சென்னை: இந்திய இளைஞர்கள் மத்தியில் இன்று சொந்த வீடு வாங்குவது வீண் செலவு என்ற எண்ணம் அதிகம் காணப்படுகிறது. ஆனால் முதல் முறையாக சொந்த வீடு வாங்குவோருக்குத் தான் இதன் அருமை புரியும்.
எது எப்படியிருந்தாலும் இன்றைய விலைவாசியில் நாட்டின் பெரு நகரங்களில் முக்கியமான பகுதியில் ஒரு வீட்டை வாங்க வேண்டும் என்றால் குறைந்தது 1 கோடி ரூபாய் வேண்டும். இதை எப்படித் திரட்டுவது என்பது தான் பெரும்பாலானோரின் கேள்வியாக உள்ளது.

20 வயதான அருண், தனது ப்ரீலான்சிங், இன்டர்ன்ஷிப், சிறிய அளவிலான பிஸ்ன்ஸ் ஆகியவற்றின் மூலம் மாதம் 76000 ரூபாய் சம்பாதிக்கிறார். இந்த நிலையில் வீட்டு வாடகை மற்றும் இதர செலவுகளுக்கு மத்தியில் சொந்தமாக வீடு வாங்குவதற்காக 28 வயதிற்குள் ரூ.1 கோடி சேமிக்க விரும்புவதாகக் கூறியுள்ளார்.
இந்த 1 கோடி ரூபாய் சேமிக்க மாதந்தோறும் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும், எங்கு முதலீடு செய்ய வேண்டும் என்றும் கேட்டிருந்தார். இதற்குப் பஜாஜ் கேப்பிட்டல் லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரி ராஜிவ் பஜாஜ் அளித்த பதில் என்ன தெரியுமா..?
12% வருடாந்திர வருமானத்தை அளிக்கும் திட்டங்களில் மாதந்தோறும் ரூ.63,000 முதலீடு செய்தால் 8 வருடங்களில் ரூ.1 கோடி வரையிலான தொகையைச் சம்பாதிக்க முடியும். தற்போதைய வருமான நிலையைக் கருத்தில் கொண்டு, முதலீடு மற்றும் அன்றாடச் செலவுகளுக்கு மத்தியில் ஒரு சமநிலையை ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
தற்போதைய வருமான நிலையில் மாதந்தோறும் ரூ.35,000 முதலீடு செய்வது தான் முதலீட்டு வளர்ச்சி மற்றும் அன்றாடச் செலவுகள் இரண்டையும் ஈடு செய்யும் அணுகுமுறையாக இருக்கும் என அறிவுறுத்தியுள்ளார்.
எதிர்காலச் சம்பள உயர்வுகளைப் பயன்படுத்தி, சிப் (SIP) முறையில் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது, உங்கள் நிதி இலக்குகளை அடைவதை விரைவுபடுத்தும் எனவும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் நிலையான வருமானத்தைப் பெரும் வகையில், பல்வகைப்பட்ட மற்றும் நெகிழ்வுத்தன்மை கொண்ட முதலீட்டுத் திட்டத்திற்கு, கோடக் மல்டி கேப் ஃபண்ட், நிப்பான் இந்தியா மல்டி கேப் ஃபண்ட், ஹெச்.டி.எஃப்.சி மிட் கேப் ஆபர்ச்சுனிட்டி ஃபண்ட், நிப்பான் இந்தியா கிரோத் ஃபண்ட், பராக் பாரிக் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட், பந்தன் ஸ்மால் கேப் ஃபண்ட் போன்ற பல்வேறு நிதிகளில் சிப் முதலீட்டை சமமாகப் பிரிக்கலாம்.
இது பல்வேறு பிரிவுகளையும், சொத்து மேலாண்மை நிறுவனங்களையும் உள்ளடக்கிய ஒரு நல்ல முதலீட்டு அணுகுமுறையை இது வழங்கும். இதேபோல் 8 வருடத்தில் 1 கோடி ரூபாய் ஈட்ட மாதம் 63000 ரூபாயை இந்தப் பண்டுகளில் சமமாகப் பிரித்து முதலீடு செய்தால் 12 சதவீத சராசரி வருமானத்தின் மூலம் இலக்கை அடையலாம் என அறிவுறுத்தியுள்ளார்.
இதேபோல் உங்கள் முதலீட்டை ஒவ்வொரு ஆண்டும் மறுஆய்வு செய்ய வேண்டும் எனவும் பஜாஜ் கேப்பிட்டல் லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரி ராஜிவ் பஜாஜ் கூறியுள்ளார். இது அருண்-க்கான திட்டம் மட்டுமில்லை அடித்த சில வருடத்தில் பெரும் தொகையைச் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அனைவருக்கும் பொருந்தும்.
பிள்ளைகளில் கல்வி செலவுகள், திருமணங்கள், மருத்துவச் செலவு, வெளிநாட்டு ரூர், கார், சொந்த வீடு, விரைவாக ஓய்வு பெற திட்டமிடுவது போன்ற பல விஷயங்களுக்கு இந்த முதலீட்டுத் திட்டம் பலன் அளிக்கும்.
More From GoodReturns

போர் பதற்றத்திலும் லாபம் தரும் பக்கா பிளான்! பங்குச்சந்தை வீழ்ச்சியில் நீங்கள் கவனிக்க வேண்டிய SIP!

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

மாதம் ரூ.4 லட்சம் சம்பளம் தரும் வேலையை விட்டு ரோட்டு கடை போட்ட டெக்கி..!! சாதித்தாரா? சறுக்கினாரா?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

HDFC பங்கினை வாங்க இது பொன்னான நேரமா? - பங்கு மதிப்பு சரிந்துள்ள நிலையில் நிபுணர்கள் டிப்ஸ்

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?



Click it and Unblock the Notifications