ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா நடக்குமா?.. மலேசியா போயும் சிக்கல்.. என்னங்க இது விஜய்க்கு வந்த சோதனை?

சென்னை: ஹெச்.வினோத் - விஜய் கூட்டணியில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் படம் அதீத எதிர்பார்ப்பை பெற்றிருக்கும் படமாக கோலிவுட்டில் மாறியிருக்கிறது. இதுதான் அவருடைய கடைசி படம் என்று சொல்லப்பட்டிருப்பதால் உருவாகியிருக்கும் ஹைப் இது. படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த விழாவுக்கு புதிய சிக்கல் ஒன்று எழுந்திருக்கிறது.

அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கும் விஜய்; சினிமாவிலிருந்து ஒட்டுமொத்தமாக ஒதுங்கவிருக்கிறார். கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கும் மேலாக மகிழ்வித்த அவர்; சினிமாவுக்கு குட் பை சொல்லவிருப்பதால் அவருடைய ரசிகர்கள் சோகமடைந்திருக்கிறார்கள். இதன் காரணமாக வினோத் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் ஜனநாயகன் படத்தை ஒரு எமோஷனாகவே பார்க்கிறார்கள். இது கோலிவுட்டில் பெரிய மைல் கல்லாக அமையும் என்றும் அவர்கள் அடித்து கூறுகிறார்கள்.

ஜனவரியில் ரிலீஸ்: படமானது 2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. படத்தின் சேட்டிலைட், ஓடிடி வியாபாரம் எல்லாம் இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய விலைக்கு வியாபாரமாகியிருப்பதாக திரைத்துறையிலிருந்து சில பட்சிகள் கூறுகின்றன. இப்படி எக்கச்சக்க ஹைப்பை சந்தித்திருக்கிறது படம். கண்டிப்பாக ஒன்பதாம் தேதியை விஜய் ரசிகர்கள் ஒரு பண்டிகை போல் கொண்டாடுவார்கள் என்பது மட்டும் உறுதி.


ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா நடக்குமா?.. மலேசியா போயும் சிக்கல்.. என்னங்க இது விஜய்க்கு வந்த சோதனை?
Photo Credit:

மலேசியா பறந்த படக்குழு: இதற்கிடையே படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் அமைந்திருக்கும் புக்கீட் ஜலீல் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. தமிழ்நாட்டில் அரசியல் மேடைகளில் ஏறி திமுகவை தொடர்ந்து விஜய் சாடிவருவதால்; இங்கே நடத்தினால் தேவையில்லாத சங்கடங்கள் வரும் என்று நினைத்து; மலேசியாவுக்கு இசை வெளியீட்டு விழாவை மாற்றியிருக்கிறது படக்குழு. விஜய் உள்ளிட்டோர் நேற்று அங்கு சென்று சேர்ந்தார்கள்.

ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா.. மலேசியாவில் மாஸ் காண்பிக்கும் விஜய்.. எத்தனை கார் பாதுகாப்புக்குனு பாருங்க

ஆல் ஏரியாவிலும் கில்லிதான்: வெளிநாட்டில் நடந்தால் என்ன; அங்கும் எங்கள் தளபதிக்காக படையெடுத்து வருவோம் என்பதை நிரூபித்திருக்கிறார்கள் விஜய்யின் ரசிகர்கள். ஒரு லட்சம் பேர்வரை அமரக்கூடிய ஜலீல் மைதானத்தில் இந்த விழாவுக்காக 80,000 பேருக்கும் அதிகமானோர் வருவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. தளபதி திருவிழாஎன்கிற பெயரில்தான் இந்த கான்செர்ட் நடக்கிறது. இதில் பல பின்னணி பாடகர்களும், பாடகிகளும் விஜய் பட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்விக்க இருக்கிறார்கள்.

விழா நடக்குமா?: இந்நிலையில் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா எந்த சிக்கலும் இல்லாமல் நடக்குமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. அதாவது கோலாலம்பூரில் இன்று மாலை 100 சதவீதம் மழைக்கு வாய்ப்பு என்று கூறப்பட்டுள்ளது. இதனால் விழா நடப்பதில் ஏதேனும் சிக்கல் வந்துவிடுமோ என்று ரசிகர்கள் அஞ்ச ஆரம்பித்திருக்கிறார்கள்.

அதேசமயம் ஸ்டேடியத்தில் விஜய் பேசுவதற்கும், கலைஞர்கள் பாடுவதற்கும் மேடை ஒன்றை அமைத்திருக்கிறார்கள். இதனால் மழை பெய்யும்பட்சத்தில் பெரிய பாதிப்பு இருக்காதுதான் என்றாலும்; வரும் ரசிகர்களுக்கு கண்டிப்பாக அசௌகரியம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே அதை தவிர்க்கும் விதமாக ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவுக்கு இயற்கை வழி விடுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Credit: Filmibeat

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+