தங்கம் (Gold) வாங்குவது என்பது நம் ஊரில் வெறும் ஆபரணம் மட்டுமல்ல, அது நம் பாரம்பரியத்துடன் ஒன்றிப்போன ஒரு உணர்வு. உணர்வுப்பூர்வமான சேமிப்பு. ஆனால் நகைக்கடைக்கு சென்றால் 22 கேரட், 18 கேரட், 9 கேரட் என்று சொல்லி நம்மை குழப்புவார்கள். 18 கேரட் தங்கத்தில் நிஜமாகவே எவ்வளவு தங்கம் இருக்கிறது தெரியுமா?
கல் வைத்த நகைகளுக்கும், வைர நகைகளுக்கும் ஏன் 18 கேரட்டை பரிந்துரைக்கிறார்கள்? முதலீடு என்று வரும்போது 18 கேரட் வாங்குவது புத்திசாலித்தனமா அல்லது நஷ்டமா? உங்கள் பணத்தை சரியான தங்கத்தில் முதலீடு செய்யத் தேவையான உண்மைகளையும் உடைக்கிறது இந்த பதிவு. அட்சய திருதியை நாளில் உங்கள் செல்வம் பெருக வேண்டும் என நினைத்து வாங்கும் தங்கம், எந்த அளவுக்கு தரமான ஒன்று என தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா?

