சென்னை: 2025ம் ஆண்டு கோலிவுட்டுக்கு நவம்பர் மாதமே நிறைவு அடைந்து விட்டதை போலத்தான் உள்ளது. டிசம்பர் மாதம் புதிதாக எந்தவொரு பெரிய தமிழ் படமும் வெளியாகாத சூழல் உருவாகியுள்ளது. இந்த மாதம் எப்படியாவது வா வாத்தியார், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி உள்ளிட்ட படங்கள் வெளியாகும் என ரசிகர்களை விட தியேட்டர் உரிமையாளர்கள் ரொம்பவே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில், அவர்களுக்கு பெரிய ஆப்பை தயாரிப்பாளர்கள் வைத்து விட்டனர்.
2025ம் ஆண்டில் டிசம்பர் மாதம் மட்டுமில்லை, ஒட்டுமொத்த ஆண்டே தமிழ் சினிமாவுக்கும் தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்களுக்கும் தமிழ் படங்களை பெரிய விலை கொடுத்து வாங்கிய ஓடிடி நிறுவனங்களுக்கும் தலையில் பெரிய துண்டு தான் என்கின்றனர்.

ஒரு சில சிறு பட்ஜெட் படங்களும் இளம் இயக்குநர்கள் படங்களும் தான் ஓரளவுக்கு தியேட்டர்களையும் தமிழ் சினிமாவையும் இந்த ஆண்டு காப்பாற்றியுள்ளது. இந்நிலையில், தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு விமர்சனங்களை கடந்து பாக்ஸ் ஆபீஸ் வசூலில் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்கள் குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..

10. ரெட்ரோ: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், சுவாசிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்த ஆண்டு மே 1ம் தேதி திரையரங்குகளில் வெளியான சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் உலகளவில் அதிகபட்சமாக 97.35 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது. தமிழ்நாட்டில் ரெட்ரோ திரைப்படம் அதிகப்படியாக 54.55 கோடி வசூலை அள்ளியது. சூர்யாவுக்கு 100 கோடிக்கும் அதிகமான வசூலை இந்த படம் அள்ளிக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாக்ஸ் ஆபீஸில் பெரிய வெற்றியை பெறவில்லை. ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமம் உள்ளிட்டவற்றில் அதிக லாபம் அடைந்ததாக தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு இருந்தது. சூர்யா ரசிகர்களுக்கு பிடித்தமான படமாக ரெட்ரோ இருந்தது. பொதுமக்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே இந்த படம் பெற்றது.

9. டியூட்: இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான டியூட் திரைப்படம் ஜென் ஸி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதே சமயம் படத்துக்கு எதிரான ஏகப்பட்ட ட்ரோல்களும் குவிந்தன. ஆனால், பாக்ஸ் ஆபீஸில் உலகளவில் 114.3 கோடி வசூலை ஈட்டிய டியூட் திரைப்படம் தமிழ்நாட்டில் 56.8 கோடி வசூலை மட்டுமே ஈட்டி இந்த ஆண்டு தமிழ்நாட்டில் அதிக வசூல் ஈட்டிய படங்களின் பட்டியலில் 9வது இடத்தை பிடித்துள்ளது.

8. மதராஸி: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யூத் ஜமால், பிஜு மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான மதராஸி திரைப்படம் உலகளவில் 98.75 கோடி வசூலை ஈட்டியது. தமிழ்நாட்டில் 57.19 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. தயாரிப்பு நிறுவனம் மதராஸி திரைப்படம் 100 கோடி வசூலை கடந்ததாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

7. தலைவன் தலைவி: பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான தலைவன் தலைவி திரைப்படம் சந்தோஷ் நாராயணனின் "பொட்டல மிட்டாயே" பாடல் மற்றும் பரோட்டா கடை மூலம் வேறலெவலில் பிக்கப் ஆனது. உலகளவில் 85.78 கோடி வசூலை ஈட்டிய இந்த படம் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 59.36 கோடி ரூபாய் வசூலை அள்ளியது.

6. டூரிஸ்ட் ஃபேமிலி: அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி ஏகப்பட்ட ரசிகர்களையும் விமர்சகர்களையும் கவர்ந்து பெரும் பாராட்டுக்களை பெற்றது. குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த படம் இந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 87.23 கோடி ரூபாய் வசூலை உலகளவில் தமிழ்நாட்டில் 61.62 கோடி ரூபாய் வசூலையும் ஈட்டியுள்ளது.

5. காந்தாரா - எ லெஜண்ட் சாப்டர் 1: ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் தான் இந்த ஆண்டு இந்தியாவிலேயே அதிக வசூல் ஈட்டிய நம்பர் ஒன் படமாக உள்ளது. உலகளவில் 852 கோடி ரூபாய் வசூலை ஈட்டிய காந்தாரா திரைப்படம் தமிழ்நாட்டிலும் 63.42 கோடி ரூபாய் வசூலை அள்ளி டாப் 5 இடத்தை பிடித்துள்ளது.

4. விடாமுயற்சி: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான விடாமுயற்சி திரைப்படம் உலகளவில் 135.89 கோடி ரூபாய் வசூலை ஈட்டிய நிலையில், தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 78.58 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது.

3. டிராகன்: அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், மிஷ்கின், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான டிராகன் திரைப்படம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் விமர்சகர்களையும் வெகுவாக கவர்ந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 151.83 கோடி ரூபாய் வசூலை உலகளவில் ஈட்டிய டிராகன் திரைப்படம் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 83.76 கோடி ரூபாய் வசூலை அள்ளி 3வது இடத்தை பிடித்துள்ளது.

2. குட் பேட் அக்லி: அஜித் குமார் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், அஜித் குமார் மற்றும் தியேட்டருக்குச் சென்று படம் பார்க்கும் ரசிகர்களுக்கு கமர்ஷியல் விருந்தாகவே இருந்தது. ஆதிக் ரவிச்சந்திரன் மார்க் ஆண்டனி படத்தை தொடர்ந்து அஜித்தை இயக்கும் வாய்ப்பை பெற்ற நிலையில், பக்காவான ஃபேன் பாய் சம்பவத்தை செய்திருந்தார். உலகளவில் 248.25 கோடி ரூபாய் வசூலை ஈட்டிய குட் பேட் அக்லி திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 147.75 கோடி ரூபாய் வசூலை அள்ளியதாக சாக்னிக் வெப்சைட் தகவல் தெரிவித்துள்ளது.

முதலிடத்தில் கூலி: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கிங் நாகார்ஜுனா, அமீர்கான், உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், செளபின் சாஹீர் உள்ளிட்ட பான் இந்தியா நடிகர்கள் நடித்த கூலி திரைப்படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தாலும் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் படை காரணமாக உலகளவில் 518 கோடி ரூபாய் வசூலையும் தமிழ்நாட்டில் 183 கோடி ரூபாய் வசூலையும் ஈட்டி இந்த 2025ம் ஆண்டில் தமிழில் அதிகம் வசூல் செய்த படங்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. அடுத்த ஆண்டு ஜன நாயகன் மற்றும் ஜெயிலர் 2 உள்ளிட்ட படங்களுக்கு பலத்த போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 75 வயது பிறந்தநாளையும் சினிமாவில் 50 ஆண்டுகளையும் கொண்டாடி வரும் நிலையிலும், நம்பர் ஒன் இடத்தில் உள்ளார்!
Credit: Filmibeat
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications