பேங்க் அக்கவுண்ட்டுக்கு ஆபத்து.. கடைசியாக எப்போது பேங்க் ஸ்டேட்மென்ட் செக் பண்ணீங்க? புதிய UPI எச்சரிக்கை!

யுபிஐ (UPI) வழியாக பணம் செலுத்துவது எவ்வளவுக்கு எவ்வளவு ஈஸியான வேலையாக இருக்கிறதோ.. அதில் அவ்வளவு ஆபத்துகளும் உள்ளன. ஒரு சிறிய கவனக்குறைவு கூட கடின உழைப்பால் நீங்கள் சம்பாதித்த பணத்தை இழக்க வழிவகுக்கும். உங்கள் பேங்க் அக்கவுண்ட்டில் உங்கள் பணம் பாதுகாப்பாக இருக்க நீங்கள் செய்ய வேண்டிய 9 முக்கியமான விஷயங்கள் இதோ:

9. பேங்க் ஸ்டேட்மென்ட்களை தவறாமல் சரிபார்க்கவும்: பேங்க் ஸ்டேட்மென்ட்களை அடிக்கடி கண்காணிப்பது சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளை முன்கூட்டியே கண்டறிய உதவுகிறது. ஒரு சிறிய அளவிலா அங்கீகரிக்கப்படாத டெபிட் கூட ஒரு பெரிய மோசடி முயற்சியின் அடையாளமாக இருக்கலாம்.


கடைசியாக எப்போது பேங்க் ஸ்டேட்மென்ட் செக் பண்ணீங்க? UPI எச்சரிக்கை!

8. அதிகாரப்பூர்வ ஆப் ஸ்டோர்களில் இருந்து யுபிஐ ஆப்களை பதிவிறக்கவும்" எப்போதும் அதிகாரப்பூர்வ ஆப் ஸ்டோர்களில் இருந்து மட்டுமே யுபிஐ ஆப்களை பதிவிறக்கவும். ஆண்ட்ராய்டு பயனர்கள் ஜிபே, போன்பே மற்றும் பீம் போன்ற ஆப்களை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்தும், ஆப்பிள் பயனர்கள் ஆப்பிள் ஆப் ஸ்டோரில்இருந்தும் பதிவிறக்க வேண்டும்.

7. பரிவர்த்தனை லிமிட்களை அமைக்கவும்: உங்கள் யுபிஐ ஆப்பில் தினசரி பரிவர்த்தனை வரம்பை நீங்கள் செட் செய்யலாம். ஆப்பின் செட்டிங்ஸ்-ல் குறைந்த தினசரி வரம்பை நீங்கள் செட் செய்யலாம். இப்படி செய்வதன் மூலம் உங்கள் அக்கவுண்ட் அல்லது டிவைஸ் ஆனது தவறான கைகளுக்கு சென்றாலும், அவர்களால் பெரிய தொகையை மாற்ற முடியாது.

6. ஸ்கேன் செய்வதற்கு முன் க்யூஆர் கோட்-ஐ சரிபார்க்கவும்: சில நேரங்களில் அவசரமாக, க்யூஆர் கோட்களை சரியாக சரிபார்க்காமல் ஸ்கேன் செய்வோம். ஒரு கடையில் க்யூஆர் கோட்-ஐ ஸ்கேன் செய்யும்போது, ​​தொகையையும் பெறுநரின் பெயரையும் சரிபார்க்கவும். போலி க்யூஆர் குறியீடுகள் தவறான கணக்கிற்கு பணம் அனுப்ப வழிவகுக்கும்.

5. வாடிக்கையாளர் சேவை எண்களை ஆன்லைனில் தேடாதீர்கள்: போலி வாடிக்கையாளர் சேவை எண்கள் பெரும்பாலும் மோசடி செய்பவர்களால் ஆன்லைனில் பரப்பப்படுகின்றன. வாடிக்கையாளர் சேவை தொடர்பு விவரங்களை கண்டறிய எப்போதும் அதிகாரப்பூர்வ செயலி அல்லது வங்கியின் வலைத்தளங்களை பயன்படுத்தவும்.

4. தெரியாத இணைப்புகளை கிளிக் செய்யாதீர்கள்: மோசடி செய்பவர்கள் போலி மெசேஜ்கள், இமெயில்கள் மற்றும் வாட்ஸ்அப் இணைப்புகள் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனில் மால்வேரை நிறுவலாம். எனவே, மெசேஜ் எவ்வளவு நம்பகமானதாக தோன்றினாலும், தெரியாத இணைப்புகளை கிளிக் செய்யாதீர்கள்.

3. உங்கள் ஸ்க்ரீனை லாக் செய்ய மறக்காதீர்கள்: உங்கள் ஆப்களில் எப்போதும் பிங்கர் பிரிண்ட் அல்லது பேஸ் அன்லாக்கை எனேபிள் செய்து வைக்கவும். மேலும், உங்கள் யுபிஐ ஆப்பில் கிடைக்கும் ஆப் லாக் அம்சத்தையும் பயன்படுத்தவும். இது உங்கள் ஸ்மார்ட்போனை யாராவது திருடி பரிவர்த்தனைகளை செய்வதைத் தடுக்கும்.

2. உங்கள் யுபிஐ பின்னை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்: உங்கள் யுபிஐ பின் உங்கள் வங்கிக் கணக்கின் திறவுகோலாக செயல்படுகிறது. இந்த பின்னை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். லீக் ஆன யுபிஐ பின் உங்கள் பேங்க் அக்கவுண்ட்டை சில நொடிகளில் காலி செய்துவிடும்.

1.ஒடிபி-க்களை ஒருபோதும் பகிர வேண்டாம்: வங்கிகள் மற்றும் யுபிஐ ஆப்கள் ஆனது அழைப்புகள், செய்திகள் அல்லது மின்னஞ்சல்கள் மூலம் ஒடிபி-க்களை ஒருபோதும் கேட்காது. ஒடிபி-ஐ பகிர்வது உங்கள் வாங்கி கணக்கிற்க்கான நேரடி அணுகலை வழங்குகிறது. யாராவது ஒடிபி கேட்டால், அது ஒரு மோசடி என்பதை முன்கூட்டியே புரிந்துகொள்ளவும்.

Credit: Gizbot

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+