவது அல்லது மெசேஜ் அனுப்புவது போன்றவற்றை செய்து, உறுதிப்படுத்தி கொள்வதும் நல்லதுதான், பிறகு பணத்தை அனுப்புங்கள்.

2. கியூஆர் கோட் ஸ்கேன் செய்து பணத்தை அனுப்பும்போது, ஒரு முறைக்கு இரு முறை யுபிஐ ஐடி மற்றும் பெயரை சரிபார்த்து கொள்ளுங்கள். மளிகை கடை முதல் சூப்பர் மார்கெட் வரையில் ஸ்கேன் செய்த பிறகு அதில் வரும் பெயரை கேஷியர் அல்லது கடைக்காரரிடம் கேட்டு உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். அதன் பிறகு கூட பணத்தை அனுப்பி கொள்ளலாம்.

3. சில நேரத்தில் அவசரமாக பணத்தை தவறாக அனுப்பி விட்டால், முதலில் சம்பந்தப்பட்ட நபருக்கு மேசேஜ் அல்லது கால் செய்து பணத்தை திருப்பி கேட்கலாம். இது மொபைல் நம்பருக்கு பொருந்தும். ஆனால், ஆன்லைன் ஷாப்பிங், டிக்கெட் புக்கிங் போன்ற யுபிஐ பரிவர்த்தனைகளின்போது பணத்தை தவறாக அனுப்பினால் யாரிடம் கேட்பது என்று தெரியாது.

4. இந்த நேரத்தில் யுபிஐ ஆப்கள் வழியாகவே புகாரை பதிவு செய்து கொள்ளலாம். கூகுள் பே ஆப்பின் ஹோம் பேஜ்ஜில் வலது புறத்தின் மேலே இருக்கும் ப்ரொபலை கிளிக் செய்து கொள்ளுங்கள். இப்போது கீழே இருக்கும் Get Help விருப்பத்தை கிளிக் செய்து கொள்ளுங்கள். Are You Having Issues? விருப்பம் தோன்றும். இதை கிளிக் செய்து புகார் செய்யலாம்.

5. இதே போலவே மற்ற ஆப்களிலும் விருப்பங்கள் இருக்கின்றன. இருப்பினும், கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்றவை மூன்றாம் தர ஆப்களாக மட்டுமே இருக்கின்றன. பேங்குகளுக்கு இடையில் மட்டுமே பரிவர்த்தனை நடக்கிறது. ஆகவே, சம்பந்தப்பட்ட பேங்குகளை தொடர்பு கொண்டு புகார் தெரிவிப்பது விரைவில் பணத்தை திருப்பப் பெற வழிவகுக்கும்.

6. ஆகவே, பேங்குகளின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். தவறாக அனுப்பப்பட்ட தொகையின் யுபிஐ பரிவர்த்தனை ஐடி (UPI Transaction ID), யாருக்கு அனுப்பியது என்பதை தெரிவிக்க யுபிஐ ஐடி (UPI ID) அல்லது மொபைல் நம்பர் உள்ளிட்ட விவரங்களை சரியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும். இது பேங்க் தரப்பில் கேட்கப்படும்.

7. இந்த விவரங்களின் அடிப்படையில் புகார் மீதான நடவடிக்கை எடுக்கப்படும். பிறகு பேங்குகள் தலையீடு செய்து பணத்தை திரும்ப அனுப்பி வைக்கும். ஆகவே, கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற ஆப்களைவிட பேங்குகள் வழியாக புகார் அளிப்பது உடனடி நடவடிக்கைக்கு வழிவகுக்கிறது. பணத்தை அனுப்பும் முன்பு இரு முறை சரிபார்த்துவிட்டு அனுப்புங்கள்.

Credit: Gizbot

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+