இந்திய குடும்பங்களின் ஒவ்வொரு சிறப்பான தருணங்களிலும், முக்கியத்துவம் வாய்ந்த விலை உலோகமாக தங்கம் இருக்கிறது. அது திருமணம், விழாக்கள், பண்டிகைகள் என அனைத்து காலகட்டத்திலும் மக்களின் விருப்பமான ஒரே ஒரு உலோகம் தங்கம் தான். சொல்லப்போனால் தங்கம் என்பது பிடித்தமான உலோகம் என்பதை தாண்டி, அந்தஸ்தின் சிறந்த அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால் இன்று தங்கம் விலையானது லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், மக்கள் தங்கத்தை குறைந்த விலையில் வாங்க வழிகளைத் தேடி வருகின்றனர்.
என்னதான் பல ஆயிரம் திட்டங்கள் இருந்தாலும் கூட, தங்கம் தான் பர்ஸ்ட் சாய்ஸ். இருப்பினும் தற்போதைய காலத்தில் தங்க நகை வாங்க செல்லும் போது, வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் ஒரு குழப்பதை எதிர்கொள்கின்றனர். அது 22 கேரட் தங்கமா அல்லது 18 கேரட்டா, 9 கேரட்டா, எது பெஸ்ட் என்ற கேள்வி எழுகிறது. இதில் 22 கேரட் 18 கேரட் தங்கம் என்பது மிகவும் பிரபலமானவை. அவற்றின் தூய்மை, தோற்றம், உறுதி மற்றும் விலை ஆகியவற்றில் பெரும் மாற்றங்கள் உள்ளன. இந்த வித்தியாசங்களை புரிந்து கொள்வது உங்களுடைய தேவை மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்ப சரியான முடிவு எடுக்க உதவும்.
எந்த கேரட் என்ன தரம் என தெரிந்து கொள்ளும் முன்பு, முதலில் கேரட் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். கேரட் என்பது தங்க நகைகளின் தூய்மையை அளவிட பயன்படும் அலகு ஆகும். சுத்தமான தங்கம் என்பது 24 கேரட். இதில் 99.9% தங்கம் தான். இது மிகவும் மென்மையானது என்பதால் நகைகள் செய்ய முடியாது. ஆக அதன் வலிமை மற்றும் ஆயுளை அதிகரிக்க அதனுடன் காப்பர் அல்லது வெள்ளி அல்லது நிக்கல் சேர்ப்பார்கள்.
18 கேரட் தங்கத்தில் 75% சுத்தமான தங்கம் மற்றும் 25% இதர உலோகங்கள் இருக்கும். இதுவே 9 கேரட் தங்கத்தில் வெறும் 37.5% தங்கம் மட்டுமே இருக்கும். மீதமுள்ளது இதர உலோகங்கள் மட்டுமே. இந்த தூய்மை வித்தியாசம், நகையின் நிறம், பொலிவு விலை மற்றும் உழைக்கும் காலம் ஆகியவற்றில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
18 கேரட் தங்கத்தை எடுத்து கொண்டால், கிட்டத்தட்ட 22 கேரட் மற்றும் 24 கேரட் போலவே கலர் இருக்கும். ஆகவே இது திருமண நகைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது தலை தலைமுறையாக பயன்படுத்த ஏற்றதாகவும் பார்க்கப்படுகிறது. இதி 75% தங்கம் தான் இருக்கும். அடர் மஞ்சள் நிறத்துடன் கூடிய தங்கமானது பிரகாசமாகவும், மினுமினுப்பாகவும் இருக்கும். அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்றது. இருப்பினும் இது 9 கேரட் உடன் ஒப்பிடும்போது விலை அதிகம்.
9 கேரட் தங்கத்தை பொறுத்த வரையில் இதர உலோகங்கள் அதிகம் என்பதால், தங்கத்தின் உண்மையான பொலிவு இருக்காது. வெளிர் மஞ்சள் மற்றும் குறைவான ஜொலிப்பு தான் இருக்கும். தினசரி அணியும் மோதிரங்கள் மற்றும் செயின்களுக்கு ஏற்றது. இது 18 கேரட், 22 கேரட்டை விட விலை குறைவு என்பதால் பட்ஜெட்டிற்குள் அடங்கும். தினசரி பயன்படுத்தும் நகைகள், குறைந்த பட்ஜெட் கொண்டவர்கள் மற்றும் பொலிவை விட வலிமைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் இதைத் தேர்வு செய்யலாம்.
எதை வாங்கலாம்?
உங்களுக்கு தங்கம் போன்றே ஜொலிக்கும், தலைமுறை கடந்து மதிப்புமிக்க நகைகள் வேண்டுமென்றால் 18 கேரட் தங்கத்தை தேர்வு செய்யுங்கள். இது திருமணங்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு பரிசளிக்க உகந்தது. மாறாக தினசரி பயன்பாட்டிற்கு உறுதியான மற்றும் விலை மலிவான நகை வேண்டுமென்றால் 9 கேரட் தங்கத்தை தேர்வு செய்யலாம். இது நடைமுறை பயன்பாட்டிற்கு வசதியானது.
18 கேரட் தங்கத்தில், 9 கேரட்டை விட இரண்டு மடங்கு அதிக தங்கம் இருப்பதால், அதன் விலை கணிசமாக உயர்ந்து காணப்படும். 18 கேரட் நகைகள் வாங்குவதற்கு அதிக செலவானாலும், அவற்றில் தங்கம் அதிகம் இருப்பதால் மறு விற்பனை செய்யும்போது நல்ல விலை கிடைக்கும். ஆனால், 9 கேரட் நகைகள் வாங்கும் போது சுலபமாக இருந்தாலும், விற்கும் போது மதிப்பு மிக குறைவாகவே இருக்கும்.
ஆக பொலிவு, தூய்மை மற்றும் கலாச்சார மதிப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களுக்கு 18 கேரட் தங்கம் கூடுதல் விலைக்கு தகுதியானது. மாறாக உறுதி மற்றும் மலிவான விலை மட்டுமே முக்கியம் என்பவர்களுக்கு 9 கேரட் தங்கம் ஒரு விவேகமான தேர்வாகும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம், வைரம் எல்லாம் ஒரம்போங்க! 1 கிராம் விற்றால் 200 கிலோ தங்கம் வாங்கலாம்!என்னது,இவ்வளவு விலையா?

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..!! தாறுமாறாக சரிந்த தங்கம் விலை..!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் விலையேற இதுதான் காரணமா? 23 மாதங்களாக தொடரும் வேட்டை!அமெரிக்காவையே ஓரங்கட்டிய நாடுகள்? ஏன்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

எல்லாம் காலியாக போகுது.. தங்கம், பிட்காயின் தான் இனி ராஜா! ராபர்ட் கியோசாகியின் பகீர் எச்சரிக்கை!

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு; இந்த நிலை அப்படியே நீடிக்குமா?

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: இனி வரும் நாட்களில் விலை ஏறுமா? இறங்குமா?

மதுரை மக்களே இன்று தங்க நகை வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?



Click it and Unblock the Notifications


