வரி சேமிப்புடன் காப்பீடு.. மாத சம்பளக்காரர்களுக்குப் பெஸ்ட் சாய்ஸ்..!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: அழகுக்கு எப்படி "லிப்ஸ்" ரொம்ப முக்கியமோ.. அதே மாதிரிதாங்க வரி சேமிப்புக்கு 'கிளிக்2இன்வெஸ்ட்-யுலிப்ஸ்' ரொம்ப முக்கியம்.

எச்டிஎப்சி லைப் வழங்கும் "Click2Invest-ULIPs" வரி சேமிப்புக்கு உதவும் அருமையான திட்டமாகும். ஒவ்வொரு ஆண்டும் இந்த வரி சேமிப்பு திட்டங்கள் குறித்த கவலை ஒவ்வொரு மாதச் சம்பளதாரருக்கும் வருவது இயல்பாகும். இதுபோன்ற சமயங்களில் பல்வேறு விதமான திட்டங்களை நாம் பரிசீலிக்கிறோம். அதில் யூனிட் லிங்க்ட் இன்சூரன்ஸ் திட்டங்களை நாம் முக்கியமாக கவனிக்க வேண்டும்.

வரி சேமிப்புடன் காப்பீடு.. மாத சம்பளக்காரர்களுக்குப் பெஸ்ட் சாய்ஸ்..!

யூலிப் திட்டங்களில் என்ன சாதகம் உள்ளது?

1. 80 சி பிரிவின்படி வரிச் சலுகை

யுலிப் மூலமான வரி சேமிப்புத் திட்டமானது அருமையான யோசனையா3கும். வழக்கமான பிபிஎப் உள்ளிட்ட வரிச் சலுகைத் திட்டங்களை விட இது அருமையானது. நமக்கு பெரிய அளவிலான சலுகைகளைத் தரக் கூடியதுமாகும்.

இதில் நாம் ஒரு வருடத்தில் செலுத்தும் பிரமீயம் தொகையைப் போல 10 மடங்கு தொகைக்கு இன்சூரன்ஸ் கிடைக்கிறது. அதாவது வருடத்திற்கு நாம் ரூ.50,000 முதலீடு செய்கிறோம் என்றால், உங்களுக்கு ஏதாவது நேரிடுகிறது என்றால், உங்களது நாமினிக்கு உடனடியாக ரூ. 5 லட்சம் கிடைக்கும்.

மேலும் நாம் செய்த முதலீட்டுத் தொகையும் திட்டம் முடியும் வரை தொடரும். மேலும் இந்தத் திட்டத்தின் மூலம் நமக்குக் கிடைக்கும் தொகைக்கு வரியும் கிடையாது.

வருமான வரிச் சட்டம் 10 (10டி) பிரிவின்படி மெச்சூரிட்டி மூலம் கிடைக்கும் தொகைக்கு வரி கிடையாது. அதேசமயம் ஒரு வருடத்தில் நாம் செலுத்தும் பிரீமியம் தொகையானது, அடிப்படைத் தொகையில் 10 சதவீதத்தைத் தாண்டக் கூடாது.

2. 2வது சலுகையானது, நமக்கு யுலிப் திட்டம் மூலம் கிடைக்கும் தொகைக்கு வரி கிடையாது. பிபிஎப்பில் மட்டுமே இப்போதைக்கு நமக்கு வரி இல்லாத வருமானம் கிடைக்கும். மற்ற வரி சேமிப்புத் திட்டங்களுக்கு (வங்கி முதலீடுகள், என்எஸ்சி உள்ளிட்டவை) வரி உண்டு என்பது முக்கியமானது.

3. அதிக வருவாய்

யுலிப் திட்டங்களில் இவ்வளவுதான் என்று வருமானம் கிடையாது. மாறாக நமக்கு ரிட்டர்னும் கிடைக்கலாம். உங்களது முதலீட்டு தெரிவைப் பொறுத்து அது அமையும். ஈக்விட்டி சந்தையில் நீங்கள் நிதி முதலீடு செய்வதாக இருந்தால் ரிட்டர்ன் அதிகமாக இருக்கும் அல்லது குறையலாம். அது பங்குச் சந்தை நிலவரத்தைப் பொறுத்தது.

4. லிக்டிட்டி

லிக்டிட்டி என்று பார்த்தால் பிபிஎப்பை விட ஒரு படி மேலே நிற்கிறது யுலிப் திட்டங்கள். 5 வருடம் கழித்து உங்களது தொகையை நீங்கள் திரும்பப் பெற முடியும். ஆனால் பிபிஎப்பில் 7 வருடம் முடிந்த பிறகுதான் நமது தொகையில் பாதியைப் பெற முடியும். முழுத் தொகையையும் பெற நீங்கள் 15 வருடம் காத்திருக்க வேண்டும்.

மொத்தத்தில்...

மொத்தத்தில் 80 சி பிரிவின் கீழ் நமக்கு ஆதாயம் திட்டம் எது என்பதை நாம் முதலில் தேர்வு செய்ய வேண்டும். யுலிப் திட்டங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் குறைவாக இருக்கலாம். அதேசமயம், இதில் நமக்கு சாதகமான காப்பீட்டு அம்சம் உள்ளதை மறக்கக் கூடாது. பங்குச் சந்தையுடன் இணைந்த முதலீட்டை நீங்கள் செய்தால் உங்களுக்கு அவை நல்ல வருமானத்தையும் கூட கொடுக்கக் கூடும்.

வரி சேமிப்பு மட்டுமல்லாமல் அருமையான காப்பீடு, 5 வருடங்களில் பணத்தைத் திரும்பப் பெறும் வசதி உள்ளிட்ட சவுகரியங்களும் இதில் உள்ளன.

அப்படி நீங்கள் யுலிப் திட்டத்தை தேர்வு செய்ய முடிவு செய்யும்போது உங்கள் முன்பு காத்திருக்கும் அருமையான திட்டம்தான் எச்டிஎப்சி லைப் நிறுவனத்தின்
Click2Invest-ULIPs தி்ட்டங்கள் உங்களைக் கவரும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Why HDFC Life "Click2Invest-ULIPs” Makes Tax Savings Sense?

It's the time of the year, when individuals are deciding on various tax planning instruments. Among the many instruments, that provide you tax benefits is the Unit Linked Insurance Plans (ULIP). What are the advantages of a ULIP? Pl check out.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?